Published:Updated:

27 தமிழக மீனவர்கள் விடுதலை தாமதத்திற்கு தமிழக அரசின் மெத்தனம் காரண்ம்?

புதுடெல்லி:  தமிழக மீனவர்கள் 27 பேர் இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு தமிழக அரசின் மெத்தனம் காரணம் என்று கூறப்படுகிறது.

இலங்கைத் தலைநகர் கொழும்பு சிறையில் இந்திய மீனவர்கள் 33 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 27 பேர் தமிழகத்தையும், 6 பேர் கேரளாவையும் சேர்ந்தவர்கள். இவர்களை மீட்க மத்திய அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்களை அளிக்கும்படி இரு மாநில அரசுகளையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

##~~##
உடனடியாக கேரள அரசு முகவரி உள்ளிட்ட விவரங்களை அளித்துவிட்டது. ஆனால், தமிழக அரசு இந்த விஷயத்தில் கால தாமதம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், இவர்களை மீட்கும் முயற்சியில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், தமிழக அரசு முகவரியைக் கொடுக்கும் வரை காத்திருக்காமல் முதலில், கேரள மீனவர்களையாவது மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள அரசு வலியுறுத்தியுள்ளது.