Published:Updated:

பெரியாரும் அம்பேத்கரும் அற்புதமான விஷயங்களைக் கற்றுக்கொடுத்தாங்க! - கெளசல்யா சங்கர்

பெரியாரும் அம்பேத்கரும் அற்புதமான  விஷயங்களைக் கற்றுக்கொடுத்தாங்க! - கெளசல்யா சங்கர்
பிரீமியம் ஸ்டோரி
பெரியாரும் அம்பேத்கரும் அற்புதமான விஷயங்களைக் கற்றுக்கொடுத்தாங்க! - கெளசல்யா சங்கர்

அந்த நாள் வி.எஸ்.சரவணன், படம் : ரமேஷ் கந்தசாமி

பெரியாரும் அம்பேத்கரும் அற்புதமான விஷயங்களைக் கற்றுக்கொடுத்தாங்க! - கெளசல்யா சங்கர்

அந்த நாள் வி.எஸ்.சரவணன், படம் : ரமேஷ் கந்தசாமி

Published:Updated:
பெரியாரும் அம்பேத்கரும் அற்புதமான  விஷயங்களைக் கற்றுக்கொடுத்தாங்க! - கெளசல்யா சங்கர்
பிரீமியம் ஸ்டோரி
பெரியாரும் அம்பேத்கரும் அற்புதமான விஷயங்களைக் கற்றுக்கொடுத்தாங்க! - கெளசல்யா சங்கர்

காதல்... அனைத்தையும் உதறிவிட்டு அன்பு செய்தவரைத் தேடி வரச்செய்யும்; வாழச் செய்யும். சாதிப் பித்து... பெற்ற மகளையே கொல்லத் துணியச் செய்யும்; வாழ்வறுக்கச் செய்யும். காதலருடன் வாழச் சென்று, பெற்றோரால் வாழ்க்கை இணையை இழந்து நிற்கிற கௌசல்யா சங்கரின் சோகம் நாம் அறிந்ததே. மார்ச் 13-ம் தேதியுடன் இரண்டாண்டுகளைக் கடந்திருக்கும் அந்த நினைவுகளின் வடு இன்னும் ரணமாகவே இருக்கிறது கௌசல்யாவுக்கு.

“எங்க கல்யாணம் முடிஞ்சு சரியா எட்டு மாதமாச்சு. ஒவ்வொரு மாசம் முடியும்போது பெரிய சாக்லேட் வாங்கித் தர்றது சங்கரின் வழக்கம். அன்னிக்கு நைட்டும் அப்படித்தான் தந்தான். அடுத்த நாள் காலையில எழுந்ததும், ஹேர்கட் செய்துட்டு வந்தான். ரெண்டு பேரும் சேர்ந்து, துணி துவைச்சோம். அப்புறம், ‘உனக்குச் சில்லி பரோட்டான்னா பிடிக்கும்ல... உடுமலையில் ஒரு ஹோட்டல்ல மதியத்துல சூப்பரான சில்லி பரோட்டா கிடைக்கும். ஜவுளிக்கடைக்குப் போயிட்டு, அப்படியே சாப்பிட்டு வந்துடுவோம்’னு சொன்னான். ரெண்டு பேரும் சந்தோஷமா கிளம்பி பஸ்ல போனோம்.

ஜவுளிக்கடையில் சட்டை எடுத்துட்டு வெளியே வந்தோம். ஏற்கெனவே இப்படி ஒருமுறை வெளியே வந்திருந்தப்போ, என்னைக் கடத்திட்டு போறதுக்கு எங்க வீட்டுக்காரங்க முயற்சி செய்ததைப் பத்தி பேசிட்டே ரோட்டை கிராஸ் பண்ணினப்போ...” - கெளசல்யாவின் குரல் உடைகிறது.

பெரியாரும் அம்பேத்கரும் அற்புதமான  விஷயங்களைக் கற்றுக்கொடுத்தாங்க! - கெளசல்யா சங்கர்

அதன்பின் நடந்ததை, கடையின் சிசிடிவி காட்சிகள் மூலம் உலகமே பார்த்தது. அங்கே காத்திருந்த கூலிப் படையினர் (கெளசல்யா குடும்பத்தினரால் அனுப்பப்பட்டவர்கள்) இருவரையும் கொடும் ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கி வெட்டிச் சாய்க்கின்றனர். இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடக்கின்றனர்.

