Published:Updated:

ஊராட்சி மன்ற‌ தலைவர்கள் உண்ணாவிரதம்

ஊராட்சி மன்ற‌ தலைவர்கள் உண்ணாவிரதம்
ஊராட்சி மன்ற‌ தலைவர்கள் உண்ணாவிரதம்
காஞ்சிபுரம்: இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.
ஊராட்சி மன்ற‌ தலைவர்கள் உண்ணாவிரதம்
காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் மொத்தம் 59  ஊராட்சி மன்றங்கள் இருக்கின்றன. இதில் 519 ஊராட்சி மன்ற தலைவர்கள் இன்று ஒரே இடத்தில் ஒரு நாள் அடையாள‌ உண்ணாவிரதம் இருந்து இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி வருகிறார்கள்.
##~~##
அச்சிறுப்பாக்கம்  வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் எதிரில் நடக்கும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அ.தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர்களும் கலந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 
ஊராட்சி மன்ற‌ தலைவர்கள் உண்ணாவிரதம்
உண்ணாவிரத்திற்கு தலைமை தாங்கிய கீழாமூர் ஊராட்சி மன்ற தலைவ‌ர் துரைவேலு, “அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆரிக்க வேண்டும். இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை சர்வ‌தேச நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும். உலகின் மிக உய‌ர்ந்த தண்டனையை ராஜபக்சேவுக்கு சர்வதேச நீதிமன்றம் அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி மன்ற தலைர்கள் கூட்டமைப்பு சார்பாக நடத்தப்படும் இந்த உண்ணாவிரதத்தில் கட்சி பேதம் இல்லாமல் அனைத்து கட்சியினரும் கலந்து கொண்டு எங்கள் எதிர்ப்பை மத்திய அரசிற்கு தெரிய‌ப்படுத்தி வருகின்றோம்” என்றார்.
 - பா.ஜெயவேல்