Published:Updated:

கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!
பிரீமியம் ஸ்டோரி
News
கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!

‘ஈ லோகத்தில் ஒரு பிஸியான ஆள் உண்டெங்கில்,  அது ஈ காரைக்குடி ஹெச்.ராஜாவாக்கும்’ - இதுதான் அநேகமாக அன்னாரின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக இருக்கும். காரணம், எத்தனை தலைவர்கள் இணைந்து தாமரைக்கு உரம் வைத்தாலும் அதை அசராமல் ஒற்றைக்கையால் பிடுங்கிப் போட அரும்பாடுபடுகிறார் ஹெச்.ராஜா. அதற்குத்தான் எத்தனை கண்டனங்கள்... எவ்வளவு போராட்டங்கள்? ஹெச்.ராஜாவாக இருப்பதன் கஷ்டம் ஹெச்.ராஜாவுக்கு மட்டுமே தெரியும்.

கம்பேரிஸன் கோவாலு!

அபத்தமே ஆபத்பாந்தவன்
‘எரிகற்கள் பூமியில் வீழ்வதற்குக் காரணம் அவற்றுக்குப் போதிய கடவுள் நம்பிக்கை இல்லாததே’, ‘இரவில் மோடி செல்லும் விமானத்துக்கு வழி தெரிய வேண்டுமென்றுதான் நட்சத்திரங்கள் மின்னுகின்றன’ போன்ற கருத்துகளை எல்லாம் கூச்சமே இல்லாமல் கொட்டிவிட வேண்டும். என்னது... காமெடியா இருக்கா? ஹலோ, கோவாலு கற்பனையைவிட ராஜாவோட சிந்தனை பலமடங்கு அதிக ஹியூமரா இருக்கும்!

வண்டியேறி வரும் ஊழ்வினை
இப்படியெல்லாம் செய்தால், பப்ளிக் எப்படி ரியாக்ட் செய்வார்கள்? யெஸ், அதேதான்! கலாய் கலாய் என கலாய்ப்பார்கள். ஆனாலும் கண்டுகொள்ளாதமாதிரியே இருக்கவேண்டும். அடுத்தகட்டமாக தமிழக பி.ஜே.பி தலைவர்கள் லோக்கல் சேனல் வரை தோன்றி, ‘அட... அவர் எங்காளுதான். ஆனா அவர் பேசுறதெல்லாம் எங்க கருத்து இல்ல’ என ‘பை பை’ காண்பிப்பார்கள். வேறொரு பிரச்னை வந்து நெட்டிசன்கள் அந்தப் பக்கம் திரும்பும்வரை இவர் தனியாகத் தலைமறைவாகச் சுற்றவேண்டும்.

முன்னோர்கள் எல்லாரும் ஜீனியஸ் ப்ரோ
காலையில் தினமும் கண்விழித்தவுடன் சூரிய நமஸ்காரத்துக்கு முன்னதாக அவர் செய்வது வாட்ஸ்அப் குரூப்களை நோட்டம் விடுவதுதான். ‘முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை’ என்ற ரகத்தில் வந்து குவிந்திருக்கும் மெசேஜ்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸாகப் போடவேண்டும். ‘உண்மையா, பொய்யா, இது எப்போது நடந்தது’ என்பதைப் பற்றியெல்லாம் நமக்கென்ன கவலை ப்ரோ! கவனம்: சக நண்பரான எஸ்.வி.சேகரும் இதே வேலையாக இருப்பதால் ரிப்பீட் ஆகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மைல் நீள மன்னிப்பு

எல்லாப் பக்கமும் இடிப்பதால் வேறு வழியே இல்லாமல் இறங்கிவர வேண்டும். அதுவும் அவருக்கே உரிய ஸ்டைலில். ‘‘அதாவது, இப்ப என்னாவாகிப்போச்சுனா, நான் ‘மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் நல்லா இல்லனு’னு ஸ்டேட்டஸ் போட்டேன். அதை ஃபேஸ்புக் தப்பா ரீட் பண்ணி பெரியார் நல்லவர் இல்லனு பதிவு பண்ணிடுச்சு. தப்பு செஞ்ச ஃபேஸ்புக்கை கண்டிச்சுட்டேன். அடுத்த தடவை அது பண்ணப்போற தப்புக்கும் சேர்த்து மன்னிச்சுடுங்க” எனத் திசைக்கொரு மன்னிப்பு கேட்கவேண்டும். பாவத்த!

ஓவியம்: பிரேம் டாவின்ஸி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz