சேவியர் கல்லூரி மாணவர்கள் 22 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் (படங்கள்)

நெல்லை: நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி மாணவர்கள் 22 பேர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்க கொண்டு வந்துள்ள தீர்மானம் மோசடியானது, போலியானது. எனவே அதை இந்தியா ஆதரிக்க கூடாது. அதற்கு பதிலாக ஐ.நா.சபையில் பொது வாக்கெடுப்பு நடத்த இந்தியா குரல் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரி மாணவர்கள் 22 பேர் இன்று சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை கல்லூரி முன்பு நடத்த கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்ததால் மாநகர் மாவட்ட ம.தி.மு.க செயலாளார் நிஜாம் வீட்டின் அருகே மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
படங்கள்: எல்.ராஜேந்திரன்