Published:Updated:

ஆஹான்

ஆஹான்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆஹான்

ஆஹான்

ஆஹான்

 Deva
தமிழகத்தில் காலியாக உள்ள 20 MLA பதவிகளுக்கு ரூ.10,000 ஊதியத்தில் தற்காலிக MLA-க்களை அரசு நியமனம் செய்யலாமே?!

 Bala Bharathi

இத்தனை ஆயிரம் ஊழியர்களுக்கு அரசு இழைத்த துரோகம், விலைமதிப்பற்றது..!

 Kappikulam J Prabakar
நாடு முழுக்க  8-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு என்பது மாணவர்கள் மீதான வன்முறை.

இது, கல்லாக்கட்டும் தனியார் பள்ளிகளுக்கு வருமானம் பெருக்கும் திட்டம்.

இதனால், பயிற்சி மையங்கள் புதிது புதிதாக முளைக்கும், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் கிடைக்கும், குழந்தைகள் பாடுதான் திண்டாட்டம், பாவம்.

ஆஹான்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

A Sivakumar
ஜனவரி 30.

காந்தியடிகள் கொலை செய்யப்பட்ட நாள்.

காந்தியடிகள் நினைவுநாள் என்பதற்கும், கொலை செய்யப்பட்ட நாள் என்பதற்குமான வித்தியாசம்தான் அரசியல்.

ஆஹான்

 செந்தீ யாழ்
கொத்தனாருக்குச் சம்பளம் ரூ.20,000... பரோட்டா/டீ மாஸ்டருக்குச் சம்பளம் ரூ.20,000, எஞ்சினியருக்குச் சம்பளம் எட்டாயிரமா?ன்னு கேட்டா, அது நியாயம்.

எஞ்சினீயருக்கே எட்டாயிரம்தான், கொத்தனாருக்கு எதுக்கு ரூ.20,000? அப்படீன்னு கேட்டா அது வயித்தெரிச்சல்_அநியாயம்.

உழைப்புக்கேற்ற ஊதியம் கேட்பதுதான் நியாயமும் உரிமையும் ஆகும்.

 Kumaresan Asak
சாதி அடையாளம் இயற்கையாய்ப் பிறப்பதில்லை. குலம் வளர ஒரு கொழுந்து வந்ததென்று சொல்லியே செயற்கையாய்ப் பிரசவிக்கப்படுகிறது.

சாதிப்புத்தி தானாய் வளர்வதில்லை. நமக்கென்று சில சடங்கு முறைகள் இருக்கின்றனவென்று பழக்கியே வெளியேயிருந்து புகுத்தப்படுகிறது.

சாதி ஆணவம் அதுவாய் முளைப்பதில்லை. என்றோ ஏதோவொரு சிற்றூரை ஆண்ட பரம்பரையென்று பேசியே வலுவாய் விளைக்கப்படுகிறது.

சாதி ஆணவக் கொலை தன்னுணர்வாய் நடப்பதில்லை. கௌரவமே பெரிதென்று நாலு பேர் உசுப்பியே ஈரம் துடைத்து நடத்தி வைக்கப்படுகிறது.
(ஆந்திராவில் சாதி ஆணவக் கொலையான இளைஞரின் இணையருக்குக் குழந்தை பிறந்ததென்ற செய்தி ஏற்படுத்திய சிந்தனை.)

ஆஹான்

Muthukumar Jayaraman
எய்ம்ஸ் என்பது ஆராய்ச்சி மருத்துவமனை. குழந்தைகள் நலப்பிரிவில் ஒரு வாரத்திற்குப் பத்துக் குழந்தைகளை மட்டும் உள்நோயாளிகளாக அனுமதிக்கும் தில்லி எய்ம்ஸ். மற்ற நோயாளிகள் எதிரில் உள்ள தில்லி சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு மடைமாற்றப்படுவார்கள். தமிழ்நாட்டின் தலைமைக் குழந்தைகள் மருத்துவமனையான எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை, ஒரு நாளைக்கு 150 உள்நோயாளிகளை அனுமதிக்கக்கூடியது.

ஒவ்வொரு மாவட்ட மருத்துவக் கல்லூரியும், தாலுக்கா அரசு மருத்துவமனைகளும் சிகிச்சை அளிக்கும் உள்நோயாளிகள்/வெளிநோயாளிகள் எண்ணிக்கையில் நூற்றில் ஒரு பங்கை எய்ம்ஸால் தொட முடியாது. ஆராய்ச்சி மருத்துவமனைகளால் தாய் சேய் இறப்பு விகிதத்தைக் குறைக்க முடியாது.

இத்தனை ஆண்டுகள் ஒரு எய்ம்ஸ்கூட இல்லாமல் தமிழகத்தில் சுகாதாரக் குறியீடுகள் சிறப்பாகவே உள்ளன.

 மேகநாதன் முனுசாமி
எல்லோருக்கும் தரமான மருத்துவம் கிடைக்க வழி செய்யும் முயற்சிகளை அரசு எடுத்துவருவதாக மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா கடந்த வாரம் கூறினார்.

ஆனால், அதற்கு அடுத்த நாளே அதிர்ச்சிகரமான ஒரு முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. அதாவது, வெளிநாட்டு நிறுவனங்கள் கண்டுபிடிக்கும் புதுமையான மருந்துகளுக்கு இந்தியாவில் விலைவரம்பு விதிப்பதிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

ஆஹான்

 ajmalnks
அன்னா ஹசாரேவும் ஜெ.தீபாவும் ஒன்னு.

எப்ப தூங்குவாங்க, எப்ப கோமாவுல இருந்து முழிப்பாங்க, எப்ப அறிக்கை விடுவாங்கன்னு அவங்க ரெண்டு பேருக்குமே தெரியாது.

 ArunkumarTNR

பணமதிப்பிழப்பால் வீடுகளின் விலை குறைந்துள்ளது: பிரதமர் மோடி பேச்சு

அப்ப அந்த ராஷ்டிரபதி பவன் என்ன ஒரு ரெண்டு லட்சம் இருக்குமா?

 Thaadikkaran
“பண மதிப்பிழப்பால் வீடுகளின் விலை குறைந்தது” பிரதமர் மோடி

#ஆனா வாங்கத்தான் யார்கிட்டயும் காசு இல்ல..!!

 Annaiinpillai

தடைசெய்யப்பட்ட மருந்துகளை விற்பவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

# குட்கா மட்டும் விற்கலாமா பாஸ்?!

 iam_ni_la
அதிமுகவினரை வெற்றிபெறச்செய்தால் தான், காவிரி நீரை பெற்றுத்தர முடியும் - தம்பிதுரை எம்.பி.

ஏன் இப்ப அ.தி.மு.க அயல் நாட்டுல ஆட்சி செஞ்சிட்டு இருக்கா?