Published:Updated:

ஆஹான்

ஆஹான்
பிரீமியம் ஸ்டோரி
ஆஹான்

ஆஹான்

ஆஹான்

ஆஹான்

Published:Updated:
ஆஹான்
பிரீமியம் ஸ்டோரி
ஆஹான்
ஆஹான்

கரிகாலன்
ஒரு ராணுவ வீரன் 18 வயதில் பணிக்குச் சேர்கிறான். 18 ஆண்டுகள் பணிபுரிந்து 36-வது வயதில் வெளியேற்றப்படுகிறான். 18 வயதில் ராணுவத்தில் சேர்பவர்கள் பட்டப்படிப்பு முடித்திருக்க வாய்ப்பில்லை. பெரும்பாலும் 10, +2 படித்தவர்களே. இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், ஓர் இடைநிலை ஆசிரியர் ஊதியத்தைவிடவும் குறைவானது. குடும்பத்தைப் பிரிந்து எங்கோ அனாதையாய்ப் பணிசெய்யும் அவலம், அரபு நாடுகளில் கூலி வேலை செய்வதற்குச் சமம். அடித்தட்டில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு மிகச் சுமார் தரமே. இவர்களது உடை, மருத்துவம், சாப்பாடு என எல்லா இடங்களிலும் ஊழல் நிகழ்கிறது.

ஆஹான்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

36 வயதுவரை சக்கையாகப் பிழிந்து, தூக்கி வெளியே எறியும்போது, இவர்களால் எந்த வேலைக்குப் போகமுடியும்? இத்துப்போன துப்பாக்கியைச் சுமந்து ஏதோ ஒரு வங்கியில் கதவு திறந்துவிடும் காவலர்களாக நிற்கிறார்கள். திடீர் தாக்குதல்களைத் தேசம் தேர்தல்களுக்காக நடத்தும்போது, இந்த அப்பாவிகள் துப்பாக்கி குண்டுகளுக்குப் பலியாகிறார்கள். இவர்கள் சிந்திய ரத்தத்தை, இழந்த ஆன்மாவைத் தலைவர்கள் விற்கத் தொடங்குகிறார்கள். மக்களும் இவர்களின் தியாகங்களுக்கு இரண்டு சொட்டு கண்ணீரைத் தானமளித்து விலகுகிறார்கள். ராணுவ வீரர்களுக்குத் தேவை, யாருடைய கண்ணீரும் வெற்றுப் புகழ்ச்சியும் அல்ல. போதுமான ஊதியம், ஆரோக்கியமான உணவு, மருத்துவ வசதி, உத்தரவாதமுள்ள எதிர்காலம்.

Senthil Arumugam
நெல்லை ஆட்சியர், கிராமங்களுக்குச் செல்லாத கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். வழக்கம்போல ஆட்சியரை எதிர்த்துப் போராட்டம் நடத்தாமல் வி.ஏ.ஓ-க்கள் தங்கள் கடமையைச் செய்து, மக்களுக்கு உதவ வேண்டும். அலுவல் நிமித்தமாக அலுவலகத்திலிருந்து வெளியே சென்றால் திரும்பி வரும் நேரத்தை அலுவலகத் தகவல் பலகையில் குறித்துவைத்துச் செல்ல வேண்டும். அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களின் அலுவலகத்திலும் வி.ஏ.ஓ-க்களின்  தொடர்பு எண்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.

Manikandan marimuthu
மதுரை வந்ததுக்கு 2, திருப்பூர் வந்ததுக்கு 2, கடைசியா ஈரோடு வந்ததற்கு 1. ஆக மொத்தம் 5.

Vaa manikandan
ஐந்தாம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு என்பது குழந்தைகளின் உளவியல் மீது நிகழ்த்தப்படும் வன்முறை. பள்ளியிலேயே விடைத்தாள்களைத் திருத்தினாலும்கூடப் பெரும்பாலான பெற்றோர், தம் பிள்ளைகள்மீது அழுத்தம் செலுத்துவார்கள். இப்படியொரு திட்டத்தை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.

ஆஹான்

amuduarattai
யாருக்கும் ஆதரவு இல்லை. தேர்தலிலும் நிற்கவில்லை! - ரஜினி.

தேர்தலில் நின்றால் உங்களுக்கே ஆதரவு இருக்காதுபோல!

senthilvel_1969

தேர்தல் வரைக்கும் “திராவிட இயக்கங்கள் தமிழகத்தைச் சீரழித்துவிட்டன” என ஒப்பாரி வைக்க வேண்டியது. தேர்தல் நேரத்தில் எந்தத் திராவிடக் கட்சியையாவது பிடித்து ஓட்டைப் பிடிக்கலாம் என வழி தேடுவது.

HAJAMYDEENNKS
கடன் வச்சுட்டு லைஃப்ல செட்டில் ஆனது விஜய் மல்லையா மட்டும்தான்!

GuruLeaks
நாட்டில் ராணுவ வீரர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால்தான் பாதுகாக்க முடியும் - தமிழிசை செளந்தரராஜன்

# ஆக, பிரதமர் ராகுல்காந்தி பதவி விலக வேண்டும்

ஆஹான்

Vicky_stirring
மக்கள் மனதைக் கவர்ந்தவர், சதிகளைக் கடந்தவர் முதல்வர் பழனிசாமி - தமிழிசை.

# கூட ரெண்டு சீட் சேர்த்துகொடுத்தா, வாழும் காமராஜர்ன்னு சொல்வீங்க போல?!

Jancy2330

நீட் தேர்வு எழுத வர்றவனை தீவிரவாதி மாதிரி சோதிப்போம். தீவிரவாதியை ‘நீட்டா’ உள்ள விடுவோம். # PulwamaAttack

amuduarattai

சட்டமன்றத் தேர்தல்தான் இலக்கு! -ரஜினி

அப்படியே எந்த வருடம் நடக்கப்போற சட்டமன்றத் தேர்தல் என்பதையும் சொல்லிருங்க தலைவரே!

ஆஹான்

Annaiinpillai
தேர்தலுக்குப்பின் நாடு முன்னேறிடும்னு நினைக்கிறதும் கல்யாணத்திற்குப்பின் வாழ்க்கையே சந்தோசமா மாறிடும்னு நினைக்கிறதும் ‘நினப்புதான் பொழப்ப கெடுக்கும்’ என்பதற்குச் சிறந்த உதாரணம்!

amuduarattai
இந்தியாவில் சுகாதாரம், கல்விக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை - அமர்த்யா சென்.

# சிலைகளுக்கும், பசுக்களுக்கும்தான் முக்கியத்துவம் தரப்படுகிறதே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism