Published:Updated:

ஆஹான்

ஆஹான்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆஹான்

ஆஹான்

ஆஹான்
ஆஹான்

Thullukutti
முதலைக் கண்ணீர் வடிக்கும் அரசு!

அரசின் மொத்த வருவாயில் அரசு ஊழியர்களுக்கு 85,026 கோடி ரூபாய் செலவாகிவிடுகிறது என்று கண்ணீர் விடும் மாநில அரசுதான், 12 லட்சம் அரசு ஊழியர்களின் வாக்குகளைப் பெற பொங்கல் பரிசு 1,000 ரூபாய், விலையில்லா வேட்டி சேலை வழங்கிவிட்டு, அரசு ஊழியர்களுக்கே பெரும்பாலான வருவாய் சென்றுவிடுவதால், வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த முடியவில்லை என முதலைக் கண்ணீரும் வடிக்கிறது!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆஹான்

D S Gauthaman
நடிகர் ரஜினி, திரைப்படங்களில் ஸ்டைலாக சிகரெட் பிடிப்பதையும், மற்ற மேனரிசங்களையும் ஃபாலோ பண்ணும் ரசிகர்கள், அவர் தன் மூத்த மகளின் காதலை ஏற்றுக்கொண்டு திருமணம் செய்து வைத்ததையும், இரண்டாவது பெண்ணுக்கு தற்போது மறுமணம் செய்துவைத்திருப்பதையும் உள்வாங்கிக்கொண்டால் நல்லது. சமூகத்துக்கு அவசியமான மனப்பக்குவம் இது. இந்த இரண்டையும் இயல்பாக ஏற்கும் பக்குவம், பெற்றோர்களுக்கு வாய்த்தால், ‘நாலு விதமாகப்பேசும்’ அந்த நாலு பேர் வாய மூடிட்டு அவங்க வேலையைப் பார்த்துட்டுப் போவாங்க! ‘தந்தை’ ரஜினிக்குப் பாராட்டுகள்!

Rajagopal Subramaniam

பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவுரையை மீறி, பிரதமர் அலுவலகம் செயல்பட்டதால் ரஃபேல் ஒப்பந்தத்தில் நமது நலன்கள் பாதிக்கப்பட்டுள்ளது என ஒரு பத்திரிகை ஆதாரத்துடன் வெளியிட்டி ருக்கிறது.

# பிரதமரின் ‘அறிவுரை’யை மீறி 2-ஜி அலைக் கற்றையை ஏலம் விடாமல் இருந்தது ஏன் என்று ஓயாமல் ஒப்பாரி வைத்தவர்கள், ஊழல் எதிர்ப்புப் போராளிகள் தற்போதாவது வாயைத் திறப்பார்களா?

Kanagaraj Karuppaiah
“ஜீ! ஊழல் தடுப்பு ஷரத்தை ரஃபேல் ஒப்பந்தத்தி லிருந்து நீக்கியது குற்றம்னு சொல்றாங்களே!”

“அது ஊழல்வாதிகளைத் தண்டிக்கும் ஷரத்து. நாமதான் ஊழலே செய்யறதில்லையே; அதனால்தான் நீக்கிட்டோம்னு ட்ரென்டாக்குங்க ஜீ.”

யெஸ். பாலபாரதி
5-ம் வகுப்புக்கும் 8-ம் வகுப்புக்கும் இனி பொதுத்தேர்வு.

படிக்கச் சிரமப்படுபவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு ஏற்றத் தொழிற்கல்வி கொடுப்பாங்க போல! எதிர்காலத்தில் எவனும் போட்டிக்கு வரக்கூடாது எனத் தொடக்கத்திலேயே கிள்ளியெறிய முடிவு செய்துவிட்டது அரசு.

பூ.கொ. சரவணன்

Surgical strike is hereafter நுண்ணியத் தாக்குதல். எல்லாம் நுண்ணரசியல். நுண்மையான இதெல்லாம் நுண்மாண் நுழைபுலம் இல்லாத எம் போன்ற நுண்ணறிவு இல்லாத ஆட்களுக்கு துலக்கமாக முடியாது.
சிறுநீர் பாசனம் போல என்ன விளக்கம் வரும்னு நினைச்சாத்தான் கிறக்கமா இருக்கு.

Saraa Subramaniam
#GoBackModi-ன்ற ஹேஷ்டேகையே போடமுடியாதுன்னு உறுதியா இருக்குற எங்கிட்ட #GoBackSadistModi-ன்ற ஹேஷ்டேகையும் யூஸ் பண்ணுன்னு சொன்னா, நான் தூண்டப்பட்டு விடுவேனா என்ன?

மன்னை முத்துக்குமார்
தாயை மணக்கோலத்தில் பார்ப்பது ஒரு மகனுக்கு, வரமா? சாபமா? இப்படிச் சமூக வலைதளங்களில் விவாதம் நடக்கிறது. இந்தக் கேள்வியே ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிபாடு. காலம் காலமாய் இரண்டு மூன்று மனைவிகளை மணந்த அப்பாக்களைப் பார்த்து வளர்ந்த குழந்தைகளைப் பார்த்து யாரும் இப்படி கேட்டதில்லையே!

ஆஹான்

sundartsp
பட்ஜெட் எல்லாம் தாக்கல் செய்வதே யார் கூட்டணியில் யார் இருக்கான்னு கண்டுபிடிக்கத்தான் போல.

SkSoundhar

மோடியை எதிர்த்தால் அரசியல் களத்தில் காணாமல்போவார்கள்  - ஹெச்.ராஜா.

# அத்வானி மாதிரிதானே..!

amuduarattai
பா.ஜ.க கூட்டணியில் எதிர்பார்க்கும் தொகுதி அளிக்காவிட்டால் தனித்துப் போட்டி - பாரிவேந்தர்.

# மிரட்டல், பா.ஜ.க-வுக்கா... இல்ல மக்களுக்கா?

Suyanalavaathi

தொண்டர்களிடம் கருத்துக்கேட்ட பிறகே கூட்டணியை அறிவிப்பேன் - த.மா.க தலைவர் ஜி.கே.வாசன்

# எந்தக் கட்சியோட தொண்டர்கள்கிட்ட கேட்பாரு..!

thoatta
தமிழக கடன் 3,97,495 கோடியாம்.

செருப்பா விக்கிறாங்க... நாலு லட்சம் கோடின்னு சொல்ல வேண்டியதுதானே!

amuduarattai

தங்களால் வெற்றிபெற முடியாத தொகுதிகளை, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்குவதற்குப் பெயர்தான் ‘அரசியல் சாணக்கியம்’.

SubashiniBA

பிரதமரை வரக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை - கமல்ஹாசன்..

நாங்க ‘திரும்பிப்போ’ என்றுதானே சொல்றோம்!

Stalin__SP

மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விருப்ப மனுத்தாக்கல் செய்துள்ளவர்கள் (இதுவரை)

துணை முதல்வர் ஓ.பி.எஸ் மகன்
அமைச்சர் எம்.சி.சம்பத் மகன்
அமைச்சர் சி.வி.சண்முகம் அண்ணன்
அமைச்சர் தங்கமணி சம்பந்தி
அமைச்சர் வீரமணி உறவினர்
முன்னாள் அமைச்சர் வளர்மதி மகன்

maharaja_2020
பல்கலைக்கழக வளாகத்தில் யானைகள் வருகிறது என்பதைவிட யானைகள் வலம் வரும் இடத்தில், பல்கலைக்கழகம் வந்துள்ளது என்பதே உண்மை.