Published:Updated:

குழந்தைகளுக்கும் ஹெல்மெட்... மக்கள்நலனுக்கு உகந்ததா, அபராதத்தைத்தான் அதிகரிக்குமா?!

ஹெல்மெட்

குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம்: மோட்டார் வாகனச்சட்டம் விதி 138-ல் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்தத் திருத்தம், வெளியிடப்பட்ட தேதியிலிருந்து ஓராண்டுக்குப் பின், அதாவது சரியாக அடுத்த ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி அமலுக்குவருகிறது.

குழந்தைகளுக்கும் ஹெல்மெட்... மக்கள்நலனுக்கு உகந்ததா, அபராதத்தைத்தான் அதிகரிக்குமா?!

குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம்: மோட்டார் வாகனச்சட்டம் விதி 138-ல் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்தத் திருத்தம், வெளியிடப்பட்ட தேதியிலிருந்து ஓராண்டுக்குப் பின், அதாவது சரியாக அடுத்த ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி அமலுக்குவருகிறது.

Published:Updated:
ஹெல்மெட்

இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்றும், அப்படிக் குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது 40 கி.மீ வேகத்துக்கு மேல் செல்லக் கூடாது என்றும் மத்திய அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. மேலும், இந்த உத்தரவை மீறினால், ரூ.1,000 அபராதம் மற்றும் மூன்று மாத காலம் ஓட்டுநர் உரிமம் ரத்துசெய்யப்படும் எனவும் தெரிவித்திருக்கிறது.

ஹெல்மெட் கட்டாயம் :
ஹெல்மெட் கட்டாயம் :

மத்திய அரசின் சாலைப் போக்குவரத்துத்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளும் கட்டாயம் ஹெல்மெட் அணிவிக்க வேண்டும் என்றும், அந்த ஹெல்மெட் இந்திய தர கட்டுப்பாட்டுஅமைப்பின் பி.ஐ.எஸ் தரத்துடன் இருக்க வேண்டும் எனவும் புதிய விதிமுறை வகுத்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது 40 கி.மீ வேகத்துக்கு மேல் செல்லக் கூடாது என்றும், வாகன ஓட்டியுடன் குழந்தையை இணைக்கும் வகையில் பெல்ட் ஒன்றையும் சேர்த்து அணிவிக்க வேண்டும் எனவும் புதிய விதிமுறையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அந்த பெல்ட் எடை குறைவாகவும், நீளத்தை அதிகரித்தும் குறைத்தும் பயன்படுத்த ஏதுவாகவும், அதேசமயம் மிகுந்த தரத்துடன் வலுவாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

போலீஸாரின் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
போலீஸாரின் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

மோட்டார் வாகனச்சட்டம் விதி 138-ல் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்தத் திருத்தம், வெளியிடப்பட்ட தேதியிலிருந்து ஓராண்டுக்குப் பின், அதாவது சரியாக அடுத்த ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி அமலுக்குவருகிறது. இந்த விதிகளை மீறினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுவதோடு, மூன்று மாத காலம் ஓட்டுநர் உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. புதிய சட்டம் அமலுக்கு வருவதற்குள், குழந்தைகளுக்கான பிரத்யேக ஹெல்மெட்டுகளை விரைந்து உற்பத்தி செய்யும்படியும், ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது.

குழந்தைகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம்
குழந்தைகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம்

இந்த நிலையில், குழந்தைகள் பாதுகாப்புக்காக மத்திய அரசு அறிவித்திருக்கும் இந்தச் சட்டத் திருத்தத்தால் என்ன மாதிரியான தாக்கம் ஏற்படும், அதிலுள்ள சாதக பாதகங்கள் என்னென்ன, குழந்தைகளுக்கு ஹெல்மெட் அணிவிப்பது சாத்தியமா அல்லது சவாலாக இருக்குமா என்பது போன்ற கேள்விகளுடன் இவர்களைத் தொடர்புகொண்டோம்.

குழந்தைகள் உரிமைச் செயற்பாட்டாளர் தேவநேயன்:

``குழந்தைகள் பாதுகாப்பில் அக்கறைகொண்டு மத்திய அரசு வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பு பாராட்டக் கூடியதுதான். அதேசமயம், பயணத்தின்போது ஹெல்மெட் மட்டுமே மக்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்துவிடாது. முதலில் நம்நாட்டில் சாலைகள் சரியாக இருக்க வேண்டும். குண்டும் குழியுமாக, பராமரிப்பின்றி கிடக்கும் சாலைகளால்தான் பெருமளவிலான விபத்துகளே இங்கு நிகழ்கின்றன. சாலைகள் சரிசெய்யப்பட்டாலே இங்கு ஏற்படும் பாதிக்கும் மேலான விபத்துகள் தவிர்க்கப்பட்டுவிடும்.

குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர் தேவநேயன்
குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர் தேவநேயன்

இரண்டாவதாக, மக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஊட்டக்கூடிய வகையில் பொதுப்போக்குவரத்தின் கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும். பாதுகாப்பான பயணத்துக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், சிற்றுந்துகள் போன்ற பொதுப்போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும். அப்படிச் செய்தாலே, பெரும்பாலான மக்கள் ஆபத்தான முறையில் குழந்தைகளுடன் நீண்டதூரம் இருசக்கர வாகனங்களில் பயணிப்பதைத் தவிர்த்துவிட்டு, பொதுப்போக்குவரத்தைத் தேர்வுசெய்வார்கள், பயன்படுத்தத் தொடங்குவார்கள்.

