Election bannerElection banner
Published:Updated:

`ஆதாரம் கிடைத்தவுடன் நடவடிக்கைதான்!'- தமிமுன் அன்சாரியைக் குறிவைக்கும் கொறடா ராஜேந்திரன்

`ஆதாரம் கிடைத்தவுடன் நடவடிக்கைதான்!'- தமிமுன் அன்சாரியைக் குறிவைக்கும் கொறடா ராஜேந்திரன்
`ஆதாரம் கிடைத்தவுடன் நடவடிக்கைதான்!'- தமிமுன் அன்சாரியைக் குறிவைக்கும் கொறடா ராஜேந்திரன்

`ஆதாரம் கிடைத்தவுடன் நடவடிக்கைதான்!'- தமிமுன் அன்சாரியைக் குறிவைக்கும் கொறடா ராஜேந்திரன்

"தமிமுன் அன்சாரி, அரசுக்கு எதிராகச் செயல்பட்டார் எனக் கூறுவதற்கான ஆதாரங்கள் இல்லை. ஆதாரங்கள் கிடைத்தவுடன் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரன் அதிரடியாகக் கூறினார். 

                                            அரியலூர்பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில், அரவக்குறிச்சியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் பணியாற்றுவதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரன், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் செந்தில்நாதன் வெற்றிபெறக் கடுமையாக உழைக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரன், "அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலிருந்து 1000 நபர்கள், அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் செந்தில்நாதனை ஆதரித்து பிரசாரம் செய்யச் செல்கிறோம்" என்றார். 

அதோடு, இரட்டை இலையில் நின்று வெற்றிபெற்று, அரசுக்கு எதிராகச் செயல்படுவதாகக் கூறப்படும் தமிமுன் அன்சாரி மற்றும் கருணாஸ் ஆகியோர்மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்துக் கேட்டபோது, "இப்போதைக்கு அந்த நடவடிக்கை இல்லை. அதை யோசித்துதான், வரும் நாள்களில் அவர்கள்  எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதைப் பொறுத்துதான் நடவடிக்கை இருக்கும். தற்போது, தகுதிநீக்கம் செய்யப் பரிந்துரைசெய்துள்ள மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள், கழகத்திற்கு எதிராக எவ்வாறு செயல்பட்டார்கள், எங்களது துரோகிகளுடன் சேர்ந்து எவ்வாறு பணியாற்றினார்கள் என்பதை ஆதாரபூர்வமாகப் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் வந்த செய்திகளை வைத்து, ஆதாரத்தை சபாநாயகரிடம் தந்துள்ளேன்.

அவர்கள் இதற்கு விளக்கம் அளிக்கும் பட்சத்தில், எவ்வகையான முடிவையும் எடுக்க சபாநாயகருக்கு உரிமை உண்டு. இந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் எங்களிடமிருந்து எப்போது டி.டி.வி.தினகரன் பிரிந்து போனாரோ, அப்போதிருந்தே எங்களுக்கு எதிர்ப்பாகச் செயல்பட்டுவந்துள்ளார்கள். ஆனால் தமிமுன் அன்சாரி, நடைபெற்ற தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிராகச் செயல்பட்டார்கள் எனக் கூறுகிறார்கள். எங்களிடம் ஆதாரங்கள் இல்லை. ஆதாரங்கள் வந்தவுடன் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு