Published:Updated:

தமிழ்நாட்டு அமைச்சரைக் கண்டு பூனையாக மாறிய தாய்லாந்து புலி ! 

எம்.குமரேசன்
தமிழ்நாட்டு அமைச்சரைக் கண்டு பூனையாக மாறிய தாய்லாந்து புலி ! 
தமிழ்நாட்டு அமைச்சரைக் கண்டு பூனையாக மாறிய தாய்லாந்து புலி ! 

டந்த ஒரு வார காலமாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் முகத்தை டிவி-க்களில் பார்க்க முடியவில்லை. எந்த ஒரு பிரச்னைக்கும் அ.தி.மு.க சார்பாக  மீடியாக்களிடம் அமைச்சர் ஜெயக்குமார்தான் கருத்து தெரிவிப்பார். டிவி மீடியாக்களும் அவரின் பேட்டிக்குதான் முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பி வந்தன. கடந்த சில நாள்களாக அமைச்சர் ஜெயக்குமாருக்குப் பதிலாக பொன்னையன் அ.தி.மு.க தரப்பில் மீடியாக்களிடம் பேசி வந்தார். ஜெயக்குமார் எங்கே போனார். எழுந்த கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

அமைச்சர் ஜெயக்குமார் தாய்லாந்து நாட்டுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மீன்வளத்துறை அமைச்சருக்கு வனவிலங்குகள் என்றால் கொள்ளைப் பிரியம் போலும். இந்த முறை தாய்லாந்து சுற்றுப்பயணத்தின்போது அங்குள்ள வனஉயிரினச் சாலைக்குச் சென்று விலங்குகளைப் பார்த்து ரசித்தார். ரசித்ததுடன் விட்டால் பரவாயில்லை. புலியின் அருகில் சென்று குழந்தைபோல அதனுடன் விளையாடினார். 

அதோடு அமைச்சர்  ஜெயக்குமார் புலியின் அருகில் அமர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார். தமிழ்நாட்டு அமைச்சரைக் கண்ட புலி பம்மி பூனை போல மாறிவிட்டது. அவர் அதன் முதுகில்  தடவியும் கொடுத்தார். அண்மையில் ஜப்பானுக்குச் சென்ற அமைச்சர் ஜெயக்குமார், அங்குள்ள வனஉயிரினச் சாலைக்குச் சென்று சிங்கக்குட்டி ஒன்றைக் கொஞ்சி மகிழ்ந்தார். சிங்கத்தைத் தொடர்ந்து தற்போது புலியுடன் கொஞ்சி மகிழ்ந்துள்ளதோடு, அந்த வீடியோ தமிழகத்து மீடியாக்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார். 

அமைச்சர் ஜெயக்குமாரின் தைரியத்தைப் பார்த்து தமிழகமே வியந்து கிடக்கிறது!