Published:Updated:

பெண்களின் சிந்தனையை வலுவாக்கும் ஜனநாயக மாதர் சங்கம்!

பெண்களின் சிந்தனையை வலுவாக்கும் ஜனநாயக மாதர் சங்கம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!


     

தமிழத்தில் கடந்த சில வருடங்களாக நடைபெறுகின்ற சமூகஅநீதிகளுக்கு எதிராக எந்த சமரசமும் இல்லாமல் அனைத்திய ஜனநாயக மாதர் சங்கம் போராட்டக் களங்களில் பங்கேற்கிறது. ஒரு முழுமையான அரசியல்,சமுக இயக்கமாக ஜனாநயக மாதர் சங்கம் செயலாற்றி வருகிறது. நடுத்தர வர்க்கத்துக்கு மேலேயுள்ள பெண்கள் இண்டர்நேஷனல் மகளிர் அமைப்புகளிலும், நடுத்தரத்துக்கு கீழேயுள்ள பெண்கள் சுயஉதவிக்குழுக்கள் அல்லது ஆன்மீக குழுக்களில் செயல்பட்டுவரும் நிலையை மாற்றி, அனைத்துத் தரப்பு பெண்களையும் பொதுப்பிரச்னைகளுக்குப் போராட வீதிக்கு வர வைக்கும் வகையில் அனைத்திந்திய ஜனநாயக  செயல்பட்டு வருகின்றனர். 
நாட்டின் எந்த மூலையில் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்பட்டது குறித்த செய்தி வந்தாலும், அந்த சம்பவத்தைக் கண்டித்து போராட வருவது மாதர் சங்கத்தினர்தான். சமீபகாலமாக தமிழகம் முழுவதும் மதுவுக்கு எதிராக டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி ஆக்ரோ ஷமான போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இவர்களைப் பார்த்துத்தான் வீட்டுக்குள் முடங்கி கிடந்த பெண்கள் எல்லோரும் வீதிக்கு வந்து மதுக்கடைகளுக்கு எதிராக போராடத் தொடங்கினார்கள். தீண்டாமைக் கொடுமைகள், சாதி, மதத்தின் பேரால் நடைபெறும் ஆணவக்கொலைகளுக்கு எதிராகவும், பெண்கள் மீதான வன்முறை, கலை, கல்வி, பண்பாட்டு விஷயங்களில் மத்திய மாநில அரசால் திணிக்கப்படும் பிற்போக்கான கொள்கைகளுக்கு எதிராகவும்  கருத்தியல் ரீதியான எதிர்ப்புகளைத் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்கள்.

அரசுக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொண்டு காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டும், இழிவான வசவுகளுக்கு ஆளானபோதும், அதே காவல்துறையில் உயர் அதிகாரியால் பாலியல் சீண்டலுக்கு ஆளான பெண் காவலருக்கு ஆதரவாக களத்தில் இறங்கிப் போராடி அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வைத்ததும் மாதர் சங்கத்தினர்தான்.

சிதம்பரம் பத்மினி வழக்காகட்டும், உத்தப்புரம் தீண்டாமைச்சுவர் அகற்றும் போராட்டமாகட்டும், சமீபத்தில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பொதும்பு பள்ளி தலைமையாசிரியருக்கு 55 ஆண்டுகள் சிறை தண்டனை வாங்கிக் கொடுத்த வழகை நடத்தியதாகட்டும் அனைத்திலும் ஜனநாயக மாதர் சங்கத்தினரின் பங்கு முக்கியமானது. இதற்காக அவர்கள் சந்திக்கும் இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல. இன்றும் பல ஊர்களில், பெண்கள் யாரவது பாதிப்புக்குள்ளாகிவிட்டால், 'உடனே மாதர் சங்கத்தினரிடம் சொல்லுங்கள்' என்று ஊர்க்காரர்கள் சொல்லுமளவுக்கு நம்பிக்கையை விதைத்துள்ளார்கள். பிரபல அரசியல் கட்சிகள் கூட்டத்துக்கு சென்றால் இருநூறு ரூபாயோடு வரலாம். ஜனநாயக மாதர் சங்க கூட்டத்துக்கு சென்றால் அரசியலோடு வரலாம் என்கிற மாற்றத்தை பெண்கள் மத்தியில் உருவாக்கியுள்ளார்கள்.

தற்போது தமிழகத்தில் தனிஇடத்தைப் பிடித்து, அரசியல் கட்சிகளுக்கு இணையாக சமூக விடுதலை போராட்டங்களை நடத்தி வரும் அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 15 வது மாநிலமாநாடு சமீபத்தில் தர்மபுரியில் நடந்தது. வரும் காலங்களில் தமிழகத்தில் செயல்படுத்தவுள்ள பல வேலை திட்டங்களைப்பற்றி ஆலோசித்துள்ளனர். உணவு, வேலை எங்கள் உரிமை, என்ற முழக்கத்துடன் வரும் அக்டோபர் 30-ம் தேதி  மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்கள் முன்பாக முற்றுகைப்போராட்டம் நடத்த  மாநாட்டில் தீர்மானித்துள்ளனர்.
மாநாட்டு நிறைவில் ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டுவரும் வாலண்டினா தலைவராகவும்,  சுகந்தி பொதுச்செயலாளராகவும், மல்லிகா பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். உ.வாசுகி, பாலபாரதி, பொன்னுத்தாய் போன்ற மூத்த நிர்வாகிகள்  துணைத்தலைவர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சாதி, மத, இனப்பாகுபாடு, பாலினபாகுபாட்டுக்கு எதிராகவும் அனைத்திந்திய ஜனாநயக மாதர் சங்கம் தொடர்ந்து இயங்குவதன் மூலம், நாட்டில் சமமற்ற சமூக, பொருளாதார தளத்தில் மாற்றத்தை உண்டாக்கும் என்று நம்பலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு