Published:Updated:

காரைக்கால் மீனவர்கள் 26 பேர் ஊர் திரும்பினர்!

காரைக்கால் மீனவர்கள் 26 பேர் ஊர் திரும்பினர்!
காரைக்கால் மீனவர்கள் 26 பேர் ஊர் திரும்பினர்!

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் 26 பேர் இன்று காலை காரைக்கால் திரும்பினர்.

கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

##~~##
இவர்களுக்கு நான்கு முறை காவல் நீட்டிப்பு வழங்கி ஊர்க் காவல்துறை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிடப்பட்டது.
அவர்கள் அனைவரும் இன்று காலை காரைக்கால் திரும்பினர். அவர்களை உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.