Published:Updated:

ஒரு மாத சிறைவாசத்துக்கு பிறகு ராமேஸ்வரம் வந்தனர் மீனவர்கள் (படங்கள்)

ஒரு மாத சிறைவாசத்துக்கு பிறகு ராமேஸ்வரம் வந்தனர் மீனவர்கள் (படங்கள்)
ஒரு மாத சிறைவாசத்துக்கு பிறகு ராமேஸ்வரம் வந்தனர் மீனவர்கள் (படங்கள்)

ராமேஸ்வரம்: ஒரு மாதமாக இலங்கை சிறையில் வாடிய ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேர் நேற்றிரவு ராமேஸ்வரம் திரும்பினர்.
 

ஒரு மாத சிறைவாசத்துக்கு பிறகு ராமேஸ்வரம் வந்தனர் மீனவர்கள் (படங்கள்)

கடந்த மாதம் 6ஆம் தேதி இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரையும், 5 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றனர். ஒரு நாள் முழுவதும் வவுனியா காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்ட மீனவர்கள் மறுநாள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை நீதிமன்ற காவலில் வைக்குமாறு மன்னார் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இவர்கள் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
 

ஒரு மாத சிறைவாசத்துக்கு பிறகு ராமேஸ்வரம் வந்தனர் மீனவர்கள் (படங்கள்)

மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்டதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம், ரயில் மறியல், சாலை மறியல் என பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனாலும் சிறை வைக்கப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்படாமல் தொடர்ந்து 4 முறை சிறை நீட்டிப்பு செய்யப்பட்டனர்.
 

ஒரு மாத சிறைவாசத்துக்கு பிறகு ராமேஸ்வரம் வந்தனர் மீனவர்கள் (படங்கள்)

இந்தநிலையில் இலங்கை கடற்படையினரால் பிடித்து வரப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் அப்பாவிகள் என இலங்கை அரசு கருத்து தெரிவித்திருந்தது. இதே கருத்தை மன்னார் நீதிமன்றத்திலும் இலங்கை அரசு தெரிவித்தது. இதையடுத்து நேற்று காலை அனுராதபுரம் சிறையில் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரும் மன்னார் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு நீதிபதி மீனவர்களை விடுவித்து உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். பின்னர் அவர்களது படகுகளுடன் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
 

ஒரு மாத சிறைவாசத்துக்கு பிறகு ராமேஸ்வரம் வந்தனர் மீனவர்கள் (படங்கள்)

மீனவர்கள் 30 பேரும் நேற்று மாலை 4.30 மணியளவில் சர்வதேச கடல் எல்லையில் காத்திருந்த இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைத்தனர். இந்திய கடலோர காவல்படையினர் 30 மீனவர்களையும் நேற்றிரவு 8 மணிக்கு ராமேஸ்வரம் துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.
 

ஒரு மாத சிறைவாசத்துக்கு பிறகு ராமேஸ்வரம் வந்தனர் மீனவர்கள் (படங்கள்)

இவர்களின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த மீனவர்களின் குடும்பத்தினர், விடுதலையாகி திரும்பிய மீனவர்களை கண்ணீர் மல்க கட்டியணைத்து வரவேற்றனர். இதையடுத்து, மீனவர்களிடம் போலீஸார் மற்றும் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தியபின் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
 

ஒரு மாத சிறைவாசத்துக்கு பிறகு ராமேஸ்வரம் வந்தனர் மீனவர்கள் (படங்கள்)

கரை திரும்பிய மீனவர்கள் கூறுகையில், ‘‘ஏப்ரல் 6ஆம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எங்களை பிடித்து சென்றனர். அவர்கள் வந்த கப்பலை கொண்டு எங்கள் படகின் மீது மோதி நிறுத்தினர். இதில் மார்டின் என்பவரது படகு சேதமானது. இதன் பின் எங்களை தங்கள் கப்பலில் ஏற்றிகொண்டு படகின் டிரைவர்களை மட்டும் எங்களது படகுகளிலேயே வைத்து கொண்டு வவுனியா கரைக்கு கொண்டு போனாங்க. அங்க உள்ள போலீஸாரிடம் எங்களை ஒப்படைச்சாங்க.
 

ஒரு மாத சிறைவாசத்துக்கு பிறகு ராமேஸ்வரம் வந்தனர் மீனவர்கள் (படங்கள்)

மறுநாள் மன்னார் கோர்ட்டுக்கு கூட்டிட்டு போனாங்க. அங்க இருந்த நீதிபதி எங்களை சிறையில் வைக்க சொன்னாரு. இதே போல் 4 தடவை நீதிபதி உத்தரவு போட்டாரு. 7ஆம் தேதி இரவு சிறையில் இருந்த எங்களை இலங்கை அரசு விடுவிக்க சொல்லிவிட்டதாக தகவல் சொன்னாங்க. இதையடுத்து நேற்று காலை மன்னார் நீதிமன்றத்துக்கு கூட்டிட்டு போய்  விடுதலை செஞ்சாங்க. நாங்க சிறையில இருந்த போது இலங்கை அமைச்சர் தொண்டைமான், மீன்துறை அதிகாரிகள் எல்லாம் வந்து நலம் விசாரிச்சாங்க. அவங்களோட முயற்சியாளதான் நாங்க விடுதலையாக முடிந்தது’’ என்றனர்.

இரா.மோகன்

படங்கள்:
உ.பாண்டி