Published:Updated:

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: பணம் பறிக்கிறதா போலீஸ்?

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: பணம் பறிக்கிறதா போலீஸ்?
பிரீமியம் ஸ்டோரி
பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: பணம் பறிக்கிறதா போலீஸ்?

ஃபாலோஅப்

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: பணம் பறிக்கிறதா போலீஸ்?

ஃபாலோஅப்

Published:Updated:
பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: பணம் பறிக்கிறதா போலீஸ்?
பிரீமியம் ஸ்டோரி
பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: பணம் பறிக்கிறதா போலீஸ்?

பொள்ளாச்சியில் ஏராளமான பெண்களை ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்து மிரட்டிப் பணம் பறித்துவந்த விவகாரத்தில் போலீஸாரின் நடவடிக்கைகள் குறித்து சமூக ஆர்வலர்கள் சந்தேகங்களைக் கிளப்புகிறார்கள்.

பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் புகார் அளித்ததையடுத்து, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது காவலில் உள்ளனர். தவிர, புகார் கொடுத்த பெண்ணின் அண்ணனைத் தாக்கியதாக வேறு நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.  இந்த கும்பலால் பொள்ளாச்சி பகுதியில் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வரும் நிலையில், ‘ஒரு பெண்ணைத் தவிர வேறு யாரும் புகார் தரவில்லை’ என்கிறது போலீஸ். ஆனால், ‘புகார் தந்த பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீஸ் பகிரங்கப்படுத்தி விட்டது. அதனால்தான், மற்ற பெண்கள் புகார் தர முன்வரவில்லை. புகார் கொடுக்க நினைக்கும் பெண்களை மறைமுகமாக மிரட்டவே போலீஸ் இப்படிச் செய்துள்ளது’ என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி அல்லது சைபர் க்ரைம் போலீஸார் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற எதிர்க் கட்சியினரின் கோரிக்கையும் கண்டுகொள்ளப்படவில்லை. ‘இந்த வழக்கின் விசாரணையை பெண் போலீஸ் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்ற ஜனநாயக மாதர் சங்கத்தினரின் கோரிக்கையும் கண்டுகொள்ளப்படவில்லை. கைதான நால்வரையும் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கவும் இல்லை. இந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கி வரும் நிலையில் ஐ.ஜி பெரியய்யா, கோவை எஸ்.பி பாண்டியராஜன் என போலீஸ் உயரதிகாரிகள் பொள்ளாச்சிப் பக்கம் எட்டிப்பார்க்கவில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: பணம் பறிக்கிறதா போலீஸ்?

தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியானவுடன், இந்த விவகாரம் மேலும் சூடுபிடித்துள்ளது. #pollachisexualabuse என்ற ‘ஹேஷ்டேக்’ நாடு முழுவதும் வைரல் ஆகியுள்ளது. இந்நிலையில், ஆபாச வீடியோக்களில் உள்ள பணக்காரப் பெண்களிடமும், பாலியல் வன்முறையில் ஈடுபட்ட வேறு சில இளைஞர்களிடமும் முக்கிய போலீஸ் அதிகாரிகள் பேரம் பேசி கோடிக்கணக்கில் வசூல் செய்துள்ளதாக தகவல் பரவுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: பணம் பறிக்கிறதா போலீஸ்?

இதற்கிடையே பொள்ளாச்சி 34-வது வட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ‘பார்’ நாகராஜை, அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அ.தி.மு.க நீக்கியுள்ளது. தவிர, கோவை புறநகர் தி.மு.க பிரமுகரின் மகன் பெயரும் இந்த விவகாரத்தில் அடிபடுகிறது. இந்த விவகாரம் பற்றி போலீஸ் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ‘‘பொள்ளாச்சி டி.எஸ்.பி-யான ஜெயராம் மீது ஏற்கெனவே ஏராளமான புகார்கள் உள்ளன. கோவையில் உதவி ஆணையராக அவர் இருந்தபோது, மாணவர் போராட்டத்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, ஒரு பெண் எஸ்.ஐ–யிடம் அவர் சில்மிஷம் செய்த வீடியோ இன்றும் இணையத்தில் உள்ளது. டாஸ்மாக் போராட்டத்தில் ஒரு பெண்ணை கோவை எஸ்.பி பாண்டியராஜன் அறைந்தது ஊரறிந்த சேதி. இவர்கள் இருவரும் சேர்ந்து இந்த வழக்கை விசாரித்தால், அது எப்படி இருக்கும்? ஐ.ஜி–யும் ஆளும்கட்சியினர் சம்பந்தப்பட்டிருப்பதால், கண்டுகொள்ளாமல் அமைதிகாக்கிறார். இவர்கள் சசிகலாவிடம் நெருக்கமாக இருந்தவர்கள். வருவாய் அதிகமுள்ள கோவையில் இவர்கள் அனைவருக்கும் ‘போஸ்டிங்’ போட்டுக்கொடுத்ததன் மூலமாக சசிகலா குடும்பத்தினரிடமும் தங்களுக்கு உள்ள ‘மறைமுக நெருக்கத்தை’ ஆளும்கட்சியின் முக்கியப் புள்ளிகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்’’ என்றனர்.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி பாண்டியராஜன், “கைது செய்யப்பட்ட நான்கு பேரும் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட உள்ளனர்” என்றார்.

 - நமது நிருபர்