Published:Updated:

தமிழீழம் கோரி கோவையில் பொதுமக்கள் உண்ணாவிரதம் ( படங்கள் )

தமிழீழம் கோரி கோவையில் பொதுமக்கள் உண்ணாவிரதம் ( படங்கள் )
தமிழீழம் கோரி கோவையில் பொதுமக்கள் உண்ணாவிரதம் ( படங்கள் )

கோவை : இலங்கையில் தனித்தமிழ் ஈழம் அமைக்க பொதுவாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி கோவையில் பொதுமக்களும், தங்க நகைத் தொழிலாளர்களும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழீழம் கோரி கோவையில் பொதுமக்கள் உண்ணாவிரதம் ( படங்கள் )

தமிழீழம் கோரி தமிழகத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கும் போராட்டத்தில் குதித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் ஏற்கனவே பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கோவையை அடுத்த ஆலந்துறை பகுதியில் பொதுமக்கள் தமிழீழம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  கோவை ஆலாந்துறை பேருந்து நிறுத்தம் அருகே, இலங்கை அரசின் இனப்படுகொலையை கண்டித்தும், தனித்தமிழ் ஈழம் அமைக்க பொதுவாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் இன்று காலை முதல் நடந்து வருகிறது. இதில், 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர்.

##~~##
உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்கள், அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தியதுடன் ராஜபக்சேவின் உருவ பொம்மையை கழுதை மீது ஏற்றி ஊர்வலமாக எடுத்துச்சென்று கொடும்பாவியை எரித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், தங்களது வாக்காளர் அடையாள அட்டையை கிராம நிர்வாக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
தமிழீழம் கோரி கோவையில் பொதுமக்கள் உண்ணாவிரதம் ( படங்கள் )

இதேபோல், கோவை மாவட்ட தங்க நகைத் தொழிலாளர்கள் கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் எதிரே அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இதில், 100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

தனி ஈழம் அமைக்க உடனடியாக சர்வதேச நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய போராட்டகாரர்கள், இதற்காக மத்திய அரசு சர்வதேச நாடுகளை நிர்பந்திக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

செய்தி& படங்கள்: ச.ஜெ.ரவி