“ஒருவழியா அந்த இடத்துக்கு ஆம்புலன்ஸ் வந்ததும், எங்களை அதில் ஏத்தி, உடுமலைப்பேட்டை மருத்துவ மனைக்கு அனுப்புறாங்க. அங்கேருந்து கோயம்புத்தூருக்குப் போகச் சொல்லிட் டாங்க. ஆம்புலன்ஸில் நாங்க ரெண்டு பேர் மட்டும்தான். ‘தைரியமா இரு... நல்லா சாப்பிடு’னு சொல்லிட்டே வந்தான். அவன் கழுத்துல ஆழமா வெட்டியிருந்தாங்க, அதனால, கழுத்து சரிஞ்சு கீழே தொங்குச்சு. வலியால அலறித் துடிச்சான். என் கையில வெட்டு விழுந்ததால, கையைத் தூக்கக்கூட முடியாத அளவுக்கு வலி. மெள்ள அவன் தலையைத் தூக்கி கைத்தாங்கலா வெச்சேன். ஒவ்வொரு நொடியும் வலி அதிகமாயிட்டே இருந்துச்சு. மயக்கமா வந்துடுச்சு. கோயம்புத்தூர் ஹாஸ்பிடலுக்குப் போய்ச் சேர்ந்தப்போ, அவன் இறந்துட்டதா டாக்டர் சொன்னார். அதை என்னால நம்பவே முடியல” - அந்தத் துயர்மிகுந்த கணத்துக்குச் சென்றுவிட்ட கெளசல்யாவின் குரலில் அவ்வளவு துக்கம்.

“அந்த ஆறாத் துயரத்தைத் தாங்க முடியாம, தற்கொலை செஞ்சுக்கவும் முயற்சி பண்ணினேன். நல்லவேளை தப்பிச்சிட்டேன். இல்லாட்டி, இத்தனை பேர்  உறவுகளாக எனக்குக் கிடைப்பாங்கனு தெரிஞ்சுக்காம போயிருப்பேன்’’ என்ற கெளசல்யா, உறுதியான குரலுக்கு மாறுகிறார் .

“அன்று முதல் நிறைய மனிதர்களும் பல்வேறு இயக்கத்தினரும் உறுதுணையா இருக்காங்க. புத்தகங்கள் கொடுத்தாங்க. கூட்டங்களுக்குக் கூப்பிட்டாங்க. பெரி யாரும் அம்பேத்கரும் இந்த வாழ்வுல இருக்கிற அற்புதமான விஷயங்களைக் கத்துக்கொடுத்தாங்க. சுயமரியாதைன்னா என்ன, கல்வி ஒருவரை எப்படி மாற்றும்னு சொல்லிக்கொடுத்தாங்க” என்கிற கெளசல்யா, ஆணவப்படுகொலைக்கு வாழும் சாட்சியமாகப் பல மேடைகளில் முழங்கிவருகிறார். ‘சங்கர் சமூகநீதி அறக்கட்டளை’ நிறுவி, கல்வி மற்றும் சாதி மறுப்பு இணையர்களுக்கு உறுதுணையாக இருப்பது, சாதி ஆவணப் படுகொலைக்கு எதிரான செயல்பாடுகளை முன்னெடுப்பது ஆகியவற்றை முதன்மைப் பணிகளாக மேற்கொள்கிறார்.

“ ‘பெத்த அப்பா, அம்மாவுக்கே தண்டனை வாங்கிக்கொடுத்திருக்கா, அவங்க சாபம் சும்மா விடாது’ன்னு பல பேர் சொல்றாங்க. அவங்களுக்கெல்லாம், சங்கரோட கடைசி நிமிடங்கள் எவ்வளவு கொடூரமா இருந்துச்சுனு தெரியுமா? நாங்க ரெண்டு பேரும் ஒருத்தர் ரத்தத்தை ஒருத்தர் பார்த்துத் தவிச்சபடி அந்த ஆம்புலன்ஸில் போன நொடிகளின் வலி புரியுமா? என்னை நேசிச்ச ஒரே காரணத்துக்காக, என் கண்முன்னாலேயே அவன் கண் மூடின கணம், என் மனசில் உறைஞ்சு கிடக்கும் ரணம்... அவங்களால நினைச்சும் பார்க்க முடியாததுனு புரியுமா? நியாயம் சொல்ல வர்றவங்க எல்லாம், `ஓர் உயிரை எடுக்கிற தவற்றைச் செய்தவங்க அதுக்கான தண்டனையை அனுபவிக்கிறாங்க'னு ஏன் நினைக்க மாட்டேங்கிறாங்க? இது பழிவாங்கல் இல்லை. இன்னொரு சங்கர் பலியாகக் கூடாது என்ற ஆற்றாமை, சமூக அக்கறை” - தீர்க்கமாகச் சொல்கிறார் கெளசல்யா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism