Published:Updated:

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு!
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு!
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு!

நாகப்பட்டினம்: கோடியக்கரை அருகே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர்  துப்பாக்கி சூடு நடத்தி விரட்டியடித்துள்ளனர்.
 
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று கோடியக்கரை அருகே மீன்பிடித்துக்  கொண்டிருந்தனர். அப்போது அங்கு  வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின்  படகுகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
 

##~~##
இதனால் மீனவர்கள் பீதியடைந்து படகுகளை திருப்பினர். இருப்பினும் படகுகளை சுற்றி  வளைத்த இலங்கை கடற்படை வீரர்கள், மீனவர்களை அடித்து சித்ரவதை செய்துள்ளனர்.  மேலும் அவர்களின் வலைகளையும் அறுத்து கடலில் வீசியுள்ளனர்.
 
இதையடுத்து அவர்கள் பாதியிலேயே கரை திரும்பினர்.