Published:Updated:

ராமேஸ்வரம், காரைக்கால் மீனவர்கள் காவல் நீட்டிப்பு!

ராமேஸ்வரம், காரைக்கால் மீனவர்கள் காவல் நீட்டிப்பு!
ராமேஸ்வரம், காரைக்கால் மீனவர்கள் காவல் நீட்டிப்பு!

ராமநாதபுரம்: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம், காரைக்காலை சேர்ந்த 56 மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதால் அவர்களது குடும்பத்தினர் கவலையில் உள்ளனர்.

கடந்த 6ஆம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த 30 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்டனர். சிறைக்காவலில் இருந்த அவர்கள் இன்று மன்னார் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அடுத்த மாதம் 6ஆம் தேதி வரை அவர்களை காவலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து 30 மீனவர்களும் மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

##~~##
இதே போல் கடந்த 5ஆம் தேதி கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 26 பேர், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.
அவர்களை சிறையில் அடைத்த இலங்கை காவல்துறையினர், இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, அவர்களை வரும் 29ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
விடுதலை செய்யப்படுவார்கள் என்ற ஏற்கத்துடன் இருந்த மீனவர்களின் குடும்பத்தினர் கவலையில் உள்ளனர்.
இரா.மோகன்