Published:Updated:

கடல் சீற்றத்தால் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் ஊர் திரும்புவதில் தாமதம்

கடல் சீற்றத்தால் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் ஊர் திரும்புவதில் தாமதம்
கடல் சீற்றத்தால் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் ஊர் திரும்புவதில் தாமதம்
கடல் சீற்றத்தால் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் ஊர் திரும்புவதில் தாமதம்

ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பாட்ட காரைக்கால் மீனவர்கள் கடல் சீற்றத்தால் ஊர் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது காரைக்கால் மீனவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2 நாட்களாக ராமேஸ்வரம் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் கடலும் கொந்தளிப்பாக உள்ளது. இதையடுத்து இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் ஊர் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் 5ஆம் தேதி நாகப்பட்டினம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற காரைக்கால் மீனவர்கள் 26 பேரை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றனர். ஊர்காவல்துறை நீதிமன்ற உத்தரவுப்படி இவர்கள் அனைவரும் யாழ்பானம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இதையடுத்து மீனவர்களை விடுவிக்க கோரி காரைக்கால் மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் மத்திய அரசு இலங்கை அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையினை தொடர்ந்து 26 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி நேற்று ஊர்காவல்துறை நீதிமன்றம் 26 மீனவர்களையும் விடுவித்து உத்தரவிட்டது.

##~~##
விடுவிக்கப்பட்ட மீனவர்களை இலங்கை கடல் எல்லையில் இருந்து அழைத்து வர மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படையினர் இன்று செல்வதாக இருந்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக ராமேஸ்வரம் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் கடல் கொந்தளிப்புடன் உள்ளது.
இதனால் மீனவர்களை மீட்டுவருவதில் சிரமம் ஏற்படும் என்பதால் கடலோர காவல் படையினர் இன்று செல்லவில்லை. நாளை காற்றின் வேகம் குறைந்திருந்தால், விடுவிக்கப்பட்ட மீனவர்களை அழைத்து வர இந்திய கடலோர காவல் படையின் கப்பல் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது காரைக்கால் மீனவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரா.மோகன்