Published:Updated:

மிரட்டல்கள் பலிக்காது!

மிரட்டல்கள் பலிக்காது!
பிரீமியம் ஸ்டோரி
மிரட்டல்கள் பலிக்காது!

மிரட்டல்கள் பலிக்காது!

மிரட்டல்கள் பலிக்காது!

மிரட்டல்கள் பலிக்காது!

Published:Updated:
மிரட்டல்கள் பலிக்காது!
பிரீமியம் ஸ்டோரி
மிரட்டல்கள் பலிக்காது!

ந்தியாவில் ஒருமணி நேரத்துக்கு சராசரியாக மூன்று பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாவதாகப்

மிரட்டல்கள் பலிக்காது!

புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், நிர்பயா விவகாரத்தில் நடைபெற்றதைப்போல எப்போதாவது ஒரு முறைதான் இந்தப் பிரச்னைகள் ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தைப் பெறுகின்றன.  பாலியல்ரீதியாக, தான் துன்புறுத்தப்பட்டதாக ஒரு பெண் புகார் கொடுத்தார் என்றால், நூறு பெண்கள் தங்களுக்கு நேர்ந்த அவமானத்தை வெளியே சொல்லாமல் நெஞ்சிலேயே புதைத்துவிடுகிறார்கள் என்பதே உண்மை.

பெண்களின் இந்த பலவீனத்தைத்தான் காமுகர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அதனால்தான் பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களையும், அடையாளங்களையும் முதல் தகவல் அறிக்கை, நீதிமன்றக் கோப்புகள், பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் மட்டுமல்லாமல் மின்னணு ஊடகங்களிலும் வெளியிடக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை மீறினால் இந்திய தண்டனைச் சட்டம் 228 ஏ பிரிவின் கீழ் 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கலாம்.

ஆனால் இந்த நடைமுறையைத் தமிழக அரசும் மதிக்கவில்லை; தமிழகக் காவல்துறை அதிகாரியும் மதிக்கவில்லை என்பது வெட்கத்துக்கும் வேதனைக்கும் உரியது. சில ஊடகங்களும் இந்த நடைமுறையை மீறியது மன்னிக்க முடியாததுதான். பொள்ளாச்சி விவகாரத்தில் புகார் அளித்த பெண்ணின் விவரங்களை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரே பொதுவெளியில் வெளியிட்டிருக்கிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசோ, தெரியாமல் செய்துவிட்டார் என்று காவல்துறைக் கண்காணிப்பாளரைக் காப்பாற்றுகிறது. மேலும், அவர் செய்த அதே தவற்றைத் தமிழக அரசும் செய்கிறது. பொள்ளாச்சி பாலியல் வன்முறை வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது தொடர்பான அரசாணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையும் கல்லூரியின் பெயரையும் வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு.

`பாதிக்கப்பட்ட மாணவி பற்றிய விவரங்களை வெளியிட்ட காவல்துறைக்  கண்காணிப்பாளர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த மாணவிக்கு ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும்' என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.  `வேலிக்கு ஓணான் சாட்சி' என்பதைப்போல் காவல்துறைக் கண்காணிப்பாளர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய தமிழக அரசே சட்டமீறலில் ஈடுபட்டால், யார் நடவடிக்கை எடுப்பது? இப்படி பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளங்களை வெளியிடுவது என்பதே வேறு யாரும் புகார் கொடுக்கக்கூடாது என்பதற்கான மறைமுக மிரட்டல்களே. ‘பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளங்களை வெளியிடக் கூடாது’ என்று காலங்கடந்து டி.ஜி.பி, காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார். எதிர்காலத்தில் காவல்துறையினர் பொறுப்புணர்ந்து நடந்துகொள்வார்கள் என்று நம்புவோம்.

எத்தகைய சூழ்ச்சிகள் நடந்தாலும் எப்படிப்பட்ட அரசியல் செல்வாக்கு இருந்தாலும் பாதிக்கப்பட்ட பெண்களின் பின்னால் இன்று ஒட்டுமொத்தத் தமிழகமும் இருக்கிறது என்பதை அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் மறந்துவிட வேண்டாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!