Sarav Urs
நல்லவேளை டிரெஸ் எல்லாம் கண்டுபிடிச்சாய்ங்க... ஆதிகாலம் மாதிரி இலை, தழை எல்லாம் கட்டிட்டு இருந்திருந்தா, தீபாவளிக்கு டிரெஸ் எடுக்க எத்தனை மரம் ஏறி இறங்கணுமோ?

Yuva Krishna
இந்த தீபாவளியை ‘96’ தீபாவளி என்கிறார்கள். நிஜமான 96 தீபாவளிக்கு 10 படங்கள் வந்ததாக நினைவு. ‘அவ்வை சண்முகி’, ‘அலெக்சாண்டர்’, ‘கோகுலத்தில் சீதையெல்லாம்’ பட்டாசா ஓடிச்சி. தமிழ் சினிமாவின் வெற்றிகரமான ஆண்டு அது. ரஜினி படம் இல்லாமலேயே சமாளித்துக்கொள்ள முடியும் என்னும் நம்பிக்கை தியேட்டர்காரர்களுக்கு ஏற்பட்ட வருடம். விஜய் -அஜித் இருவரையும் ஆளாக்கிய வருடமும்கூட. முதன்முதலாகச் சர்வதேச அரங்குகளில் ஒரு தமிழ்ப்படம் வசூலை வாரிக் குவிக்க முடியும் என்கிற சாத்தியத்தைச் சாதித்துக் காட்டியது ‘இந்தியன்’.

Vaa Manikandan
நிரம்ப யோசித்து வெகு நிதானமாகப் பேசி எழுதிக்கொண்டிருப்பவர்கள் அப்படியேதான் இருப்பார்கள். எந்தத் தயக்கமும் இல்லாமல் உடான்ஸாக அடித்துத் தள்ளுகிறவர்களைத்தான் இந்த உலகம் கவனிக்கும். வெகு விரைவாகப் பிரபல்யம் அடையும் யாரை வேண்டுமானாலும் உதாரணமாக எடுத்துப் பார்க்கலாம்.

நித்யானந்தம்..! நித்யானந்தம்!

Thullukutti
இலங்கையில் தீபாவளிக்கு வெடிக்கும் பட்டாசில் எழும் ஒலியும், ஒளியும் இந்தியாவினுடையதாக இருக்க வேண்டும்!

# இலங்கை நாடாளுமன்றம் விரைவில் கூடுகிறது.

Sais Lakshmanan
ரணில் விக்கிரமசிங்கே, மஹிந்த ராஜபக்ஷே ஆகிய இரண்டு தரப்பையுமே சாராத சாதாரணப் பொதுமக்கள் கொழும்புவில் உள்ள லிபர்டி சந்திப்பில் தினமும் அமைதியாகத் திரண்டு பதாகைகளை ஏந்தி நிற்கின்றனர். இலங்கையில் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவேண்டும் என்பது அவர்களது கோரிக்கை.

Sundar Rajan
நியூட்ரினோ திட்டத்துக்குத் ‘தேசிய வனவிலங்கு வாரியத்திடம்’ அனுமதி வாங்காமல் திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது என்கிற இடைக்காலத் தடையை வரவேற்கிறோம். அதேநேரத்தில் சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்யாதது வருத்தமளிக்கிறது. - பூவுலகின் நண்பர்கள்

@sindhan
‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யுனிட்டி’ என்று எழுதியது சாதாரணப் பிழை. ஆனால், நீட் கேள்வித்தாள் பிழைகள் மிகப்பெரியவை. தமிழ் வழியில் தேர்வு எழுதிய ஆயிரக்கணக்கான மாணவர்களின் மருத்துவக் கனவைக் கேள்விக்குறியாக்கிய அந்தப் பிழைகள் விஷயத்தில் என்ன செய்தீர்கள் அரசே?

@sindhan
உலகின் மிகப்பெரிய சிலையை நமக்கு அமைத்துக்கொடுத்த சீனர்கள், உலகின் மிகப்பெரிய பாலத்தை அவர்களுக்கு அமைத்துக்கொண்டார்கள்!

@suyanalavaathi
`59 நிமிடத்தில் தொழிற்கடன்!’ - புதிய இணையதளத்தைத் தொடங்கிவைத்தார், பிரதமர் மோடி.

# அப்படியே இங்கிலாந்துக்கு விசாவும் எடுத்து கொடுத்துடீங்கனா நல்லா இருக்கும்!

@rahimgazali
புதுவையில் தீபாவளி பரிசாக ரேஷன் கார்டு வைத்துள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 1,000 வழங்கப்படும் - நாராயணசாமி

சேகுவாரா: நம்மளும் கொடுப்பமா ஃபிடல்?

ஃபிடல் : கஜானா காலியாகிடுமே சே?

மைக் டைசன்: அதெல்லாம் காலியாகாது. அதெல்லாம் அன்னைக்கு நைட்டுகுள்ளேயே டாஸ்மாக் மூலம் திரும்பவந்து சேர்ந்திடும்!

@giri47436512
அ.தி.மு.க 20 தொகுதிகளிலும் டொபசிட்கூட வாங்க முடியாது. - தினகரன்.

உங்களுக்கு லக்கி நெம்பர் இருபதாண்ணே! # டோக்கன் நினைவுகள்.

@nayagan_jk
ஹர்திக் படேல் போராட்டம் பண்ணி அவன் பின்னாடி குஜராத்துல ஒரு கூட்டத்தைச் சேர்க்காம இருந்திருந்தா, இதே படேலுக்கு ஊறுகாய்கூடக் கிடைத்திருக்காது என்பதே நிதர்சனம்!

@19siva25
`பட்டாசு வெடிங்க. ஆனா, சத்தம் வரக்கூடாது’ - தமிழக அரசு

# செல்லூராரைப் புதுசா கண்டுபிடிக்கச் சொல்லுங்க... வெடிக்கிறோம்.

@elaanoexcuses
படேல் சிலை அமெரிக்க சுதந்திர தேவி சிலையைவிட 3 மடங்கு பெரியது - மோடி

# இதுல பெருமைபட ஒண்ணுமில்லை. டாலர் மதிப்பு ரூபாயைவிட 67 மடங்கு பெருசா இருக்கேனு கவலைப்படணும், மிஸ்டர் சென்றாயன்!

@Thaadikkaran
வெடியின் தடைக்குப் பதிலா குடிக்குத் தடைனு போட்டிருந்தாலாவது பல குடும்பங்கள் சிறப்பான தீபாவளியைக் கொண்டாடும்!

@ajay_aswa
ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ. ஒரு லட்சம் கோடியைத் தாண்டியது - மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி

இப்போவாவது அந்த 15 லட்சத்த எங்க அக்கவுண்ட்ல போடுங்க ஆபீசர்...

@gks9559
நான் முதல்வராக இருந்தபோது அகமதாபாத் விமான நிலையத்தை ‘சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையம்’ என்று பெயர் மாற்றினேன். அதற்காக எனக்கு எதிராகக் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தியவர்கள் இதே பி.ஜே.பி-யினர்தான்.

- குஜராத் முன்னாள் முதல்வர் சங்கர் சிங் வஹேலா