Published:Updated:

கொலையான தமிழ் மாணவர் அபிமன்யூ குடும்பத்துக்கு புதிய வீடு! மார்க்சிஸ்ட் கட்சி கட்டிக் கொடுத்தது

கொலையான தமிழ் மாணவர் அபிமன்யூ குடும்பத்துக்கு புதிய வீடு! மார்க்சிஸ்ட் கட்சி கட்டிக் கொடுத்தது
News
கொலையான தமிழ் மாணவர் அபிமன்யூ குடும்பத்துக்கு புதிய வீடு! மார்க்சிஸ்ட் கட்சி கட்டிக் கொடுத்தது

கொலையான தமிழ் மாணவர் அபிமன்யூ குடும்பத்துக்கு புதிய வீடு! மார்க்சிஸ்ட் கட்சி கட்டிக் கொடுத்தது

ர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் கொலையான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச்  சேர்ந்த அபிமன்யூ குடும்பத்துக்கு, ரூ.35 லட்சத்தில் புதிய வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய வீட்டுக்கான சாவியை கேரள முதல்வர் பினராயி விஜயன் வழங்குகிறார். 

photo courtesy: on manorama

இடுக்கி மாவட்டத்தில் உள்ள வட்டவட என்ற கிராமத்தைச்  சேர்ந்த இவரின்  பெற்றோர், தோட்டத் தொழிலாளர்கள். தமிழகத்தை பூர்விகமாகக் கொண்டவர்கள் .  அபிமன்யூ, முதல் தலைமுறை கல்லூரி மாணவர். கடந்த ஆண்டு, மகாராஜா கல்லூரி வளாகத்தில் கேம்பஸ் ஃபிரன்ட்  என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் விளம்பரம் எழுதிய இடத்தில், 'மதவாத கேம்பஸ் ஃபிரன்ட் ' என்று மாற்றி  எழுதியிருக்கிறார் அபிமன்யூ. இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், கல்லூரி வளாகத்தில் வைத்தே அவர் கொலைசெய்யப்பட்டார். இந்தச் சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அபிமன்யூவின் மரணத்தால் நிலைகுலைந்துபோன அவரின் குடும்பத்துக்கு வீடு கட்டிக் கொடுப்பதாக, மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்திருந்தது.  அபிமன்யூவின் தற்போதைய வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில், 10 சென்ட் நிலத்தில்  புதிய வீடு கட்டும்  பணிகள் நடைபெற்று வந்தன.  பணிகள் நிறைவடைந்துவிட்டது.  கேரள முதல்வர் பினராஜி விஜயன், ஜனவரி 14-ம் தேதி, புதிய வீட்டுக்கான சாவியை  வழங்குகிறார். ரூ. 35 லட்சம் செலவில் கட்டப்பட்ட வீடு,  மூன்று படுக்கை அறைகள் கொண்டது.

முன்னதாக, கடந்த செப்டம்பர் 11-ம் தேதி, அபிமன்யூவின் சகோதரி கௌசல்யாவுக்கு மார்க்சிஸ்ட் கட்சி செலவில் திருமணமும் நடத்தி வைக்கப்பட்டது. இது தவிர, போதை மருந்து கடத்தல் கும்பலால் கொலைசெய்யப்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி காசிநாதன் அபிமன்யூ பெயரில்,  நூலகம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.