தேவநேயன் குழந்தைகள் உரிமைச் செயற்பாட்டாளர்
தேவநேயன் குழந்தைகள் உரிமைச் செயற்பாட்டாளர்
விகடன்

மூன்றாவது மிக முக்கியமாக, அரசாங்கம் இதை வெறும் உத்தரவாக மட்டும் பிறப்பித்திருக்கிறது. குழந்தைகளுக்கான ஹெல்மெட் தயாரிக்கச் சொல்லி நிறுவனங்களிடம் மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கிறது. உண்மையில் குழந்தைகள் மீதான அக்கறையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த விரும்பினால், குழந்தைகள் நல மருத்துவர்கள், நிபுணர்களிடம் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களிடம் கருத்து கேட்டு, ஒரு முன்னோட்ட சோதனை முயற்சி மேற்கொண்டு அதிலுள்ள சவால்கள், சிக்கல்களைக் கண்டறிந்து சரிசெய்ய வேண்டும். அதைவிடுத்து ஹெல்மெட் நிறுவனங்களுடன் ஆலோசனை செய்தால், அது குழந்தைகளின் நலனுக்காக அல்லாமல் நிறுவனங்களின் லாபத்துக்கான திட்டமாக மாறிவிடும்" என்றார்.

சமூக ஆர்வலர், `கடைசிசோறு' பிரகாஷ்:

``சாதாரணமாக ஹெல்மெட் அணிந்துகொண்டு இருசக்கர வாகனம் ஓட்டும்போதே, பின்னால் வருபவர்கள், அருகில் வருபவர்களைப் பார்த்து சுதாரிப்பது சிரமாக இருக்கிறது. ஏற்கெனவே, வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சொன்னபோது அதுவும் நடைமுறை சாத்தியமற்ற ஒன்றாகவே மாறிவிட்டது. இந்த நிலையில், அவர்களுடன் பயணிக்கும் ஒன்பது மாத குழந்தைகள் முதல் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சொல்வது முட்டாள்தனமானது.

`கடைசிசோறு' பிரகாஷ்
`கடைசிசோறு' பிரகாஷ்

கழுத்துகூட ஒழுங்காக நிற்காத குழந்தைகள் அந்த ஹெல்மெட் எடையை எப்படித் தாங்கும்? குழந்தைகளின் தலைகள் மிகவும் இலகுவான தன்மையுடன், மென்மையானதாக இருக்கும். அதில் எந்தவிதமான ஹெல்மெட் மாட்டினாலும், அது சிரமத்தையும் பயத்தையும்தான் ஏற்படுத்தும். ஹெல்மெட் அணியும் பெரியவர்களே தலைசார்ந்த பல பிரச்னைகளை எதிர்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளுக்கு அது பாதுகாப்பாக இருக்குமா என்பது சந்தேகமே! அதுவும் மக்கள் பின்பற்றுவார்களா என்பதும் கேள்விக்குறியே! எப்படிப் பார்த்தாலும், இந்த சட்டத் திருத்தம் குழந்தைகளுக்குப் பயனளிக்குமோ இல்லையோ, அதைவைத்து ஹெல்மெட் நிறுவனங்களும், அரசின் போக்குவரத்து காவல்துறையும் நன்றாகவே வருமானம் பார்க்கும் என்பது மட்டும் உறுதி" என்றார்.

குழந்தைகளுக்கு ஹெல்மெட் அணிவிப்பதனால் ஏதேனும் பாதிப்புகள் எற்படுமா என குழந்தைகள் நல மருத்துவர்களிடம் பேசினோம்.

``பொதுவாக 2 வயது வரைக்கும் குழந்தைகளுக்கான மூளை வளர்ச்சி (Brain Growth) விகிதம் என்பது 80% அதிகமானதாக இருக்கும். அந்த முதல் இரண்டு ஆண்டுகள் மிக முக்கியமாக குழந்தைகளின் தலையை பார்த்துக்கொள்ள வேண்டும். தலையில் பாரம் கொடுக்கக் கூடாது. 9 மாத குழந்தைகளுக்கு ஹெல்மெட் என்பது நல்ல திட்டம் என்றாலும், குழந்தைகளுக்கு அணிவிக்கக்கூடிய ஹெல்மெட்கள் தயாரிப்பு முறையில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். அதிக எடை இல்லாத, அதேசமயம் பாதுகாப்பானதாகவும் வடிவமைக்க வேண்டும். அதற்கான வழிமுறைகள், கையேடுகளை அரசாங்கம் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தவேண்டும்! நடைமுறைக்கு வரும்போதுதான் சிக்கல், பாதிப்புகள் என்ன என்பதுபற்றி தெரிய வரும். எப்படி இருந்தாலும் இது வரவேற்கக்கூடிய திட்டம்தான்" என்றார் அரசு குழந்தைகள் நல மருத்துவர் ஒருவர்.

குழந்தைகள் நல மருத்துவர் கண்ணன்
குழந்தைகள் நல மருத்துவர் கண்ணன்

அதேபோல, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் கண்ணனிடம் பேசியபோது, ``சாலை விபத்துகளில் பெரியவர்களைவிட குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நிச்சயம் அவர்களுக்கு ஹெல்மெட் அணிவிப்பது அவசியம். தினமும் தொடர்ந்து, பலமணி நேரம் தலையில் ஹெல்மெட் அணிந்திருந்தால் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் பெரும்பாலும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு தொலைதூரம் யாரும் பயணிப்பதில்லை; எப்போதாவது வெளியில் செல்லும்போதுதான் அணிவிக்க வேண்டிய தேவை ஏற்படும். எனவே, இதனால் பாதிப்புகள் என்பது இருக்காது; குழந்தைகளுக்கு ஹெல்மெட் பாதுகாப்பானதுதான்!" என்றார்.