Published:Updated:

“அப்பா சாமி கும்பிடமாட்டாரு. ஆனா, எங்களை சாமி கும்பிடக்கூடாதுன்னு சொன்னதில்ல!’’ கோபாலபுரம் சமையல் கலைஞர் பஞ்சவர்ணம் #MissUKarunanidhi

“அப்பா சாமி கும்பிடமாட்டாரு. ஆனா, எங்களை சாமி கும்பிடக்கூடாதுன்னு சொன்னதில்ல!’’ கோபாலபுரம் சமையல் கலைஞர் பஞ்சவர்ணம்  #MissUKarunanidhi
News
“அப்பா சாமி கும்பிடமாட்டாரு. ஆனா, எங்களை சாமி கும்பிடக்கூடாதுன்னு சொன்னதில்ல!’’ கோபாலபுரம் சமையல் கலைஞர் பஞ்சவர்ணம் #MissUKarunanidhi

அன்னைக்கு ஐயாவுக்கு ரொம்ப முடியலைன்னு சொல்லி ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டுப் போனாங்க. வழக்கம்போல ரெண்டு நாளில் திரும்பிவந்துடுவாங்கன்னு நினைச்சோம்.

ந்தச் செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையுமே அதிரச் செய்தது. தங்கள் தலைவர் குணமடைந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் 10 நாள்களுக்கும் மேலாக கண்கள் விரிய ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை முன்பும், கோபாலபுரம் இல்லத்தின் முன்பும் காத்துக்கிடந்த தொண்டர்களுக்கு, இடியாக விழுந்தது அந்தச் செய்தி. செவ்வாய்க்கிழமை மாலை கருணாநிதி மறைந்துவிட்டதாகத் தகவல் வந்த நேரம், கோபாலபுரம் வீட்டுக்கு வெளியே நின்றிருந்தோம். 5 மணி முதலே தொண்டர்கள் கொஞ்சம் கொஞ்சமாக திரண்டு 6.30 மணிக்குள் கடல்போல சூழ்ந்துவிட்டார்கள் கோபாலபுர வீட்டை. 

``எழுந்து வா தலைவா. கோபாலபுரம் வீட்டுக்கு வா தலைவா. உன்னைப் பாக்க காத்திருக்கிறோம் தலைவா” என கோஷமிட்டார்கள். ஆர்ப்பரித்த கடல், பிரளயமாகச் சீறிப்பாய்ந்த உணர்வு. ``தலைவா போய்ட்டியே தலைவா, ஐயோ தலைவரே. எங்களைவிட்டுப் போய்ட்டீங்களே'' என்று தலையில் அடித்துக்கொண்டு கதறி அழுதார்கள். அதுவரை, கருணாநிதியின் புகழாரங்களை மட்டுமே தனக்குள் உள்வாங்கிக்கொண்டிருந்த கோபாலபுரம் இல்லம், மரண ஓலத்தைக் கண்டு நடுநடுங்கியது.

சரியாக இரவு 10.15 மணி... கலைஞரின் உடலுடன் ஆம்புலன்ஸ் வந்தது. கட்டுக்கடங்காத தொண்டர்களின் கூட்டத்தால், உடலை வீட்டுக்குள் எடுத்துச்செல்வதில் சில நிமிட போராட்டம் நடந்தது. நாம் பின்பக்க வாசல் வழியாக வீட்டுக்குள் சென்றோம். அங்கே முதலாவதாக இருந்தது சமையலறை உறவினர்களும் கட்சியின் முக்கியப் பிரமுகர்களும் நின்றுகொண்டிருந்தனர். சமையலறையில் ஐந்துக்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் கைவைத்து அழுதபடியே உட்கார்ந்திருந்தார்கள். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அந்த சூழலில் எதுவும் பேச இயலாமல், சில மணி நேரம் அமைதியாகவே இருந்தோம். பின்வாசல் வராண்டாவில் அமர்ந்திருந்தபோது, அங்கே வந்தார் பஞ்சவர்ணம் அம்மா. ``என்ன கண்ணு... டீ எதுவும் குடிச்சியா? எங்க அப்பா வீட்டுக்கு வந்துட்டு வெறும் வயித்தோடு போகக் கூடாது” என்றவர் கலங்கி அழுதார்.

``முடியலைப்பா. அப்பாவை இந்தக் கோலத்துல பார்க்கமுடியலை. எப்படி இருந்த வீடு இது. எத்தனையோ வருஷமா இங்கே வேலை பாத்துட்டிருக்கேன். ஊரு உலகமெல்லாம் அய்யாவை தலைவருன்னு கூப்பிடுது. எனக்கு அவரு அப்பா. தலைவர் முன்னாடி ஐயான்னு கூப்பிட்டாலும், மத்த இடத்தில் என் அப்பான்னுதான் சொல்வேன். இந்த வீட்டுல இருக்கும் யாருமே எங்களை வேலையாளா நினச்சதில்லே.. அவங்க வீட்டுல ஒருத்தராத்தான் பார்ப்பாங்க. அவங்க சாமி கும்பிட மாட்டாங்க. ஆனா, எங்களை கும்பிடக் கூடாதுன்னு சொன்னதே இல்லே. இதோ பாருய்யா இந்த அறையிலதான் எங்க பொருள்களை வெச்சிருக்கோம். செவுத்துல எத்தனை சாமி படங்களை மாட்டியிருக்கேன் பாரு. இதுவரை யாரும் எதுவும் சொன்னதில்லே.

இந்த வீடு ரொம்ப எளிமையானது. ஆடம்பரமா எதுவுமே கிடையாது. அம்மாவையும் நாங்களே மாறி மாறி பார்த்துப்போம். அன்னைக்கு ஐயாவுக்கு ரொம்ப முடியலைன்னு சொல்லி ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டுப் போனாங்க. வழக்கம்போல ரெண்டு நாளில் திரும்பிவந்துடுவாங்கன்னு நினைச்சோம். ஆனா, எங்க அப்பா, எங்க தலைவரு, எங்க ஐயா, எங்களுக்கெல்லாம் கண்கண்ட சாமியா இருந்தவங்க, மூச்சில்லாமல் திரும்பி வீட்டுக்குள்ளே வருவாங்கன்னு நினச்சே பார்க்கலை. இனி என் உசுரு இருக்கிற வரை அம்மாவுக்குப் பணிவிடை பார்த்துட்டு போயிடணும் தம்பி” கண்களில் வழிந்தோடும் கண்ணீரை முந்தானையால் துடைத்துக்கொண்டே நகர்கிறார், பஞ்சவர்ணம் அம்மா.