Published:Updated:

இந்து பல்கலை.யில் இருந்து பிரோஸ் கானை நீக்க முடியாது... ஏன்?

பல்கலைக்கழகம்
பல்கலைக்கழகம்

அந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கூறிய தகவலின்படி சம்ஸ்கிருத உதவிப் பேராசியர் பதவிக்கு மனு செய்தவர்களின் மனுக்களைப் பரிசீலித்ததில் பத்து பேரின் மனுக்கள் மட்டுமே தகுதி வாய்ந்தவையாகக் கருதப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப் பட்டனர்.

காசி இந்து பல்கலைக்கழகத்தின் சம்ஸ்கிருத மொழித்துறையில் முனைவர் பிரோஸ் கான் என்ற இஸ்லாமியரை உதவிப் பேராசிரியராக நியமித்ததை எதிர்த்து சில மாணவர்களும் உள்ளூர் இயக்கங்களும் போராட்டத்தில் ஈடுபடுவது தலைப்புச் செய்தியாகியுள்ளது. இந்து பல்கலைக்கழகத்தில், அதிலும் அதன் சம்ஸ்கிருத மொழித்துறையில் இஸ்லாமியரை நியமித்தது தவறு என்று கூறுவது சரியா? விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2KLcKZJ

இந்து பல்கலை.யில் இருந்து பிரோஸ் கானை நீக்க முடியாது... ஏன்?

இந்து பல்கலைக்கழகச் சட்டத்தின் 4-வது பிரிவில் 'இந்து பல்கலைக்கழகத்தில் சமய வேறுபாடின்றி அனைவரும் கல்வி கற்கலாம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் கொண்டுவந்த திருத்தமான பிரிவு 4A-ன்படி 'இந்து சமயம் மட்டுமன்றி கிறித்துவம், இஸ்லாம், ஜொராஸ்ட்ரியம், சமணம், சீக்கியம் மற்றும் புத்த சமயங்கள் பற்றி ஆராய்வதற்கு முயற்சி செய்யப் படும்' என்றும் கூறப்பட்டுள்ளது. பல்கலைக் கழகத்தை நிர்வகிக்கும் செயற்குழு மற்றும் இதர அமைப்புகள் எதிலும், 'இந்துக்களுக்கு முன்னுரிமை உண்டு' என்று கூறப்படவில்லை. அதேபோல, 'சம்ஸ்கிருதத் துறை உட்பட எந்தத் துறையிலும் வேலைவாய்ப்பில் இந்துக்கள் மட்டுமே நியமிக்கப்படுவர்' என்று விதிக்கப்படவில்லை.

காசி இந்துப் பல்கலைக்கழகத்தின் சம்ஸ்கிருதத் துறைக்கு உதவிப் பேராசிரியராக நியமிக்கப்பட்ட முனைவர் பிரோஸ் கானுக்கு எதிராக நடத்தப்படும் எதிர்ப்புக் குரல்கள் ஒடுக்கப்பட வேண்டும்.

நூற்றாண்டை நெருங்கிய காசி இந்து பல்கலைக்கழகத்தில் இதுவரை அந்தப் பல்கலைக் கழகம் இந்து சமயத்தவருக்கு மட்டுமே சொந்தம் என்கிற கோரிக்கை எப்போதுமே எழுப்பப்பட்டதில்லை. மேலும், மத்திய சட்டத்தின்கீழ் இயற்றப்பட்ட அந்தப் பல்கலைக்கழகத்துக்கு அரசமைப்பு சட்டத்தின் அனைத்து பிரிவுகளும் பொருந்தும். பிரிவு 14-ல் வேறுபாடின்றி அனைவருக்கும் சம உரிமை, சம வாய்ப்புகள் என்று கூறப்பட்டிருப்பதுடன், பிரிவு 16(2)-ல் பொதுப் பணிகளில் சமயம், இனம், சாதி, பாலினம், வம்சாவளி, பிறந்த இடம் (அ) வசிக்கும் இடம் ஆகிய காரணங்களுக்காக எவ்வித வேறுபாட்டையும் காட்ட முடியாது என்பது அடிப்படை உரிமையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

இதன்படி பிரோஸ் கான் காசி இந்து பல்கலைக் கழகத்தில் சம்ஸ்கிருத உதவிப் பேராசிரியராக நியமிக்கப்பட்டதற்கு சட்டப்படி தடை ஏதுமில்லை. அந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கூறிய தகவலின்படி சம்ஸ்கிருத உதவிப் பேராசியர் பதவிக்கு மனு செய்தவர்களின் மனுக்களைப் பரிசீலித்ததில் பத்து பேரின் மனுக்கள் மட்டுமே தகுதி வாய்ந்தவையாகக் கருதப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப் பட்டனர். அதில் ஒன்பது பேர் இரண்டு மதிப்பெண்கள் மட்டுமே பெற்றனர். பிரோஸ் கான் மட்டுமே பத்துக்கு பத்து மதிப்பெண் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரோஸ் கானின் தந்தை ரம்ஜான் கான் ராஜஸ்தானில் கோசாலை ஒன்றில் பணியாற்றுகிறார். அவரும் சம்ஸ்கிருதப் பண்டிதரே. அதேபோல் அவரின் பாட்டனார் இந்துக்கள் கூட்டத்தில் பஜனைப் பாடல்கள் பாடுபவர்.

எனவே, பல்கலைக்கழகம் ஒன்றில் அரசமைப்பு சட்டத்தின் விதிகளின்கீழ் செயல்பட்டு வரும் அதனது நிர்வாகக்குழு, இஸ்லாமியர் ஒருவரை சம்ஸ்கிருதத் துறையில் நியமனம் செய்ததை எதிர்த்து போராட்டம் நடத்துவது சட்டவிரோத மானது மட்டுமின்றி, பொதுப்பணிகளுக்கான தேர்வில் அப்பட்டமான சமய குரோதங்களைக் கொண்டுவருவது விஷமத்தனமானது; கண்டிக்கப்பட வேண்டியது.

இந்து பல்கலை.யில் இருந்து பிரோஸ் கானை நீக்க முடியாது... ஏன்?

காசி இந்துப் பல்கலைக்கழகத்தின் சம்ஸ்கிருதத் துறைக்கு உதவிப் பேராசிரியராக நியமிக்கப்பட்ட முனைவர் பிரோஸ் கானுக்கு எதிராக நடத்தப்படும் எதிர்ப்புக் குரல்கள் ஒடுக்கப்பட வேண்டும். பொதுப்பணிகளில் சமயம் சார்ந்த வேறுபாடுகள் அரசமைப்பு சட்டத்தால் தடைசெய்யப் பட்டுள்ளதை ஒவ்வொருவரும் ஏற்றுக்கொள்வதுடன், இந்தியா ஒரு மதசார்பற்றக் குடியரசு என்ற குரலை ஓங்கி ஒலிக்க வேண்டும். அதுவே இந்திய அரசியலமைப்பு நாளான நவம்பர் 26-ம் தேதிக்கு நாம் செய்யும் மரியாதையாகும்!

இந்து பல்கலை.யில் இருந்து பிரோஸ் கானை நீக்க முடியாது... ஏன்?

- சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.சந்துரு, ஜூனியர் விகடன் இதழில் எழுதிய சிறப்புக் கட்டுரையில் ஒரு பகுதி இது. காசி இந்து பல்கலைக்கழகம் உருவானதன் பின்னணி, இஸ்லாமிய பல்கலை. உருவானதன் பின்னணி ஆகியவற்றுடன், பேராசிரியர்

பிரோஸ் கான் சர்ச்சை போலவே தமிழகத்தில் நடந்த சம்பவத்தை முழுமையாக அறிய > இந்துக்களுக்கு மட்டுமே இந்தியாவா? - இந்து பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியரை நீக்க முடியாது! - பல்கலைக்கழகங்கள் பொதுவானவை! https://www.vikatan.com/social-affairs/politics/india-is-not-only-hindu-justice-k-chandru

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

அடுத்த கட்டுரைக்கு