Published:Updated:

மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் சாலை மறியல் (படங்கள்)

மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் சாலை மறியல் (படங்கள்)
மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் சாலை மறியல் (படங்கள்)

ராமேஸ்வரம்: இலங்கையில் சிறை அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி தங்கச்சிமடத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 

மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் சாலை மறியல் (படங்கள்)

ராமேஸ்வரத்திலிருந்து கடந்த மாதம் 6ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற 30 மீனவர்களையும், அவர்கள் சென்ற 5 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றனர்.

வழக்கமாக இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்படும் தமிழக மீனவர்கள் 15 தினங்களுக்குள்ளாகவே விடுவிக்கப்பட்டு ஊர் திரும்புவார்கள். ஆனால் கடந்த மாதம் இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்ட மீனவர்கள் கடந்த ஒரு மாதகாலமாக இலங்கை அனுராதாபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 

மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் சாலை மறியல் (படங்கள்)

இதே போல் கடந்த 2011ஆம் ஆண்டு மீன்பிடிக்க சென்ற தங்கச்சிமடம் மீனவர்கள் 5 பேரை போதை பொருள் கடத்தி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றனர். இவர்கள் மீதான வழக்கு யாழ்பாணம் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் கடந்த ஓராண்டுக்கு மேலாக இவர்கள் இலங்கை சிறையில் வாடி வருகின்றனர்.

இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள 35 மீனவர்களையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரதம், ரயில் மறியல் என பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஆனாலும் மீனவர்கள் மீட்கப்படவில்லை. இதையடுத்து மீனவர்களை மீட்க வலியுறுத்தி இன்று காலை தங்கச்சிமடத்தில் மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபடபோவதாக அறிவித்தனர்.
 

மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் சாலை மறியல் (படங்கள்)

இதையடுத்து, மீனவர்களுடன் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து மீனவர்கள் இன்று காலை திட்டமிட்டபடி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

500க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மறியலால் சாலையின் இருபுறமும் சுமார் 2 கி.மீ.தூரத்திற்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

மேலும் ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் வாகனங்கள் பாம்பன் வரையே அனுமதிக்கப்பட்டது. இதே போல் ராமேஸ்வரத்திலிருந்து வாகனங்கள் வெளியேற அனுமதிக்கப்படவில்லை.
 

மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் சாலை மறியல் (படங்கள்)

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் வருவாய் கோட்டாட்சியர் லாரன்ஸ் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

##~~##
இம்மாதம் 6ஆம் தேதிக்குள் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை  தொடர்ந்து மீனவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மீனவர்களின் சாலை மறியலால் தடைபட்டிருந்த போக்குவரத்து 2 மணி நேரத்திற்கு பிறகு சீரடைந்தது.

இரா.மோகன்


படங்கள்:
உ.பாண்டி