Published:Updated:

நிறுத்தப்பட்ட 240 கோடி ரூபாய் திட்டம்... கொதிப்பில் தோப்பு வெங்கடாசலம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நிறுத்தப்பட்ட 240 கோடி ரூபாய் திட்டம்... கொதிப்பில் தோப்பு வெங்கடாசலம்!
நிறுத்தப்பட்ட 240 கோடி ரூபாய் திட்டம்... கொதிப்பில் தோப்பு வெங்கடாசலம்!

நிறுத்தப்பட்ட 240 கோடி ரூபாய் திட்டம்... கொதிப்பில் தோப்பு வெங்கடாசலம்!

பிரீமியம் ஸ்டோரி

ரபரப்புக்குப் பெயர்போன பெருந்துறை எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம், தன் மனைவி, மகன், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோருடன், ஈரோடு கலெக்டர் அலுவலகம் சென்று மனு அளித்து, ஆட்சியாளர்களைக் கதிகலங்க வைத்தார். ‘கொடிவேரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை’ விரைந்து செயல்படுத்த வேண்டும்  என்பதுதான் அவர் வைத்த கோரிக்கை.

2015-ல் அமைச்சராக இருந்த தோப்பு வெங்கடாசலம், தன் தொகுதிக்காக இந்தக் கோரிக்கையை வைக்க, பேரவையில் 110 விதியின் கீழ், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, இத்திட்டத்தை அறிவித்தார். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 240 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2018 டிசம்பர் மாதத்தில் பணிகள் தொடங்கப்பட்டன. சுமார் 60 சதவிகிதத் திட்டப்பணிகள் முடிந்திருக்கும் சூழலில், கொடிவேரி அணையிலிருந்து தண்ணீர் எடுத்தால், அந்த அணை நீரை நம்பியுள்ள தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி,  விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே, அந்தத் திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

குடிநீர்த் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்  தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன சங்கத் தலைவர் சுபி.தளபதியிடம் பேசினோம். “கொடிவேரி அணையில் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்காக, கிணறு அமைத்து நீரேற்றம் செய்தால், எங்களுடைய பாசன வாய்க்காலுக்கு முழுமையாகத் தண்ணீர் கிடைக்காது. அணையின் கீழே, பவானி ஆற்றில் குடிநீர்த் திட்டத்தைச் செயல்படுத்த எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. அணைக்கட்டிலிருந்து 15 கி.மீ தொலைவில் புளியம்பட்டியில் இருந்து கோபிசெட்டிபாளையத்துக்குத் தண்ணீர் எடுக்கப்படுகிறது. அங்கிருந்து 10 கி.மீ தாண்டி, கள்ளிப்பட்டியிலிருந்து குன்னத்தூர், செங்கப்பள்ளி, கெட்டிச்செவியூர் போன்ற பகுதிகளுக்குத் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இப்படி அணைக்குக் கீழே நான்கு பெரிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மற்றும் சுமார் 50 பேரூராட்சி, சிற்றூராட்சிகளுக்குத் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இந்தத் திட்டங்களுக்கெல்லாம் தண்ணீர் கிடைத்து வருகையில், புதிய திட்டம் அணைக்குக் கீழே அமையப் பெற்றால் தண்ணீர் கிடைக்காமலா போய்விடும்?

நிறுத்தப்பட்ட 240 கோடி ரூபாய் திட்டம்... கொதிப்பில் தோப்பு வெங்கடாசலம்!

2015-ம் ஆண்டில் தோப்பு வெங்கடாசலம் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தபோது, ‘காவிரியிலிருந்து சிப்காட்டுக்கு எடுக்கப்படும் இரண்டு கோடி லிட்டர் தண்ணீரை, பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, சுத்திகரித்துவிடுவோம். அதன்பிறகு சிப்காட்டுக்கு தினசரி 50 லட்சம் லிட்டர் தண்ணீரே போதுமானது. மீதமுள்ள ஒன்றரை கோடி லிட்டர் தண்ணீரைப் பெருந்துறை சுற்றுவட்டாரக் குடிநீர்த் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்வோம்’ என்றார். ஆனால், அவர் சொன்னபடி பொது சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கவில்லை. கொடிவேரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை, பவானி ஆற்றிலிருந்து நேரடியாக எடுத்திருந்தால் 20 கிலோ மீட்டரில் 100 கோடி ரூபாய் செலவிலேயே முடித்திருக்கலாம். ஆனால், 45 கிலோ மீட்டர் சுற்றி அமைப்பதால் செலவும் அதிகரித்துள்ளது” என்றார்.

