Published:Updated:

ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேர் விடுதலை

ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேர் விடுதலை
ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேர் விடுதலை

ராமேஸ்வரம்: இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் இன்று மாலை ராமேஸ்வரம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேர் விடுதலை

ராமேஸ்வரத்திலிருந்து கடந்த மாதம் 6ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 30 பேரை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றனர். இவர்கள் மீன்பிடிக்க சென்ற 5 விசைப்படகுகளையும் இலங்கைக்கு இழுத்து சென்றனர். பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேர் விடுதலை

இதையடுத்து அனுராதபுரம் சிறையில் மீனவர்கள் 30 பேரும் அடைக்கப்பட்டிருந்தனர். இதன் பின்னர் 3 முறை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மீனவர்களின் சிறைகாவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. கடந்த 6ஆம் தேதி மீண்டும் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை இம்மாதம் 20ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
 

##~~##
இதனிடையே இலங்கையில் சிறைவைக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரும் குற்றமற்றவர்கள் என இலங்கை அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதனை நீதிமன்றத்திலும் இலங்கை அரசு தெரிவித்தது. இதையடுத்து இன்று காலை 30 மீனவர்களும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இலங்கை அரசு தரப்பில் மீனவர்கள் குறித்து குற்றச்சாட்டு ஏதும் சொல்லப்படாததால் மீனவர்களை விடுவித்து மன்னார் நீதிமன்ற நீதிபதி உத்திரவிட்டார். இதையடுத்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் இன்று இரவு ராமேஸ்வரம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
-இரா.மோகன்
படம்:
உ.பாண்டி