Published:Updated:

``பினராயி விஜயன் தலையீடு குறித்து எங்களுக்குத் தெரியாது!'' - வழிபாடு நடத்திய பெண்கள் பேட்டி 

``பினராயி விஜயன் தலையீடு குறித்து எங்களுக்குத் தெரியாது!'' - வழிபாடு நடத்திய பெண்கள் பேட்டி 
``பினராயி விஜயன் தலையீடு குறித்து எங்களுக்குத் தெரியாது!'' - வழிபாடு நடத்திய பெண்கள் பேட்டி 

பரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபாடு நடத்திய கனகதுர்கா, பிந்து ஆகிய இரு பெண்கள் தற்போது மறைவிடத்தில் தங்கியுள்ளனர். மலையாள மனோரமா தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளனர். 

photo:  on manorama

கனகதுர்கா தன் பேட்டியில், ``உச்சநீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் போலீஸ் அதிகாரிகள் உதவியுடன் சபரிமலை தரிசனம் செய்வதே என் நோக்கம். இரு போலீஸ் எஸ்.பி-க்கள் நாங்கள் மலை ஏற உதவிக்கரமாக இருந்தனர். பக்தர்களுடன் சேர்ந்தே மலை ஏறினோம். எந்த பக்தரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. ஆனால், இந்த விஷயத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலையீடு இருந்ததா என்பது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது'' என்று கூறியுள்ளார். 

நீங்கள் பக்தர்களா அல்லது சமூக செயற்பாட்டாளர்களா என்கிற கேள்விக்கு,  ``சமூக செயற்பாட்டாளர்கள் பக்தர்களாக இருக்க முடியாதா? என்று கனகதுர்கா பதில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ``உச்சநீதிமன்றம் பெண்களுக்கு அனுமதி அளித்துள்ளது. அப்படியிருக்கையில் சமூக செயற்பாட்டாளர்கள், பக்தர்கள் யார் வேண்டுமானாலும் அங்கே செல்வதற்கு உரிமை உண்டு . சபரிமலைக்கு நாங்கள் ஆம்புலன்ஸில் செல்லவில்லை. நடந்தே சென்றோம். நான் சபரிமலை சென்றதால் என் கணவர் என்னை விட்டுப் பிரிந்து சென்று விடவில்லை.  ஆனால், எங்களுக்குள் மாறுபட்ட கருத்து உண்டு. என் பாதுகாப்பு கருதி நான் சபரிமலை செல்வதை அவர் தடுத்தார். எந்த மாவோயிஸ்ட் அமைப்புகளுடனும் எனக்குத் தொடர்பில்லை''  என்றும் தெரிவித்துள்ளார். 

பிந்து கூறுகையில், ``கடந்த 24-ம் தேதி சபரிமலை ஏறிய எங்களை பக்தர்கள் விரட்டினர். அப்போது, எனக்குள் எப்படியாவது மலை ஏறி விட வேண்டுமென்கிற பிடிவாதம் ஏற்பட்டது. அதனால்தான் வீட்டுக்குச் செல்லாமல் மறைவிடத்தில் தங்கியிருந்தோம். ஒருவேளை வீட்டுக்குச் சென்றிருந்தால் மீண்டும் இங்கு வருவதற்கான வாய்ப்பு ஏற்படாமல் போயிருக்கலாம். எங்கள் ஆசை நிறைவேற இரு மாவட்ட எஸ்.பி-க்கள் உதவியாக இருந்தனர். நண்பர்களின் பாதுகாப்பு கருதி நாங்கள் தங்கியிருந்த இடம் குறித்து கூற முடியாது. நான் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவள் இல்லை. மார்க்சிஸ்ட் லெனின் கட்சி மத்தியக் குழுவில் இருந்தேன். கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து வெளியேறி விட்டேன்.

பாரதிய ஜனதா கட்சி நடத்திய மனித உரிமை தொடர்பான கூட்டங்களில் நான் பங்கேற்றிருக்கிறேன். அதற்காக நான் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவள் இல்லை. தற்போது, சபரிமலை ஏறியதற்காக நான் கம்யூனிஸ்டும் அல்ல. சபரிமலை செல்ல பெண்கள் முயன்றால் அவர்கள் மீது மாவோயிஸ்ட் என்கிற முத்திரை குத்துவது வழக்கமாகி வருகிறது. சந்நிதானம் வரை சென்றதால் என் குடும்பத்தில் எந்த பிரச்னையும் இல்லை. என்னுடன் கணவர் ஹரிஹரனும் சந்நிதானம் வரை வந்தார். என் தாயார், சகோதரர் நான் சபரிமலை சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உண்டு. என் தாயார் தன் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்'' என்றார். 

இதற்கிடையே, இலங்கையைச் சேர்ந்த 46 நிரம்பிய வயது சசிகலா என்கிற பெண் கணவர் குழந்தையுடன் இன்று போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை ஏற முயன்றார். சந்நிதானம் அருகே போராட்டம் நடந்ததையடுத்து அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது சசிகலா ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். சசிகலாவின் கணவர் சரவணமாறன் பம்பை காவல் நிலையத்தில் உள்ளார்.