Published:Updated:

ஆஹான்

ஆஹான்
பிரீமியம் ஸ்டோரி
ஆஹான்

ஆஹான்

ஆஹான்

ஆஹான்

Published:Updated:
ஆஹான்
பிரீமியம் ஸ்டோரி
ஆஹான்
ஆஹான்
ஆஹான்

R Muthu Kumar
அருகில் இருந்தபடியே அண்ணாவுக்கு அஞ்சலி செலுத்தும் வாய்ப்பை இந்த ஆண்டு பெற்றிருக்கிறார் மு.கருணாநிதி.

Karl Max Ganapathy
‘‘சி.சி.டி.வி காட்சிகள் வெளில வராம இருக்கணும்னா என்ன செய்யணும்?’’

‘‘தப்பு தண்டா எதுவும் பண்ணாம இருக்கணும். இல்லன்னா ஆட்சியில் இருக்கணும்!’’

பிரதாபன் ஜெயராமன்
ஹைகோர்ட்டாவது ...வது - ஹெச்.ராஜா பொன்மொழி

# பெரிய இடத்துப் பொல்லாப்பு நமக்கு எதற்கு? நாம ஹெல்மெட் இல்லாதவங்கள பிடிப்போம்!

Mugil Siva
தான் உத்தமர் என்பதை நிரூபிக்க, அவர் ஒரிஜினல் வீடியோவை டப்பிங் வாய்ஸுடன் உடனே வெளியிடுவார்.

Rafeek Raja K
‘‘வீடியோவில் உள்ள குரல் என்னுடையது அல்ல!’’

‘‘அப்ப அந்தக் குரல் யாருடையது?’’

‘‘அப்ப அட்மின், இப்ப டப்பிங்!’’

Abdul Hameed Sheik Mohamed
போலீசிற்கு லஞ்சம் தருவதாகச் சொல்லும் அந்த நீதிமன்ற அவமதிப்பு வீடியோவில் பேசுவது ஹெச்.ராஜா அல்ல... அவரது ட்வின்ஸ்!

Raajaa Chandrasekar
‘‘நல்லாத் தெரிஞ்சுக்குங்க. இந்த விளையாட்டுல நாம முதல்ல திருடனைத் தப்பிக்க விட்டுடணும். பிறகுதான் தேடிப்போய் கண்டுபிடிக்கணும்!

Rajagopal Subramaniam
ஹெச்.ராஜா அவ்வாறு சொல்லியிருந்தால்கூடப் பிரச்னையில்லை. ஆனால், தற்போது அவரது குரலை யாரோ மாற்றி எடிட் செய்து வெளியிட்டுள்ளார்கள் என்று தெரியவருகிறது. எனவே அந்த வீடியோவை ஆய்வு செய்து, எடிட் செய்த தேசவிரோதியை உடனடியாக தேசவிரோத சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும் என்று காவல்துறையையும் நீதிமன்றத்தையும் மிகுந்த பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Araathu R
அமெரிக்க டாலர் அனைத்து நாட்டு கரன்ஸிகளுக்கும் எதிராகப் பீடுநடை போடுகிறது. சில வருடங்களுக்கு முன் ரெசிஷன், பேங்க் மூடுவிழா, வீட்டுக்கடன் சிக்கல், திவால் என பல செய்திகள். எல்லாவற்றையும் தாண்டி இன்று டாலர் செழிப்பாக இருக்கிறது.

இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். பொருளாதார நிபுணர்கள் 2 ஜி.பி-க்கு கட்டுரை சமர்ப்பிக்கலாம். எனக்குச் சட்டென்று தோன்றுவது இதுதான். அமேசான், கூகுள், ஃபேஸ்புக் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் பத்து ஆண்டுகளுக்கு முன் மற்ற நாடுகளிலிருந்து பணத்தை உறிஞ்ச ஆரம்பித்திருக்கவில்லை. இப்போது பல பில்லியன் பணம் மற்ற நாடுகளிலிருந்து இந்த ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் அமெரிக்காவுக்குப் பாய்கிறது. மற்ற நாடுகளின் பணமாகச் சம்பாதித்து அமெரிக்க டாலராக அமெரிக்காவிற்குள் பாயும்போது, டாலர் வலுப்பெற்று மற்ற பணங்கள் வலுவிழக்கும். இந்த ஆன்லைன் நிறுவனங்கள் மட்டுமல்ல, மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், கோக், பெப்ஸி,
கே.எஃப்.சி என பல நிறுவனங்கள் உலகெங்கிலும் கல்லா கட்டுகின்றன.

இது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆஹான்

Narain Rajagopalan
அருண் ஜெட்லியும் விஜய் மல்லையாவும் சந்தித்தார்களா இல்லையா, அதிகாரபூர்வமா இல்லையா என்பதை விட முக்கியமான பிரச்னை - விமான நிலையங்களில் மல்லையாமீதான லுக் அவுட் நோட்டீஸைத் தளரச் செய்தது யார்?

