Published:Updated:

சபரிமலை ஏறிய ரெஹானா பாத்திமாவின் பின்னணி என்ன?

சபரிமலை கோயிலுக்குச் செல்ல முயன்ற ரெஹானா யார்?

சபரிமலை ஏறிய ரெஹானா பாத்திமாவின் பின்னணி என்ன?
சபரிமலை ஏறிய ரெஹானா பாத்திமாவின் பின்னணி என்ன?

பரிமலைக்குள் இரு பெண்கள் செல்ல முயன்று பின்னர், வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்கள் சன்னிதானத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டனர். ஒருவர் பெயர் ரெஹானா பாத்திமா. இவர் கேரளாவில் பெண்கள் உரிமைக்காகப் போராடுபவர். இன்னொருவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் கவிதா ஜக்கல, ரெஹானா பாத்திமா சபரிமலைக்குச் செல்லத் தொடங்கியதுமே எர்ணாகுளத்தில் உள்ள அவரின் வீட்டை ஒரு கும்பல் தாக்கியது. வீட்டில் இருந்த பொருள்களை உடைத்துப் போட்டுவிட்டு தப்பியுள்ளது.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் டெலிகாம் டெக்னிஷியனாக பணிபுரியும் கொச்சியைச் சேர்ந்த 31 வயது ரெஹானா 'எகா ' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ஓரினச் சேர்க்கையாளர்கள் பற்றிய படம். இந்தப் படத்தின் போஸ்டர்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. இஸ்லாமிய மதத்தில் பிறந்தாலும் அதிலிருந்து வெளியே வந்து விட்டதாக ரெஹானா கூறுவார். விதிகளை உடைப்பது என்பதுதான் இவரின் கொள்கை.

கடந்த மார்ச் மாதத்தில் கோழிக்கோட்டில் பெண்களை குறித்து சர்ச்சைக்கு உரிய வகையில் பேராசிரியர் ஒருவர் பேசினார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ’என் உடல் என் உரிமை' என்ற தலைப்பில் சர்ச்சையான புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். கேரள பாரம்பர்ய கலைகளில் 'புலிகளி' மிக முக்கியமானது. ஆண்கள் மட்டுமே இதில் பங்கேற்பார்கள். திருச்சூரில் நடந்த 'புலிகளி' நிகழ்ச்சியிலும் புலி வேடம் அணிந்து நானும் பங்கேற்றேன்’ என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். கேரளாவில்' கிஸ் ஆஃப் லவ்' இயக்கத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார். 

இவரின் கணவர் மனோஜ் திரைப்பட இயக்குநர். எகா படத்தை இவர்தான் இயக்கினார். இந்தத் தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.