வழக்கமான மருந்து வாடையைத் தாண்டி, ரத்தவாடை அடிக்கிறது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில். காவல்துறை நடத்திய அத்தனை கொடூரங்களுக்கும் சாட்சியாக நிற்கின்றன பெயின்ட் உதிர்ந்த மருத்துவமனைச் சுவர்கள். காக்கிகளின் வேட்டையில் சிக்கிப் படுகாயமடைந்த அத்தனை பேரும் 5-ம் தளத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதிர்ச்சி, வலி, சோகம், விரக்தி என அங்குள்ள கட்டில்கால்கள் ஆயிரம் கதைகளைச் சுமந்து நிற்கின்றன.

உடல் முழுக்கக் காயங்களுடன் படுத்திருக்கிறார் பண்டாரம்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ். ‘‘22-ம் தேதி போராட்டம்னு முன்னாடியே அறிவிச்சிருந்தாங்க. போராட்டத்துல கலந்துக்குறவங்களுக்கு தண்ணி, பிஸ்கெட் கொடுக்கிற வேலையை நானும் என் நண்பர்களும் பிரிச்சுக்கிட்டோம். முதல்ல வி.வி.டி சிக்னல்ல போலீஸ் தடுத்தாங்க. முன்னாடி இருந்த பெண்கள் அவங்களைத் தாண்டிப் போகவும் பின்னாடியே போனோம். மூணாம் மைல் பாலத்துல கண்ணீர்ப் புகைக்குண்டு போட்டுட்டு, அதுக்கப்புறம் வந்து எங்களை அடிச்சாங்க. எனக்கு முதல் அடியே தலைலதான். ஒரு திருநங்கை அக்காதான் ஓடிவந்து குறுக்க விழுந்து எங்களைக் காப்பாத்துனாங்க. அதுக்குள்ள போலீஸ் சைடுலேருந்து கல் வந்து விழுந்துச்சு. உடனே, அந்த இடமே போர்க்களமாயிடுச்சு. தனியா பிரிஞ்சுட்ட ஒரு லேடி போலீஸை அடிபடாம கூட்டிட்டுப்போய் ஓரமா விட்டுட்டு, கலெக்டர் ஆபீஸ்குள்ள நுழைஞ்சேன். முதல்ல நுழைஞ்ச சில பேர்ல நானும் ஒருத்தன். நாங்க போனப்பவே அங்கே ஜீப், கார் எல்லாம் தீப்பிடிச்சு எரிஞ்சது.

திடீர்னு சுட ஆரம்பிச்சுட்டாங்க. ரப்பர்குண்டுனு நினைச்சு ‘சுடாதீங்க’னு கைதூக்கி நின்னேன். என் பக்கத்துல இருந்த வயசானவர் குண்டு பாய்ஞ்சு ரத்தவெள்ளத்துல விழவும்தான், நிஜ குண்டுனு தெரிஞ்சது. அப்படியே தரைல படுத்துட்டேன். போலீஸ்காரங்க மாறி மாறி அடிச்சாங்க. ஒரு லேடி போலீஸ், பெரிய கல்லை எடுத்து என் நெஞ்சுமேல போட்டாங்க. (காயத்தைக் காட்டுகிறார்). செத்துட்டோம்னுதான் நெனச்சேன். தட்டுத்தடுமாறி வெளியே இருக்குற நண்பர்களுக்கு போன் செய்ய செல்போனை எடுத்தேன். அதைப் பிடுங்கி உடைச்சுட்டாங்க. எனக்கு பக்கத்துலயேதான், அந்தப் பெரியவர் இறந்துகிடந்தார். அடுத்து நாமதான்னு தோணுச்சு. ஆனாலும், சக்தியை எல்லாம் திரட்டிகிட்டு வெளியே வந்துட்டேன்’’ எனச் சொல்லும் சந்தோஷின் முகம், கை, கால், முதுகு எல்லா இடங்களிலும் போலீஸ் அடியின் கொடூரம் தெறிக்கிறது.

