Published:Updated:

'மருத்துவத் துறைக்குத் தகுதியானவர்களை இப்படித்தான் தேர்ந்தெடுப்பதா?'

கடும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் தேர்வு முறை, வணிகமயமாகும் பயிற்சி, தோல்விகளால் தற்கொலை, ஆள்மாறாட்டம் என விளைவுகள் நீண்டுகொண்டே போகின்றன.

neet
neet

'நீட் தேர்வு வந்துவிட்டால், யாருமே ஏமாற்ற முடியாது' என்றார்கள். 'சரியான ஆட்களுக்கு மட்டுமே இனி மருத்துவ இடம்' என்றார்கள். நீட் தேர்வு மையங்களில் அரசு காட்டிய கெடுபிடிகளும்கூட அப்படித்தான் இருந்தன. 'தேர்வு எழுத, முழுக்கை ஆடை அணிந்து வரக் கூடாது; தலையைப் பின்னிக்கொண்டு வரக் கூடாது; கைகால், கழுத்து களில் அணிகலன்கள் கூடாது. உள்ளாடை வரை பரிசோதனை' என தேர்வு எழுதச் சென்ற மாணவர்களுக்கு மனஉளைச்சலை உண்டாக்கி, எப்படியெல்லாம் நடத்தினார்கள்... சட்டைகள் கிழிக்கப்பட்டு, தலைமுடி கலைக்கப்பட்டு, அலங்கோலமாக தேர்வு எழுதச் சென்ற மாணவர்களின் நிலையை எல்லாம் மறக்க முடியுமா? விரிவாக படிக்க க்ளிக் செய்க.. http://bit.ly/2LT0t6d

இவ்வளவு கெடுபிடிகள் காட்டிய நீட் தேர்வில்தான், ஏராளமான தகிடுதத்தங்கள் நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது. நீட் தேர்வில் நிகழ்ந்த ஆள்மாறாட்டம் குறித்து விளக்கம் அளித்துள்ள சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ''மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவதுதான் தமிழக அரசின் கடமையே தவிர, ஆள்மாறாட்டத்துக்கு எந்த வகையிலும் அரசு பொறுப்பேற்க முடியாது. தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும்'' என்று புகார்களை சாமர்த்தியமாக மத்திய அரசின் பக்கம் திருப்பிவிடுகிறார். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனும் விஜயபாஸ்கர் சொன்னதையே வார்த்தை மாறாமல் காப்பி பேஸ்ட் செய்கிறார்.

எந்த மாதிரியான கேள்விகள் நீட் தேர்வில் இடம்பெறும், அதற்கு எப்படி பதிலளித்தால் தகுதி பெறலாம் என்பதுதான் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறதே தவிர, பாடங்கள் குறித்த தெளிவுள்ளவர்கள் தேர்ச்சி பெறும்படி இந்தத் தேர்வுகள் நடத்தப்படுவதில்லை
பிரின்ஸ் கஜேந்திரபாபு

தமிழக அரசுடன் இணைந்து பயிற்சி அளித்த 'ஸ்பீடு' கோச்சிங் நிறுவனத் தரப்போ, ''சென்ற ஆண்டுக்கான நீட் தேர்வுப் பயிற்சியை, தமிழக அரசே ஒருங்கிணைத்து வழங்கியது. கோச்சிங் வழங்கியதற்கான செலவுகளை அரசு தர மறுத்தத்தால், நாங்கள் பயிற்சியிலிருந்து பின்வாங்கிவிட்டோம்'' என்றார்கள்.

கடந்த ஆண்டு அரசே பயிற்சி அளித்த 19,355 மாணவர்களில், ஒருவருக்குக்கூட மருத்துவச் சீட்டு கிடைக்கவில்லை. மருத்துவச் சீட்டுகளுக்காக ஒருபுறம் ஆள்மாறாட்டம், பித்தலாட்டங்கள் என்றால், மறுபுறம் கடும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் தேர்வு முறை, வணிகமயமாகும் பயிற்சி, தோல்விகளால் தற்கொலை, ஆள்மாறாட்டம் என விளைவுகள் நீண்டுகொண்டே போகின்றன.

நீட் தேர்வின் அடிப்படைச் சிக்கல்களுக்கு எதிராக தொடர்ந்து குரல்கொடுத்துவரும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசியபோது, ''மருத்துவக் கல்வியும் சுகாதாரத் துறையும் ஒன்றோடு ஒன்று பிணைந்ததாகவும், ஒவ்வொரு மாநில அரசின் சுகாதாரக் கொள்கையுடன் தொடர்புடையதாகவும் இருந்தது. இதன் அடிப்படையில்தான் மாநிலவாரியான மருத்துவக் கல்வியும் இருந்தது. இதன் நீட்சியாக, குக்கிராமங்களிலும் மருத்துவர்களுக்கான தேவைகளை நிறைவேற்ற முடிந்தது. இதுதானே மருத்துவருக்கான தகுதி. இப்படித்தானே எதிர்கால மருத்துவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும்.

neet
neet

நீட் தேர்வைப் பொறுத்தவரை, அதிகபட்ச தேர்ச்சி மதிப்பெண் 720 என இருந்தாலும், குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வருடாவருடம் மாறிக்கொண்டே இருக்கிறது. நீட் தேர்வுக்கான பயிற்சியில் என்ன நடக்கிறது தெரியுமா? இயற்பியல் பாடத்தைப் பெயரளவுக்குப் படித்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, முழுக்க வேதியியலையும் உயிரியலையும் படிக்கவே வற்புறுத்துகிறார்கள். நெகட்டிவ் மதிப்பெண் இருப்பதால், தெரியாத கேள்விகளுக்கு பதில் அளிக்கக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. எந்த மாதிரியான கேள்விகள் நீட் தேர்வில் இடம்பெறும், அதற்கு எப்படி பதிலளித்தால் தகுதி பெறலாம் என்பதுதான் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறதே தவிர, பாடங்கள் குறித்த தெளிவுள்ளவர்கள் தேர்ச்சி பெறும்படி இந்தத் தேர்வுகள் நடத்தப்படுவதில்லை. மருத்துவத் துறைக்குத் தகுதியானவர்களை இப்படித்தான் தேர்ந்தெடுப்பதா?" என்று கேள்வி எழுப்புகிறார்.

- சரி, மருத்துவ மாணவர்கள் தேர்வுக்கான கமிட்டி என்ன சொல்கிறது? 'நீட்' எனும் அவிழ்க்க முடியாத ஒரு முடிச்சியில் சிக்கிக்கொள்ளும் மாணவர்களின் எதிர்காலத்துக்கு பதில் என்ன? - விரிவான ஜூனியர் விகடன் அலசல் கட்டுரைக்கு > "நீட் தேர்வு விலக்கு ஒன்றே பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு!" - கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு திட்டவட்டம் https://www.vikatan.com/social-affairs/education/prince-gajendra-babu-talks-about-neet-exam-exemption

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் சிறப்புக் கட்டுரைகள்! > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2mjxazv |