போராட்டம் நடத்தினால் துப்பாக்கியால் சுடுகிறது தமிழக போலீஸ். பெட்ரோல் போடும் குழாயையே துப்பாக்கியாக மாற்றி நடுத்தர மக்களைச் சுடுகிறது மத்திய அரசு. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலால், 19 நாள்களாக உயர்த்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் விலை, மே 14-ம் தேதியிலிருந்து வேகமாக உயர்ந்து வருகிறது. எப்போதும் இல்லாத உச்சபட்சமாக பெட்ரோல் விலை 80 ரூபாயைத் தாண்டியிருக்க, ‘எப்போது செஞ்சுரி அடிக்கும்?’ என்பது போன்ற வேதனைக் கேள்விகள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன. ‘‘பெட்ரோலியப் பொருட்களுக்கு நாம் 80 சதவிகிதம் அளவுக்கு இறக்குமதியையே நம்பியுள்ளோம். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வதும், ரூபாயின் மதிப்பு குறைவதும்தான் விலையேற்றத்துக்குக் காரணம். விரைவில் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என மத்திய அரசு சொல்கிறது.

கர்நாடக தேர்தலையொட்டி 19 நாள்களாக ஏற்றாத விலையை ஈடுகட்டும் வகையில், ஒரே நேரத்தில் பெட்ரோல், டீசல் விலைகளை லிட்டருக்கு ரூ.4 அளவுக்கு உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்தன. அதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழும் என்பதால், தினமும் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தும் டெக்னிக்கை எண்ணெய் நிறுவனங்கள் கையாள்கின்றன. இதைத் தவிர அரசுக்கு வேறு வழியே இல்லையா என்ற கேள்விக்கு சில புள்ளிவிவரங்களின் வழியே பதில் தேடலாம்.

* கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளதா?

இல்லை. 2018 மே 22-ம் தேதி நிலவரப்படி, சர்வதேச மார்க்கெட்டில் கச்சா எண்ணெய் விலை, ஒரு பேரலுக்கு 69.3 டாலர். 2013 செப்டம்பர் 16-ம் தேதி மிக அதிகபட்சமாக ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 109.47 டாலர். வேடிக்கை என்னவென்றால், அவ்வளவு அதிகமாக கச்சா எண்ணெய் விற்றபோதும், பெட்ரோல் விலை இப்போதைய விலையைவிட 77 பைசா குறைவு.

* பிறகு ஏன் இவ்வளவு விலை அதிகம்?

வரிகள் உயர்த்தப்பட்டதுதான் காரணம். இந்தக் கணக்கைப் பாருங்கள்... 2013 செப்டம்பரில் பெட்ரோலின் விலை ரூ.52.15. அதன்மீது மத்திய அரசு விதித்த கலால் வரி ரூ.9.48. மாநில அரசு விதித்த வாட் வரி ரூ.12.68. டீலர் கமிஷன் ரூ.1.79. எல்லாம் சேர்த்து பெட்ரோலின் விலை ரூ.76.10.

2018 மே மாதத்தில் பெட்ரோலின் விலை ரூ.36.32. அதன்மீது மத்திய அரசு விதித்த கலால் வரி ரூ.20.66. மாநில அரசு விதித்த வாட் வரி ரூ.16.99. டீலர் கமிஷன் ரூ.3.82. எல்லாம் சேர்த்து பெட்ரோலின் விலை ரூ.79.79.

இதை ஒப்பிட்டுப் பார்த்தால், 2013-ம் ஆண்டில் ரூ.52.15 என இருந்த பெட்ரோலின் விலை, இப்போது ரூ.36.32 ஆகக் குறைந்துள்ளது. சுமார் 16 ரூபாய் அளவுக்கு விலை குறைவாக இருந்தாலும், அந்த விலைக் குறைவின் பயனை மக்கள் அனுபவிக்க விடாமல், மத்திய அரசும் மாநில அரசும் வரிகளை உயர்த்திவிட்டன.

* பெட்ரோலியப் பொருள்களை வெளிநாடுகளிலிருந்து வாங்கி நமக்குத் தருவதை மத்திய அரசு ஒரு சேவையாகத்தானே செய்கிறது?

நிச்சயமாக இல்லை. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் வருமானம் கொழிக்கும் தொழிலாகத் தான் பெட்ரோலிய விற்பனை இருக்கிறது. மத்திய அரசுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதியில் செஸ் வரி, இந்தியாவில் எடுக்கப்படும் கச்சா எண்ணெயில் ராயல்டி, பெட்ரோலியப் பொருட்களின்மீது விதிக்கப்படும் கலால் வரி மற்றும் சுங்க வரி, பெட்ரோலிய நிறுவனங்களின் மூலம் கிடைக்கும் நேரடி மற்றும் மறைமுக லாபம் என எல்லாமே சேர்ந்து மலைக்க வைக்கும் அளவுக்கு வருமானம் தருகின்றன.

மத்திய அரசுக்கு பெட்ரோலிய விற்பனை மூலம் 2014-15 நிதியாண்டில் ரூ.1,72,066 கோடி, 2015-16 நிதியாண்டில் ரூ.2,58,443 கோடி, 2015-16 நிதியாண்டில் ரூ.3,34,534 கோடி வருமானம் வந்துள்ளது. கடந்த ஆண்டில், இது மூன்றரை லட்சம் கோடியைத் தாண்டியிருக்கக்கூடும்.

மாநில அரசுகளும் விற்பனை வரி, வாட் வரி என பெட்ரோல் மற்றும் டீசலில் சம்பாதிக்கின்றன. 2014-15 நிதியாண்டில் ரூ.1,60,526 கோடி, 2015-16 நிதியாண்டில் ரூ.1,60,114 கோடி, 2015-16 நிதியாண்டில் ரூ.1,89,587 கோடி வருமானம் வந்துள்ளது. கடந்த ஆண்டில் இது இரண்டு லட்சம் கோடியைத் தாண்டியிருக்கக்கூடும்.

* மானியங்களைக் கொடுப்பதால் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்ற பேச்சு பரவலாக இருக்கிறதே?

இதுவும் தவறான வாதமே! இந்தியாவின் முன்னணி எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், 2018 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் மட்டும் சம்பாதித்த லாபம், ரூ.5,218 கோடி. இந்த நிறுவனத்தின் லாபம் 40 சதவிகிதம் வரை உயர்ந்துவருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பெட்ரோலியப் பொருள்களை வைத்து எண்ணெய் நிறுவனங்களும் சம்பாதிக்கின்றன; அரசுகளும் சம்பாதிக்கின்றன. மக்களுக்குக் கஷ்டம் மட்டும்தான் மிச்சம். ‘‘மத்திய அரசும் மாநில அரசுகளும் வரியைக் குறைத்தால், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தானாகக் குறையும்’’ என்கிறார், அனைத்திந்திய பெட்ரோல் டீலர்கள் சங்கத் தலைவர் அஜய் பன்சால். எனவே, விலை குறைவது அரசின் கையில்தான் இருக்கிறது.

- அகஸ்டஸ்