Published:Updated:

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல்1

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல்1
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல்1
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல்1

ராமேஸ்வரம்: நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கட்ற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் சுமார் 3 ஆயிரம் பேர் 500 விசைப் படகுகளுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.அவர்களில் சிலர் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது சிங்கள கடற்படையினர் 5 குட்டி கப்பல்களில் 30 பேர் ரோந்து வந்தனர். அவர்கள் அங்கு மீன்பிடித்து கொண்டிருந்து ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளில் ஏறி அங்கு இருந்த மீன் வலைகளை அறுத்து கடலில் வீசினர். படகில் இருந்த மீனவர்களையும் அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

##~~##
இது குறித்து கரை திரும்பிய மற்ற மீனவர்கள், ராமேஸ்வரம் மீனவர்கள் கடத்தப்பட்ட தகவல் குறித்து அதிகாரிகளிடம் புகார் கூறியுள்ளனர்.
கடத்தப்பட்ட மீனவர்களை உடனே மீட்கக்கோரி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் தொடர்ந்து நீடித்து வருவதால் மத்திய, மாநில அரசுகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.