Published:Updated:

50 ஆண்டுகளுக்கு முன் கீழ்வெண்மணியில் நடந்தது என்ன? தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் விளக்கம்!

50 ஆண்டுகளுக்கு முன் கீழ்வெண்மணியில் நடந்தது என்ன? தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் விளக்கம்!
News
50 ஆண்டுகளுக்கு முன் கீழ்வெண்மணியில் நடந்தது என்ன? தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் விளக்கம்!

கீழ்வெண்மணி கிராமத்தில் அரை படி நெல் கூலி உயர்வு கேட்டு போராடியதற்காக விவசாயக் கூலிகளும் அவர்களின் குடும்பப் பெண்களும், குழந்தைகளும் தீக்கிரையாக்கப்பட்டனர். அந்தக் கொடூர சம்பவத்தின் 50-ம் ஆண்டு நினைவு தினம் இன்று.

Published:Updated:

50 ஆண்டுகளுக்கு முன் கீழ்வெண்மணியில் நடந்தது என்ன? தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் விளக்கம்!

கீழ்வெண்மணி கிராமத்தில் அரை படி நெல் கூலி உயர்வு கேட்டு போராடியதற்காக விவசாயக் கூலிகளும் அவர்களின் குடும்பப் பெண்களும், குழந்தைகளும் தீக்கிரையாக்கப்பட்டனர். அந்தக் கொடூர சம்பவத்தின் 50-ம் ஆண்டு நினைவு தினம் இன்று.

50 ஆண்டுகளுக்கு முன் கீழ்வெண்மணியில் நடந்தது என்ன? தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் விளக்கம்!
News
50 ஆண்டுகளுக்கு முன் கீழ்வெண்மணியில் நடந்தது என்ன? தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் விளக்கம்!

``விடுதலை விடுதலை விடுதலை
பறைய ருக்கும் இங்கு தீயர் 
புலைய ருக்கும் விடுதலை
பரவ ரோடு குறவருக்கும்
மறவ ருக்கும் விடுதலை.."

என்று முழங்கினார், மகாகவி பாரதி.

அவரது முழக்கத்துக்குக் காரணம், இந்தியாவில் அரசியல் சுதந்திரம் மட்டுமே கேள்விக்குறியாக இருக்கவில்லை. மாறாக, பொருளாதாரச் சுரண்டலும், அதனிலும் மேலாகச் சாதியரீதியான சுரண்டலும் மிதமிஞ்சி இருந்தன. அதன் அடையாளம்தான் கீழ்வெண்மணி படுகொலைச் சம்பவம். அரை படி நெல் கூலி உயர்வுகேட்டுப் போராடியதற்காக விவசாயக் கூலிகளும் அவர்களது குடும்பப் பெண்களும், குழந்தைகளும் தீக்கிரையாக்கப்பட்டனர். அந்தக் கொடூர சம்பவத்தின் 50-ம் ஆண்டு நினைவு தினம் இன்று.

அறிஞர் அண்ணாவின் ஆட்சிக்காலத்தில் அரங்கேறிய அந்தக் கொடூரச் சம்பவத்தினைப் பற்றி இங்கே பகிர்ந்துகொள்கிறார், ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் சி.ஆர்.செந்தில்வேல்.  

``கணவன் - மனைவி தகராறுக்குக்கூட ஒருவர் சிறுநீரை மற்றவரைக் குடிக்க வைப்பது, இருவரையும் இரு தூண்களில் கட்டிவைத்து சவுக்கால் அடிப்பது, பண்ணையார் நிலத்தில் தென்னம்பிள்ளை நடும்போது சேரியிலிருந்து ஒருவரை வரவழைத்து, அவர் எதிர்பார்க்காதபோது மூளை சிதறும் அளவுக்கு ஒரே அடியில் வீழ்த்தி அவரைக் குழியில் தள்ளி தென்னம்பிள்ளையை நடுவது, உழைக்கும் சேரி மக்களுக்குக் கெட்டுப்போன சோற்றைப் போடுவது, பண்ணையாரை எதிர்த்தால் குடிநீருக்கான கிணற்றில் மலத்தை அள்ளிப் போடுவது, எதிர்த்தவரை மரத்தில் கட்டிவைத்து உடம்பில் வெல்லத்தைக் கரைத்து ஊற்றி எறும்பு கடிக்கும்படி செய்வது, கட்டை விரலை வெட்டுவது உள்ளிட்டவை 1950-களில் தஞ்சைத் தரணியில் அரங்கேற்றிய கொடுமையான தண்டனைகளாகும். இந்தச் சூழ்நிலையில்தான் 1940-களின் தொடக்கத்தில் தஞ்சை மாவட்டத்தில், குறிப்பாக கீழத்தஞ்சையில் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகவும், நிலப்பிரபுத்துவ சுரண்டலுக்கு எதிராகவும் விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் திரட்டுவதில் முக்கியப் பங்காற்றினார், கம்யூனிஸ்ட் கட்சியின் சீனிவாச ராவ். அவரது தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சி வலுவாக நடத்திய போராட்டத்தின் விளைவாக, கோர வடிவிலான  தீண்டாமைக் கொடுமை கீழத்தஞ்சையில் ஒழிக்கப்பட்டது. ஆனால், அதற்கு அந்த மக்கள் கொடுத்த விலை கொஞ்சமல்ல.

இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு நடந்த நெஞ்சை உலுக்கும் கொலை வெறியாட்டங்களில், தமிழ்நாட்டில் 1968-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி தஞ்சை மாவட்டம் கீழவெண்மணியில் நிகழ்ந்த படுகொலை எளிதில் மறக்க முடியாத சம்பவமாகும். சாதிய மேலாதிக்கமும், நிலவுடைமையாளர்களின் ஆதிக்கமும் ஒன்றிணைந்து நடத்திய இந்தப் படுகொலையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 44 விவசாயக் கூலிகள் ஆண், பெண், குழந்தைகள் என வித்தியாசமின்றி கல்நெஞ்சக்காரர்களால் பூட்டிய வீட்டினுள் வைத்து எரித்துக் கொல்லப்பட்டனர். உலகெங்கும் கொண்டாப்படும் கிறிஸ்துமஸ் திருநாளை மக்கள் அனைவரும் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடிக் கொண்டிருக்க, கீழ்வெண்மணியில் தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு மட்டும் கொடிய இரவாகவும் விடியாத இரவாகவும் அமைந்தது டிசம்பர் 25.

விவசாயத் தொழிலாளர்கள் சங்கமாகத் திரண்டு கூலி உயர்வு கேட்டனர். தங்களுக்குக் கிடைக்கும் கூலியில் அரை படி நெல் உயர்த்தித் தர வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். அவர்களின் தொடர் கோரிக்கையின் விளைவாக 1967-ம் ஆண்டில் நடைபெற்ற முத்தரப்பு மாநாட்டில் கூலி உயர்வு ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், பல மிராசுதார்கள் ஒப்புக்கொண்ட கூலியைக் கொடுக்க மறுத்தனர். உள்ளுர் விவசாயத் தொழிலாளர்களைப் பணியவைக்க வெளியூர் ஆட்களை அமர்த்தினர். இத்துடன் நில்லாமல் விவசாயத் தொழிலாளர் சங்கங்களையே முடக்கிவிட வேண்டுமென்று நாகை வட்டார நிலப் பிரபுக்கள் தலைமையில் நெல் உற்பத்தியாளர் சங்கத்தை ஏற்படுத்தினர். அந்தச் சங்கத்திலிருந்து திட்டமிட்டு விவசாயத் தொழிலாளர்களைத் தாக்குவது, முக்கிய ஊழியர்களைக் கொலை செய்வது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இச்சதிச் செயல் சம்பந்தமாக அவ்வப்போது தஞ்சை மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கத்தினரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தினரும் அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் தெரிவித்தும் கொடூரத்தைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

ஐந்தாயிரம் ஏக்கர் நிலச் சொந்தக்காரர்களான குன்னியூர் சாம்பசிவ ஐயர், வலிவலம் தேசிகர், பூண்டி வாண்டையார், கபிஸ்தலம் மூப்பனார் போன்ற நிலப்பிரபுக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தனர். வடபாதி மங்கலம், நெடும்பலம் போன்ற பகுதிகளில் இருந்த நிலப்பிரபுக்கள் திராவிட இயக்க ஆதரவாளர்களாக இருந்தனர். நிலக்கிழார் கோபாலகிருஷ்ண நாயுடு நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார்

1968 டிசம்பர் 25 முன்னிரவில் மிராசுதார்களின் அடியாட்களுக்கும் தொழிலாளர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் இருகூர் பக்கிரி கொல்லப்பட்டார். அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என எல்லோரும் பயந்துகிடந்தார்கள். பக்கத்து ஊருக்குச் சென்று உதவி கேட்பதற்காக இளைஞர்கள் எல்லாம் ஊரைவிட்டுச் சென்றிருந்தார்கள். அதனால்தான் இரவு அந்தச் சம்பவம் நடந்தபோது ஊரில் பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளும் மட்டுமே இருந்தனர். அன்று இரவு தொழிலாளர் குடியிருப்புக்குள் நீலநிற போலீஸ் வேன் போய் நின்றது. அதிலிருந்து இறங்கியவர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே சென்றார்கள். கோபாலகிருஷ்ண நாயுடுதான் அவர்களை வழிநடத்திச் சென்றார். ராமையாவின் குடிசை அந்த ஊரின் கடைசியில் இருந்தது. அந்தக் குடிசையைத் தாண்டிப்போக முடியாத நிலையில், அந்தக் குடிசைக்குள் பதுங்கிக்கொண்டால் விட்டுவிடுவார்கள் என நினைத்த தொழிலாளர் குடும்பத்தினர் அந்தக் குடிசைக்குள் இருந்தனர்.

ஆனால், கொடுங்கோல் எண்ணம் கொண்ட மிராசுதார்கள் மனம் இறங்கவில்லை. தொழிலாளிகள், பெண்கள், குழந்தைகள் பதுங்கியிருந்த அந்தக் குடிசையின் கதவை வெளியில் தாழ்ப்பாள் போட்டு ஒட்டுமொத்தமாகத் தீ மூட்டி எரித்தனர். தீயின் செந்நாக்குகள் அவர்களைப் பொசுக்கத் தொடங்கியவேளையில், குடிசைக்குள் இருந்துவந்த கூக்குரல் எதனையும் காதில் வாங்கவில்லை, அந்தக் கும்பல். அதன்பின்பும் அவர்கள் வெறி அடங்காமல் குடிசைக்கு வெளியில் கதறிக்கொண்டிருந்த மூன்று சிறு குழந்தைகளையும் நெருப்பில் தூக்கி வீசினர்.

இரவு 8 மணிக்குச் சம்பவம் தொடர்பாக கீவளுர் காவல் நிலையத்துக்குத் தெரிந்தும் காவல் துறை இரவு 12 மணிக்கு வந்துள்ளது. இரவு 2 மணிக்கு தீயணைப்புப் படை வந்தது. மறுநாள் காலை 10 மணிக்குக் குடிசைக்குள் நுழைந்து கருகிய 44 சடலங்களை எடுத்தது. மேற்கண்ட 44 பேரும் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டது, அரை படி நெல் கூலி உயர்வு கேட்ட காரணத்துக்காக மிராசுதார்கள் அளித்த பரிசாகும். 

மிராசுதார்கள் வைத்த தீயில் மாதாம்பாள் என்ற பெண்மணி, தான் சாகும்போதும் தான் வளர்த்த பிள்ளையை தீ தின்றுவிடக் கூடாது என்று அவ்வாறு அணைத்தபடியே தாயும் சேயும் இணைந்தே கரிக்கட்டியாய் கிடந்த நிகழ்ச்சி பார்த்த அனைவரையும் விவரிக்க முடியாத மீளாத் துயரத்தில் ஆழ்த்தியது. 

இந்தக் கோர சம்பவத்தை அறிந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பி.ராமமூர்த்தி தலைமையில் வெண்மணி கிராமத்தினுள் நுழைந்தனர். வெண்மணியில் நடந்த இந்தக் கோர சம்பவத்தை எதிர்த்து தமிழகம் வெகுண்டெழவில்லை. பண்பாடு, நாகரிகம், மரபு பற்றியெல்லாம் விண்ணுக்கும் மண்ணுக்கும் எட்டுமளவு வாய் கிழியப் பேசப்படும் தமிழகத்தில், வெண்மணியில் வெந்து சாம்பலாக்கப்பட்ட 44 தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின்மீது குறைந்தபட்ச இரக்கம்கூடக் காட்டவில்லை. கம்யூனிஸ்டுகள் மட்டுமே போராடி வந்தனர். 

மக்களின் கொந்தளிப்பு வெளிப்படாத நிலையில் வெண்மணி படுகொலைகளுக்கு எதிராக அன்றைய முதலமைச்சர் அண்ணா, கணபதியா பிள்ளை தலைமையில் தீர்ப்பாயம் அமைத்தார். ஆனாலும், அடிப்படையான ஆதாரமான உண்மை வெளிவரவில்லை. வெண்மணி சம்பவத்துக்குக் காரணம் என்று சொல்லப்பட்ட நிலப்பிரபு கோபால கிருஷ்ண நாயுடு வகையறாக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டனர். 

நீதிமன்றம் தனது தீர்ப்பில் `கோபாலகிருஷ்ண நாயுடு போன்றோர் சமூகத்தில் செல்வாக்கும் அந்தஸ்தும் உள்ளவர்கள்; அவர்கள், இந்தக் கொலையைச் செய்திருக்க முடியாது' என்று கூறியது. இந்நிலையில்தான் 50 ஆண்டுகளுக்கு முன் கீழ்வெண்மணி ராமையாவின் குடிசையில் எரிந்து போன விவசாயக் கூலிகளின் சாம்பலினுள் ஆதிக்கச் சக்திகளுக்கு எதிரான தீ இன்றும் கனன்று கொண்டிருக்கிறது'' என்றார்.

கீழ்வெண்மணிச் சம்பவம் அவ்வளவு எளிதில் மறக்கக்கூடியது அல்ல...