கையில் பெரிய கட்டுப்போட்டு படுத்திருக்கிறார் 42 வயதான பரமசிவன். ‘‘99 நாளும் அமைதியாதான் போராட்டம் பண்ணுனோம். நூறாவது நாள்லகூட முதல் ஆறு கிலோமீட்டர் எந்தப் பிரச்னையும் இல்லாம ஊர்வலம் நடந்துச்சு. திடீர்னு போலீஸ்காரங்க லத்தியால கண்ணு மண்ணு தெரியாம அடிக்க ஆரம்பிச்சாங்க. எனக்குக் கைல அடி. கலெக்டர் ஆபீஸுக்குள்ள விடமாட்றாங்கனு ரோட்ல உட்கார்ந்தோம். உள்ளே இருந்து திபுதிபுனு வந்து எங்களை நோக்கிச் சுட்டாங்க. தொடைல குண்டு பாய்ஞ்சு அப்படியே விழுந்துட்டேன். நான், ஆட்டோ ஓட்றேன். எனக்கு ரெண்டு சின்னப் பசங்க இருக்காங்க. என் வருமானம் மட்டும்தான் சோறு போடுது. கால் சரியாகலைன்னா என் குடும்பத்தை எப்படிங்க காப்பாத்துவேன்? அப்படி என்னங்க நாங்க தப்புப் பண்ணிட்டோம்?’ என ஆதங்கத்துடன் அவர் பேசுவதை மௌனமாகப் பார்த்துக்கொண்டிருக் கிறார்கள் அவரின் மனைவியும் மகன்களும்.

கையில் அடிபட்ட ஒருவர் ஒரு கட்டிலில் படுத்திருக்க, அருகிலேயே அவரின் ஒன்றரை வயதுக் குழந்தையும் படுத்திருக்கிறது. நம்மைப் பார்த்து எழ முற்பட்டவரிடம், ‘‘என்னாச்சுங்க?’’ என்றோம். ‘‘போராட்டத்துக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லைங்க. என் பையன் பொன்கபிலனுக்கு ஒரு வாரமா உடம்பு சரியில்ல. இங்கதான் சேர்த்திருந்தோம். பொண்டாட்டியை இங்க விட்டுட்டு வீட்லேருந்து சாப்பாடு எடுத்துட்டு வந்தேன். வர்ற வழியெல்லாம் கலவரம்னு சொன்னாங்க. வேகவேகமா ஆஸ்பத்திரிக்கு வந்து வெளியே இருந்த பொம்பளையாளுங்களை உள்ளே போகச் சொன்னேன். அதுக்குள்ள 15 போலீஸ்காரங்க என்னை அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அடிதாங்க முடியாம அரை மயக்கத்துல கிடந்தேன். ஒரு போலீஸ்காரர் அப்படியே ஷூ காலால எத்தித் தள்ளி என்னை ஓரமா உருட்டிவிட்டார். உள்ளே இருந்து பொம்பளையாளுங்க வந்து என்னை மேலே தூக்கிட்டுப் போனாங்க’’ என்று தளர்ந்த குரலில் சொல்கிறார்.

ஒடிசலான தேகம் பிரபுவுக்கு. நடக்கவே சிரமப்படும் அவரைக் கைத்தாங்கலாகக் கழிவறைக்குத் தூக்கிச்செல்கிறார்கள் இருவர். ‘‘ஏற்கெனவே ஒரு பிரச்னையில என்னோட ஒரு கையில பாதி துண்டாயிருச்சு. இந்தப் போராட்டத்துல குடும்பத்தோட கலந்துகிட்டேன். கலெக்டர் ஆபீஸ்குள்ள நாங்க போனதும், சுட ஆரம்பிச்சுட்டாங்க. ஏற்கெனவே துண்டான கையில திரும்பவும் குண்டு பட்டு தெறிச்சது. ரத்தம் கொட்டக் கொட்ட அப்படியே ஆஸ்பத்திரிக்கு வந்தேன்’’ என்று கலங்கிய குரலில் புலம்புகிறார்.

இவையெல்லாம் ஒரு பெருங்கொடூரத்தின் மிகச்சிறிய பகுதிதான். தூத்துக்குடி சுற்று வட்டாரத்தின் ஒவ்வொரு பகுதியும், ஏகப்பட்ட சோகங்களைப் புதைத்தபடிப் புகைந்துகொண்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் மட்டும், ‘இயல்புநிலைக்குத் திரும்பியாயிற்று’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். தகுதியற்றவர்கள் அரசாண்டால் பணம் மட்டுமல்ல, பிணமும் தின்னும் அதிகார வர்க்கம்.

- நித்திஷ்