Published:Updated:

மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி 27ல் ராமேஸ்வரம் மீனவர்கள் மறியல்

மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி 27ல் ராமேஸ்வரம் மீனவர்கள் மறியல்
மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி 27ல் ராமேஸ்வரம் மீனவர்கள் மறியல்

ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள 30 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி வரும் 22ஆம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளனர்.

ராமேஸ்வரம் அனைத்து மீனவர்கள் சங்க கூட்டம் என்.ஜே.போஸ் தலைமையில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் கடந்த 6ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 30 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைவைத்துள்ளனர்.

##~~##
இவர்கள் நேற்று விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்த்திருந்த நிலையில் இம்மாதம் 27ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்துள்ளனர்.
இதனை கண்டித்து இம்மாதம் 22ஆம் தேதி தங்கச்சிமடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும் இம்மாதம் 27ஆம் தேதிக்கு முன்னதாக மீனவர்களை விடுவிக்கவில்லை எனில் அன்றையதினம் தங்கச்சிமடத்தில் சாலை மறியல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இரா.மோகன்