Published:Updated:

”போலீஸை அடிச்சதைக் கண்டிச்ச மாதிரி, போலீஸார் அடிச்சதையும் கண்டிச்சிருக்கணும்ல ரஜினி!” #VikatanSurveyResult

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கடந்த 10ஆம் தேதி சென்னையில் ஐ.பி.எல் போட்டி நடைபெற்றது. அந்தப்  போட்டியை சென்னையில் நடத்தக் கூடாது என அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் கோரிக்கை வைத்தன. ஆனால், போட்டி திட்டமிட்டபடி நடக்கத் தொடங்கியது. இதனால், மக்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து, போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தினர். இதனால், போராட்டத்தில் ஈடுபட்ட  இளைஞர் போலீஸ் ஒருவரைத் தாக்கினார். இதுபற்றி நடிகர் ரஜினிகாந்த் "சீருடையில் இருக்கும் போலீஸை தாக்கியது நாட்டுக்கே பேராபத்து. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்றவேண்டும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

இந்த கருத்துத் தொடர்பாக விகடன் இணையதளத்தில் '' 'போலீஸ்' பற்றி ரஜினி கருத்து... உங்கள் கருத்து என்ன?!" என்ற தலைப்பில் சர்வே நடத்தப்பட்டது. இதற்குப் பலவிதமான கருத்துகள் பதிவாகியுள்ளன. "போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்திய வீடியோக்கள் பெரிதளவில் வெளியாகாமல் இருக்கிறது. அதனால், போலீஸைத் தாக்கியது மட்டுமே தெரிகிறது. மேலும், மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் முடிவடையும் நேரத்தில், அதை வன்முறையாக மாற்றி மக்களைத் தாக்கியதும் போலீஸார் தான். அப்போதெல்லாம், ரஜினி எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. அது போலீஸ் அத்துமீறல் இல்லையா?" போன்ற கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும் கீழே...

4) ரஜினியின் அறிக்கை பற்றி உங்கள் கருத்து என்ன?

*இது ரஜினி கருத்தே இல்லை. பி.ஜே.பி கருத்து. அவருக்குக் கொடுத்த ஸ்கிரிப்ட் படியே அவர் நடக்கிறார்.

*This is not what actually Thalaivar speaks.. As a tamizhan it really hurts! Y cant he raise his voice for CMB? But for this issue..

*மிகவும் சரியான நேரத்தில் சரியான கருத்தை ஆதரித்து பிரசாரம் செய்யும் கூட்டத்தில் இது மாதிரி தைரியமான ஒரு comment வரவேற்கத்தக்கது

*இதைக் கூற தெரிந்தவருக்கு, சீருடை அணிந்த காவலர்கள்​ பொது மக்களை நடத்தும் விதம் பற்றி கருத்து கூற தெரிந்திருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக உஷா என்ற பெண் மரணம், தி.நகரில் வாலிபர் தாக்கப்பட்டது அனைத்தும் நன்றோ? இமாலயம் சென்ற களைப்பில் கவனிக்கத் தவறி விட்டாரோ!!!!

*இதற்கு முன்னால் நடந்தவற்றை மறந்துவிட்டு டுவீட்டி இருக்கிறார்.. டுவீட்டுவதற்கு முன்பு யோசித்து இருக்கலாம்

*இன்று இருக்கும் இந்த ஆன்மிக ரஜினி அன்று இருந்த 'தளபதி ரஜினி'யை கவனத்தில் கொண்டு பேசவேண்டும்

*அமீர் சொன்னது போல ர‌ஜினி அவர்களின் Twitter சாதாரண அடித்தட்டு மக்களுக்கு என்று என்றைக்கும் பேசியது இல்லை

*He has to speak about all issues, not specific to particular incident.

*ரஜினி கருத்துக்கள் நியாயமாகவே இருக்கும். அப்பழுக்கற்ற, நிதானமான யதார்த்தமான  மனிதர்

*உள்நோக்கம் கொண்ட கருத்து! எப்போதுமே தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்காத ரஜினி!

*இதுதான் சினிமாவுக்கும் நிஜத்திற்கும் உள்ள வேறுபாடு. ஒரு சாமானியனின் கஷ்டம் சூப்பர் ஸ்டாருக்குத் தெரியவில்லை.

*தேர்ந்தெடுக்கப்பட்ட சில கருத்துகளை மட்டுமே இங்கே பிரசுரித்துள்ளோம். வாசகர்களின் கருத்துகளோடு நீங்கள் முரண்பட்டால், அவற்றைப் பின்னூட்டமாக இடுங்கள்.