பெருந்துறை எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலத்திடம் பேசினோம். “ஈரோடு மாவட்டத்தில் எல்லா தொகுதிகளிலும் ஆற்றுப்பாசனமோ வாய்க்கால் பாசனமோ இருக்கிறது.  ஆனால், எந்த வகையானப் பாசன வசதிகளுமே இல்லாத ஒரு பெரிய தொகுதியாகப் பெருந்துறை இருக்கிறது. ஆசியக் கண்டத்திலேயே மிகப் பெரிய சிப்காட் தொழிற்சாலைப் பகுதிக்கு குடிநீர்த் திட்டங்கள் மூலமாக மட்டுமே முழுமையாகத் தண்ணீர்த் தேவையைப் பூர்த்திசெய்ய முடியவில்லை.

நிறுத்தப்பட்ட 240 கோடி ரூபாய் திட்டம்... கொதிப்பில் தோப்பு வெங்கடாசலம்!

ஜெயலலிதா அறிவித்த கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தைச் செயல்படுத்த, பலகட்டப் போராட்டத்துக்குப் பிறகே இப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நிதி ஒதுக்கீடுசெய்தார். கிட்டத்தட்ட எட்டு மாதங்களாக இந்தப் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், ‘இத்திட்டத்தால் எங்களுடைய பாசனம் பாதிக்கப்படும்’ என ஒரு மனுகூட இதுவரை எந்தஒரு விவசாயி யும் கொடுக்கவில்லை. குடிநீர்த் திட்டப்பணி இறுதிக் கட்டத்தை நெருங்கும்போதுதான் பிரச்னையை ஏற்படுத்துகிறார்கள்.

இந்தப் பிரச்னை சம்பந்தமாக அமைக்கப்பட்டுள்ள குழு, விரைவில் அதன் அறிக்கையைக் கொடுக்கும். இந்தப் பிரச்னை தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையனிடம் பேசியிருக்கிறேன். பொதுமக்களுடன் சென்று கலெக்டரிடமும் மனு கொடுத்திருக்கிறேன். நல்லபடியாகத் திட்டம் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையிருக்கிறது” என்றார்.

இந்தக் குடிநீர்த் திட்டத்துக்கு இடையூறாக விவசாயிகள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் அதன் பின்னணியில் உட்கட்சி அரசியல் இருப்பதாகச் சொல்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். தொடர்ந்து, “240 கோடி ரூபாய் மதிப்பிலான அந்தத் திட்ட தொடக்க விழாவுக்கு, மரியாதைக் குக்கூட அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோரைத் தோப்பு வெங்கடாசலம் அழைக்கவில்லை. கலெக்டர் தலைமையிலேயே இத்திட்ட தொடக்க விழாவைத் தோப்பு முடித்துக் கொண்டார். அப்படியிருக்க, தன் னுடைய கோபி தொகுதியில் இருக்கும் கொடிவேரி அணையிலிருந்து தண்ணீரை எடுக்க செங்கோட்டையன் விட்டுவிடுவாரா? தோப்பு வெங்கடா சலத்தைப் பழிவாங்க கருப்பணனும் செங்கோட்டையனுடன் கைகோத்துக் கொண்டனர்.

திட்டத்தை நிறைவேற்ற ஆளும் கட்சி எம்.எல்.ஏ ஒருவரே கலெக்டரைச் சந்தித்து மனு அளிக்கிறார் என்றால், உட்கட்சி அரசியலைப்  பூதாகரமாக்கி அழுத்தம் கொடுக்கத்தான்” என்கின்றனர் அவர்கள்.

- நவீன் இளங்கோவன்
படங்கள்: ரமேஷ் கந்தசாமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு