Published:Updated:

ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரின் காவல் நீட்டிப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரின் காவல் நீட்டிப்பு
ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரின் காவல் நீட்டிப்பு

ராமேஸ்வரம்: இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேர் இலங்கை மன்னார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் 26ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 6 ஆம் தேதி 5 விசைப்படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் 30 பேரும் இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் 26ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

##~~##
இந்த நிலையில் மீனவர் அமைப்பு பிரதிநிதிகளை சந்தித்த மாவட்ட ஆட்சியர், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் குறித்து இரு அரசுகளிடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளார்.
மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதால் அடுத்தகட்ட போராட்டங்களை நடத்த உள்ளதாக மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

பாண்டி