சபரிமலை சர்ச்சையை பி.ஜே.பி விடுவதாக இல்லை. சபரிமலைக்கு தினம் ஒரு தலைவரை அனுப்பி அரசியல் களத்தில் ‘ஸ்கோர்’ செய்யத் தயாராகிவிட்டது பி.ஜே.பி!

இந்து ஐக்கிய வேதி அமைப்பின் தலைவரான 53 வயது சசிகலா டீச்சர் நவம்பர் 16-ம் தேதி இருமுடிகட்டி சபரிமலைக்குச் செல்ல முயன்றபோது, மரக்கூட்டத்தில் அவரைக் கைது செய்தது கேரள போலீஸ். மறுநாளே இதேபோல் செல்ல முயன்ற பி.ஜே.பி-யின் கேரள மாநில பொதுச்செயலாளர் சுரேந்திரன், நிலக்கல்லில் கைது செய்யப்பட்டார். உடனே, “பி.ஜே.பி தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் என்று தினம் ஒருவர் சபரிமலைக்கு வருவார்கள். முடிந்தால் அரசு தடுக்கட்டும்” என்று கேரள பி.ஜே.பி தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை அதிரடியாக அறிவித்தார். சொன்னதுபோலவே மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம், எம்.பி முரளீதரன் சென்றனர். அப்போது அமைதி காத்தது போலீஸ். நவம்பர் 21-ம் தேதி மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் வருகையால் மீண்டும் தொடங்கியது பிரச்னை.

பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் இருமுடி கட்டியபோதே, “தடையை மீறி சபரிமலையில் சரணகோஷம் போடுவேன். நடை அடைத்த பிறகும் சன்னிதானத்தில் தங்குவேன்” என்று பிரச்னையை கையோடு அழைத்துக்கொண்டு தான் மலையேறினார். அவர் நிலக்கல் சென்றபோதே, பத்தணம்திட்டா எஸ்.பி-யான யதிஷ் சந்திராவுடன் மோதல் ஏற்பட்டது. அமைச்சரின் வாகனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ‘தனியார் வாகனங்கள் அனைத்தையும் அனுமதிக்க வேண்டும்’ என்று எஸ்.பி-யிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். அதற்கு, “பிரச்னை ஏற்பட்டால் நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறீர்களா?” என்று அதிரடி காட்டினார் எஸ்.பி. பிரச்னை வெடித்தது. எஸ்.பி-க்கு எதிராக பி.ஜே.பி-யினர் கொந்தளித்தனர். “48 மணி நேரத்தில் எஸ்.பி-யை மாற்ற வேண்டும்” என்று மத்திய உள்துறைக்கு கேரள பி.ஜே.பி-யினர் கடிதம் அனுப்பியுள்ளனர்.

ஐப்பசி மாதம் சபரிமலை நடை திறக்கப்பட்டபோது, நிலக்கல்லில் போராட்டம் நடத்திய சங் பரிவார் அமைப்பினர்மீது ஐ.ஜி மனோஜ் ஆபிரகாம் தலைமையிலான போலீஸ் தடியடி நடத்தியது. ‘ஐ.ஜி வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், பக்தர்களிடம் இப்படி நடந்துகொள்கிறார்’ என்று பி.ஜே.பி குற்றம்சாட்டியது. இப்போது, எஸ்.பி யதீஷ் சந்திராவைக் குறிவைத்துள்ளனர். எஸ்.பி-க்கு ஆதரவாக ஐ.பி.எஸ் அதிகாரிகள் சங்கம் குரல் எழுப்பியுள்ளது. இதுகுறித்துப் பேசிய கேரள அமைச்சர் ஜி.சுதாகரன், “பி.ஜே.பி தலைவர்களுக்கும் மத்திய அமைச்சர்களுக்குமான இடம் சபரிமலை அல்ல. யதீஷ் சந்திரா முன்பாக பொன்.ராதா கிருஷ்ணன் சிறுமையாகி விட்டார்” என்றிருக்கிறார். இவற்றுக்கிடையே சிக்கித் தவிக்கிறார்கள் அப்பாவி ஐயப்பப் பக்தர்கள்!

- ஆர்.சிந்து
படம்: ரா.ராம்குமார்