ஆள்வது பா.ஜ.க அரசு. அத்தனை அதிகாரமும் உங்களிடத்தில். அதையும் தாண்டி எப்படி மல்லையா வெளியேறினார்? அவர்மீது வழக்கு இருக்கிறது என்று தெரிந்தும் எப்படி வெளியேற அனுமதித்தீர்கள். இப்படித்தான் லலித் மோடி, நிரவ் மோடி, மெஹ்ருல் சோக்சி என பலரும் வெளியேறியிருக்கிறார்கள். கைதியைத் தப்ப விட்டு விட்டு, வழக்கு தொடர்ந்த வக்கீல்தான் தவறு செய்தார் என்று வாதிடுவது எவ்வளவு அபத்தம்.

ஆஹான்

@Kannan_Twitz
ஒரு காலத்துல 2ஜி, 3ஜி என ஓஹோன்னு இருந்த கட்சிய இப்படி பிரியாணி, பஜ்ஜி ரேஞ்சுக்கு இறக்கிவிட்டீங்களேயா பாவிகளா!

@thirumarant
இப்படித்தான் எஸ்.வி.சேகருக்கும் காட்டுக்கத்து கத்தினோம்... போலீஸ் சிம்பிளா ‘‘அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்’’ன்னுட்டு போயிட்டாங்க. இப்ப ராஜாவுக்கு ஒரு மசால் தோசை... அவ்ளோதான்!

@yugarajesh2
ஹெச்.ராஜாவைக் கைதுசெய்ய மூன்று தனிப்படைகள் அமைப்பு

# அநேகமாக அந்த மூணு படைகளும் ஏற்கெனவே எஸ்.வி.சேகரைப் பிடிக்க ட்ரெயினிங் எடுத்த ஆளுங்களாதான் இருக்கணும்!

@shivaas_twitz
ஹெச்.ராஜாவைக் கைதுசெய்ய மூன்று தனிப்படைகள் அமைப்பு

# டார்கெட் முடிக்கக் கூடாது... அதுதான் டார்கெட். நமக்கு இப்படி ஒரு வேலை கிடைக்க மாட்டேங்குதே?!

@kaviintamizh
ஹெச்.ராஜாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமா எடுத்தா, ‘நான் அவன் இல்லை பார்ட் 3’னு பேர் வைக்கலாம்...

@idumbaikarthi
உலகின் தலைசிறந்த டப்ஸ்மாஷர் ஹெச்.ராஜாதான். வேற ஒருத்தன் பேசுனதுக்கு என்னமா வாயசைச்சிருக்காரு?

@amuduarattai
முன்னர் ஒரு திட்டத்தைத் தீட்டி, அதில் கமிஷன் எவ்வளவு என முடிவு செய்வார்கள். இப்போது, ‘கமிஷன் எவ்வளவு’ என்று முடிவு செய்துவிட்டுத்தான் திட்டமே தீட்டுகிறார்கள்.

@Russetlane
அவ்ளோ பெரிய குட்கா ஊழல், மினிஸ்டர்ங்க வீட்ல அவ்ளோ ரெய்டு... பெரிய பெரிய ஆளுங்கலாம் மாட்டிட்டு முழிக்கிறாங்க. அதைப் பேசறத விட்டுட்டு பிரியாணி கடை பிரச்னை, செல்போன் கடை சண்டைன்னு சோத்துல முழுப் பூசணிக்காய மறைக்கப் பாக்குறாங்க.

@manipmp
குழாய் தண்ணி வந்து பத்துநாள் ஆவதெல்லாம் தூய்மை இந்தியா திட்டத்தில வராதா?

@mufthimohamed1
அவதூறு கருத்துகளைச் சொல்லி வரும் ஹெச்.ராஜாமீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் - அமைச்சர் ஜெயக்குமார்

# அண்ணனுக்கு ஒரு ரெய்டு பார்சல்.

ஆஹான்

@ajmalnks
அவதூறு கருத்துகளைச் சொல்லிவரும் ஹெச்.ராஜாமீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் - ஜெயக்குமார்

# எப்படி? எஸ்.வி.சேகருக்கு போலீஸைப் பாதுகாப்புக்கு அனுப்பி வச்சது மாதிரியா?

@HAJAMYDEENNKS
‘ஹைகோர்ட்டாவது ...வது’ன்னு சொன்ன ஹெச்.ராஜாவைக் கைது பண்ணச் சொன்னால், ‘ஹெச்.ராஜா சொன்னதை நீ எப்படிச் சொல்லலாம்’னு நம்மள கைது பண்ணக்கூடிய எடப்பாடி ஆட்சியில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்!

@Thaadikkaran

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்கிறது: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றச்சாட்டு

# முதலமைச்சருக்கே ‘பவர்’ இல்லையாம், போவீங்களா!

@sindhan
காங்கிரஸ் ஆட்சியில் விலையேற்றத்தை விவாதித்தோம், பா.ஜ.க ஆட்சியில் கலவரத்தை விவாதிக்கிறோம்.

@udanpirappe

பெட்ரோல் விலையை எடப்பாடி கண்டிக்காட்டாலும் பரவாயில்ல, அட்லீஸ்ட் ஜெயலலிதா மாதிரி குணமா ஓர் அறிக்கையாவது விடச் சொல்லுங்கய்யா!
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism