Published:Updated:

காரைக்கால்-ராமேஸ்வரம் மீனவர்கள் காவல் நீட்டிப்பு!

காரைக்கால்-ராமேஸ்வரம் மீனவர்கள் காவல் நீட்டிப்பு!
காரைக்கால்-ராமேஸ்வரம் மீனவர்கள் காவல் நீட்டிப்பு!

சென்னை: இலங்கை கடற்படையினரால் சிறைப்பட்ட காரைக்கால் மற்றும் ராமேஸ்வரம் மீனவர்களின் காவல்  நீட்டிக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 26 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர்.

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 26 பேரும் இன்று அந்நாட்டு ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

##~~##
விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீனவர்களின் காவலை வரும் 20ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
26 மீனவர்களின் காவல் 4வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளதால் அவரது உறவினர்கள் சோகத்தில் உள்ளது.

இதேபோல் ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த மாதம் 6ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற 30 மீனவர்களையும், 5 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றனர். மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட இவர்கள் அனைவரும் தற்போது அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் மீனவர்கள் 30 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆஜர்படுத்தப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரையும் இம்மாதம் 20ஆம் தேதி வரை காவலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மீனவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இலங்கையில் சிறைவைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை மீனவர்கள் நடத்தி வந்தனர். கடந்த 2-ஆம் தேதி தங்கச்சிமடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய வருவாய் கோட்டாட்சியர் லாரன்ஸ் ‘சிறை வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் 6ஆம் தேதிக்குள் மீட்கப்படுவார்கள்’ என உறுதியளித்தார். இதையடுத்து மீனவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் தற்போது மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டிருப்பது மீனவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

-இரா.மோகன்