
twitter.com/shivaas_twitz
பஸ்ஸில், சில்லறையை அப்புறம் தர்றேன்னு கண்டக்டர் சொன்னவுடனே, ஒரு வடிவேலு நமக்குள் புகுந்து விடுகிறார்..!
twitter.com/iam_Saranallu
நம்மகூட படிச்சவங்க எல்லாரும் டாக்டர், என்ஜினியர் ஆகியாட்டாங்கனு சொல்லாம எல்லாரும் கல்யாணம் பண்ணி இரண்டு குழந்தைக்கு அப்பாவா கிட்டாங்களேனு கவலைப் படுறவங்கதான் 90’s கிட்ஸ்!!
twitter.com/ksksfi
எந்த சேட்டிலைட்டை சுட்டுத் தொலைஞ்சிங்க? சுட்டி டீவி தெரிய மாட்டேங்குதுனு பக்கத்து வீட்டுப் பய அழுதுட்டு கிடக்கான்...
twitter.com/yugarajesh2
‘தமிழில் கிரிக்கெட் கமெண்ட்ரி வராதா?’ என்று ஏங்கிய பசுமையான நினைவுகளை, RJ பாலாஜி தனது தமிழ் கமெண்ட்ரி மூலம் குழிதோண்டிப் புதைத்துக்கொண்டிருக்கிறார்.
twitter.com/Thaadikkaran
சொல்ல வேண்டிய அட்வைஸ் எல்லாம் சொல்லிட்டு கடைசில, ‘நான் சொன்னா கேட்கவா போறே?’ன்னு சொல்லி முடிப்பது அட்வைசின் பைனல் டச்..!!


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
twitter.com/manipmp
மனைவி கோபப்பட்டால் கண்கள் சிவப்பதில்லை... ஆனால் தோசை கருகிவிடுகிறது.
twitter.com/kaviintamizh
நடிகர்கள் பிரசாரத்துக்கு போனால் கூட்டம் வரும்ங்கிற மூடநம்பிக்கையை உடைத்த பெருமை கமல்ஹாசனையே சேரும்.
twitter.com/Kozhiyaar
நண்பன் கிட்ட ஒரு பிரச்னையைச் சொன்னால் பிரச்னை தீருதோ இல்லையோ, அவன் நம்மைக் கலாய்க்கிறதில பிரச்னை மறந்து போய்டும்!!
twitter.com/Annaiinpillai
தேர்தல் காலங்களில் விபத்து நடப்பதும் அதை வேட்பாளர்களே காப்பாற்றுவதும் பறக்கும் படைக்கே டஃப் கொடுக்குற மொமன்ட்தான்!
twitter.com/hai2pandian
சந்தேகம் வீட்டுக்கு ஆகாது. மறதி நாட்டுக்கு ஆகாது.
facebook.com/iam.suriyaraj
ஆர்.சி.பி டு சி.எஸ்.கே : டேய், மொத மேட்ச்ல நீங்க எங்களை அடிச்சதுக்கு அப்புறம், எவன் அடிச்சாலும் தாங்குற தெம்பு வந்துடுச்சுடா எங்க உடம்புல!
twitter.com/SKP KARUNA
ஹர்பஜன் சிங்கை ஏன் டிராப் பண்ணிட்டாங்க? நாலடியார் செய்யுள் எதையும் தப்பா சொல்லிட்டாராமா?
twitter.com/thalabathe
கடைசி வரைக்கும் இவன் தோக்க மாட்டான்னு கோடிப் பேர்களை நம்ப வச்சவன நீங்க எப்டி கூப்பிடுவீங்க?
நாங்க தலைவன்னு கூப்பிடுவோம்.
twitter.com/kumarfaculty
தீபாவின் ஒரு ஓட்டும் அவர் தூங்காமல் இருந்தால்தான் கிடைக்கும்...!!!

facebook.com/kumar.duraiswamy
தன்னுடன் இல்லாத காலகட்டத்தில் தன் மனைவியான சீதாப்பிராட்டியாரின் புனிதத்தன்மையை சோதிக்கும் உரிமையைக் கொடுத்த இதிகாசம், தான் உடன் இல்லாத காலத்தில் ஸ்ரீராமனின் புனிதத்தை சோதிக்கும் உரிமையை சீதாப்பிராட்டியருக்கும் கொடுத்திருந்தால் இன்று அபிராமியைக் கூறுபோட்டு கிழித்துக் குதறிய அளவிற்கு பாலியல் குற்றங்களை இழைத்த ஒவ்வொரு ஆணையும் கிழித்திருக்கும்.
twitter.com/harbhajan_singh
ஒரு நாள் ஒரு டீமை ஏழு டீம் துரத்த அந்த டீம் தடய தாண்டி @msdhoni புடிச்சி தொங்க, அந்த #தல மேட்சுல அடி வெளுக்க, என்னடா இழவு வாழ்க்கன்னு மேல பாத்தா @ipl கப்பு கீழ @CSKFansOfficial ஏழு டீமும் கப்பாவது மேட்சாவதுன்னு,கும்புடு போட்டு ஆஹானு சொன்னா.அது @ChennaiIPL
facebook.com/Sriramsathiyamoorthy
5 செ.மீ கூட நிழல் இல்லாத சாலையின் பெயர் 5வது நிழற்சாலை
twitter.com/meenammakayal_
திறமையானவர்கள் இருந்தும் ஏன் ஆர்சிபி ஜெயிக்க மாட்டேங்குதுன்னா..
எல்லாருமே இன்ஜினியரா இருந்தா ஒரு வீட்ட கட்டி முடிக்கவே முடியாது.. கொத்தனார் சித்தாள்லாம் வேணும்...
facebook.com/kavitha.bharathy
மோடியைப் புறக்கணிப்போம்..
நூறு இயக்குநர்கள் அறைகூவல்
அவ்வளவு பெரிய நடிகரை
இயக்குநர்கள் புறக்கணிக்கலாமா?
- சைபர் ஸ்பைடர்