பழிக்குப்பழி: தமிழக மீனவர்களை ஐஸ்கட்டிகள் மீது நிற்கவைத்து சித்ரவதை!


ராமேஸ்வரம்: சிங்களவர்கள் மீது ந்டத்தப்பட்ட தாக்குதலுக்கு பழிக்குப்பழியாக ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதோடு,ஐஸ்கட்டிகள் மீது நிற்கவைத்து சித்ரவதையும் செய்துள்ளனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 540 விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தபோது 5-க்கும் மேற்பட்ட ரோந்து படகுகளில் இலங்கை கடற்படையினர் வந்தனர். அவர்கள் ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்கவிடாமல் விரட்டியடித்தனர்.
மேலும் 20-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளை அறுத்து வீசினார்கள். அப்போது தங்கச்சிமடத்தை சேர்ந்த சின்னராயப்பன் என்பவருக்கு சொந்தமான படகில் இலங்கை கடற்படையினர் ஏறினர்.
அந்த படகில் இருந்த மீனவர்கள் 5 பேரையும் கயிற்றால் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் ஐஸ்கட்டி மீது அவர்களை பல மணி நேரம் நிற்கவைத்து சித்ரவை செய்தார்களாம்.இதேபோல் அருகில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த மற்றொரு படகில் ஏறி அங்கிருந்த மீனவர்களையும் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
##~~## |