Published:Updated:

இலங்கை தமிழர் பிரச்னைக்கு பொதுவாக்கெடுப்பு வரவேற்கத்தக்கது: கி.வீரமணி

இலங்கை தமிழர் பிரச்னைக்கு பொதுவாக்கெடுப்பு வரவேற்கத்தக்கது: கி.வீரமணி
இலங்கை தமிழர் பிரச்னைக்கு பொதுவாக்கெடுப்பு வரவேற்கத்தக்கது: கி.வீரமணி
இலங்கை தமிழர் பிரச்னைக்கு பொதுவாக்கெடுப்பு வரவேற்கத்தக்கது: கி.வீரமணி

சென்னை: இலங்கை தமிழர் பிரச்னைக்கு பொதுவாக்கெடுப்பு நடத்துவது  வரவேற்கத்தக்கது என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"சென்னையில் நடைபெற்ற டெசோ  ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாட்டின் தீர்மானங்களை ஐ.நா. மன்றத்தின்  செயல்பாட்டிற்காக, அதன் துணைப் பொதுச்செயலாளர் யான் லியாசனிடம் திமுக  பொருளாளர் மு.க. ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு  ஆகியோர் வழங்கினார்கள்.

அப்போது முள்வேலிக்குள்ளும்,ராணுவ வளையத்துக்குள்ளும் அவதியுற்றுக்கொண்டுள்ள  ஈழத் தமிழர் வாழ்வின் பல வகை அவலங்களைப் போக்க, விடிவு காண வற்புறுத்திவிட்டு  திரும்பியுள்ளனர்.

##~~##
லண்டன் மாநகரில் இங்கிலாந்து நாடாளுமன்றக் கட்டிடத்தில் பிரித்தானியா தமிழர்  பேரவை சார்பில் நடத்தப்பட்ட உலகத் தமிழர் பன்னாட்டுத் தமிழ் மாநாட்டிலும்  மு.க.ஸ்டாலினுடன் திமுக முன்னணியினரும் பங்கேற்றதுடன், இலங்கையின் வடக்கு  மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்களிடையே பொது  வாக்கெடுப்பு நடத்தித் தீர்வு காண வேண்டும் என்ற தலைசிறந்த ஆக்கபூர்வக் கருத்தினை  மாநாட்டில் எடுத்து வைத்து முழங்கிய மு.க. ஸ்டாலின் செயல்பாட்டுக்காகப்  பாராட்டுகிறோம்.
வரவேற்கிறோம். போற்றுபவர், தூற்றுபவர்பற்றிக் கவலைப்படாமல் நம் கடன் பணி  செய்து முடிப்பதே என்று டெசோ தனது பயணத்தை நடத்திடுவதும் காலத்தின்  கட்டாயமாகும்” என்று கூறியுள்ளார்.