Published:Updated:

பெட்ரோல், டீசல் விலை... இப்படியா அழிச்சாட்டியம் பண்றது? - 'மான் கி பாத்' மோடிக்கு கடிதம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பிரதமர் மோடிக்கு கோவணாண்டி கடிதம்
பிரதமர் மோடிக்கு கோவணாண்டி கடிதம்

சர்வதேசச் சந்தையில ஒரு பைசா கூடினா, இங்கே ஒன்பது ரூபாய் கூடுது. அங்கே ஒன்பது ரூபாய் விலை இறங்கினா இங்கே ஒரு பைசா இறங்குது

மாதம் தவறாமல் மனதோடு ராகம்... அதானுங்க 'மான் கி பாத்' பேசும் மாண்புமிகு பாரதப் பிரதமர் உயர் திரு மோடி ஐயா அவர்களுக்கு...

ரத்தம் சீரா ஓடுனாத்தான் உடம்பு ஆரோக்கியமா இருக்கும். அதுபோல பெட்ரோல், டீசல் விலை சீராக இருந்தால்தான் ஒரு நாட்டோட பொருளாதாரம் சிறப்பா இருக்கும். ஆனா, இங்கே நிலைமை அப்படி இல்லையே...

இன்னைக்கு மக்களுக்குப் பெரிய தலைவலியா இருக்குறது பெட்ரோல், டீசல் விலைதானுங்க. உலகச் சந்தையில கச்சா எண்ணெய் விலை அதளபாதாளத்துல விழுந்து கிடக்குது. 'கச்சா எண்ணெய் விலை ஏகத்துக்கும் கீழ போயிடுச்சு'னு எண்ணெய் உற்பத்தி நாட்டுக்காரங்க கதறுறாங்க. ஆகஸ்ட் 5-ம் தேதி நிலவரப்படி கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 45.72 அமெரிக்க டாலர். ஆனா, நம்ம நாட்டுல வரலாறு காணாத விலை ஏறி மக்கள் கதறுறாங்க. இது ஏட்டிக்குப் போட்டியா இருக்கே மோடிஜி!

பெட்ரோல், டீசல் விலை கூடிக்கிட்டே போறதால மக்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கிறாங்க சாமி. அதுலயும் வருமானமே இல்லாம வயித்துல ஈரத்துணி போட்டுகிட்டுப் படுக்குற கொரோனா காலத்துலகூட ஈவு இரக்கமே இல்லாம பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் வரை ஏத்துனது நியாயமாங்க?

சர்வதேசச் சந்தையில ஒரு பைசா கூடினா, இங்கே ஒன்பது ரூபாய் கூடுது. அங்கே ஒன்பது ரூபாய் விலை இறங்கினா இங்கே ஒரு பைசா இறங்குது. இது என்ன பகல் கொள்ளையா இருக்கே சாமி. கேக்குறதுக்கு ஆள் இல்லைங்குறதுக்காக இப்படியா அழிச்சாட்டியம் பண்றது?

பெட்ரோல், டீசல் விலை... இப்படியா அழிச்சாட்டியம் பண்றது? - 'மான் கி பாத்' மோடிக்கு கடிதம்!

'இன்னைக்கு நிலைமையில பெட்ரோல், டீசல் ஆதார விலை 20 ரூபாய்க்குக் கீழேதான் வரும்'னு வல்லுநர்கள் சொல்றாங்க. கலால் வரி, விற்பனை வரி, மதிப்புக்கூட்டு வரி, மாநில அரசு வரினு வரிஞ்சுகட்டி வரி வசூல் பண்றதால லிட்டர் 70, 80 ரூபாய்க்கு விலையேறிக் கிடக்குது. 2014-ம் வருஷம், மே மாசம் காங்கிரஸ் ஆட்சியில ஒரு லிட்டர் டீசல் விலை 66.02 ரூபாய். அன்னைக்கு எண்ணெய் கம்பெனிங்க அரசுக்குக் கொடுத்த விலை 50.5 ரூபாய். இன்னைக்கு டீசல் விலை 68.22 ரூபாய். ஆனா, எண்ணெய் கம்பெனிங்க அரசுக்குக் கொடுக்குற விலை 18.78 ரூபாய். அன்னிக்கு மத்திய கலால் வரி 4.04 பைசா இருந்துச்சு. இன்னிக்கு 31.83 ரூபாயா ஏறிக்கிடக்கு.

விலை குறைவா கிடைக்குற நேரத்துலகூட 'வரி'ங்கிற பேர்ல கொள்ளை அடிக்குறீங்களே மோடிஜி... இதுதான் நீங்க நாட்டு மக்களுக்குச் செய்யற நன்மையா ஜி?

'பூவில் வண்டு தேன் எடுப்பதுபோல இருக்க வேண்டும் வரிவிதிப்பு'னு சொன்னார் மூதறிஞர் ராஜாஜி. அதைக் கொஞ்சம் நினைச்சுப் பாருங்க. ம்ஹுக்கும்... உங்களை ஏத்திவிட்ட அத்வானிஜியையே தூக்கிக் கடாசிட்டீங்க. ராஜாஜி, காந்திஜி பத்தியெல்லாம் எப்படி நினைப்பீங்க!

ஒரு பட்டியலைச் சொல்லுட்டுமுங்களா மோடிஜி... லாரிக்காரனோட ரத்தக்கண்ணீர்ப் பட்டியல் அது...

- இந்தக் கடிதத்தின் முழு வடிவத்தை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/30EUJ7A > "பாவப்பட்ட லாரிக்காரனோட பரிதாபக் கதையைக் கேளுங்க!" - பிரதமர் மோடிக்கு கோவணாண்டி கடிதம் https://bit.ly/30EUJ7A

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிப்பதுடன், 15 ஆண்டுகால பொக்கிங்களிலும் வலம் வரலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு