Published:Updated:

அவதூறு கருத்துக்காக நீதிமன்றத்தில் ஆஜராக எஸ்.வி.சேகருக்கு உத்தரவு!

அவதூறு கருத்துக்காக நீதிமன்றத்தில் ஆஜராக எஸ்.வி.சேகருக்கு உத்தரவு!
அவதூறு கருத்துக்காக நீதிமன்றத்தில் ஆஜராக எஸ்.வி.சேகருக்கு உத்தரவு!

அவதூறு கருத்துக்காக நீதிமன்றத்தில் ஆஜராக எஸ்.வி.சேகருக்கு உத்தரவு!

பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகவும் அருவருக்கத் தகுந்த வகையிலும் கருத்து தெரிவித்த எஸ்.வி.சேகர் மீது தொடரப்பட்ட வழக்கில், நேரில் ஆஜராகுமாறு நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவதூறு கருத்துக்காக நீதிமன்றத்தில் ஆஜராக எஸ்.வி.சேகருக்கு உத்தரவு!

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாகப் பேட்டியளித்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பெண் செய்தியாளர் ஒருவரின் கன்னத்தில் தட்டிய விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியது. இது தொடர்பாகச் சமூக வலைதளத்தில் பதிவிட்ட அந்தப் பெண் செய்தியாளர், `பல முறை கன்னத்தைக் கழுவியும் அந்தச் சம்பவம் எனக்கு அருவருப்பை ஏற்படுத்திவிட்டது’ எனக் குறிப்பிட்டார். இது தொடர்பாக ஆளுநர் மன்னிப்புக் கோரினார்.

ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக நடிகரும் பா.ஜ.க-வைச் சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் முகநூலில் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்துகளைlத் தெரிவித்திருந்தார். அதனால் தமிழகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபட்டனர். அவரது செய்தியைப் புறக்கணிப்பது எனச் சில நகரங்களில் உள்ள செய்தியாளர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். 

இந்த நிலையில், நெல்லை பத்திரிகையாளர் மன்றம் சார்பாக மன்றத்தின் தலைவர் அய்கோ என்கிற அய்.கோபால்சாமி நெல்லை நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மீது வழக்கு தொடர்ந்தார். பத்திரிகையாளர் மன்றம் சார்பாக வழக்கறிஞர்களான டி.ஏ.பிரபாகர், வினோத் தாசன் ஆகியோர் குற்றவியல் நீதித்துறை நடுவர் 1வது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். 

அந்த மனுவில், "முகநூலில் எஸ்.வி.சேகர் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவு பத்திரிகையாளராகிய என் மீதும் என்னைப் போன்றவர்களின் மீதும் அவதூறையும் அவமானத்தையும் ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. எஸ்.வி.சேகரின் முகநூல் பதிவால், சமூகத்தில் என்னைப் போன்றோரின் மதிப்பும் மரியாதையும் குறைந்துவிட்டது. 

இந்த அவதூறு பதிவை வேண்டுமென்றே வெளியிட்டு அவமானத்தை ஏற்படுத்திய எதிர்மனுதாரர், இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 499-ன்கீழ் தண்டிக்கப்பட வேண்டியவர். எனவே, அவர் மீது இந்தியத் தண்டனைச் சட்டப்பிரிவு 500-ன் கீழ் தகுந்த தண்டனை வழங்க வேண்டும்’’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி ராமதாஸ், ஜூன் 18-ம் தேதி எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.

அடுத்த கட்டுரைக்கு