Published:Updated:

`5 ஆண்டுகளில் மட்டும் 157 ஆணவக் கொலைகள்!' - கருத்தரங்கில் அதிர்ச்சித் தகவல்

பத்திரிகையாளர்களுக்கான மனித உரிமைகள் குறித்த பயிற்சிக் கருத்தரங்கம் மதுரை எவிடன்ஸ் அமைப்பு சார்பில் ஒரு தனியார் ஹோட்டலில் நடத்தப்பட்டது. மூவர் உரையும் கருத்தாடல்களும் இடம்பெற்றன. 

முதலில் பேச வந்த மூத்த வழக்கறிஞர் ஹென்றி திபேன், ``பத்திரிகையைப் பார்த்து வழக்குகளையும் சாட்சியங்களையும் பதிவுசெய்யும் நிலை தற்போது உள்ளது. சட்டப் பாதுகாப்பு, மருத்துவப் பாதுகாப்பு, சமூகப் பாதுபாப்பு பத்திரிகையாளர்களுக்கு அவசியம். கட்டுரையாளர்களுக்கு ஒன்று சொல்கிறேன். உரிமை சார்ந்த கட்டுரைகளிலும், அதன் சூழல்களிலும் ஒருவரது தனிப்பட்ட வாழ்வைச் செருகாதீர். வாழ்வுரிமை, சமத்துவ உரிமை, சுதந்திர உரிமை, தனிநபர் மாண்பு உரிமை எல்லாமே மனித உரிமைகள். இவை மீறப்படும்போது, மனித உரிமைக் காவலர்கள் எதிர்ப்பார்கள்.

ஆனால், இவர்கள் மீதான தாக்குதல்கள் தற்காலத்தில் அதிகமாகி வருகின்றது. தனியாகவும், குழுவாகவும், அமைப்பாகவும் மனித உரிமைக் காப்பாளர்கள் இயங்கலாம். பத்திரிகையாளர்களும் மனித உரிமைக் காவலர்களாக இயங்க முடியும். தகவலைத் தேடவும், தகவலைப் பெறவும், தகவலை அறிவிக்கவும் மனித உரிமைக் காப்பாளருக்கு முழுச்சுதந்திரம் உண்டு என சட்டப்புத்தகம் சொல்கிறது. சமீபசூழல்களில் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன. இவை மேலும் அதிகரிக்கும். எங்களைப் போன்ற மனித உரிமைக் காப்பாளர்கள் இருப்போமா எனத் தெரியவில்லை” என்றார். 

`5 ஆண்டுகளில் மட்டும் 157 ஆணவக் கொலைகள்!' -  கருத்தரங்கில் அதிர்ச்சித் தகவல்

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் மூத்த வழக்கறிஞர் லஜபதிராய் தலித் பாதுகாப்பு பற்றி பேசினார். ``தாழ்த்தப்பட்டோருக்கும் பழங்குடியினருக்குமான சட்டங்களை முறையாகச் செயல்படுத்தினாலே, அவர்களுக்கு நீதி கிடைக்கத் தொடங்கிவிடும். கலைஞர் காலத்தில், கோயில்களின் அறங்காவலர் குழுவில் மூன்றில் ஒரு பங்கு தாழ்த்தப்பட்டோருக்கு என இடஒதுக்கீட்டைக் கொண்டுவந்தார். ஆனால், இப்போது அது செயல்பாட்டில் இல்லாமலேயே போனது. மொத்தமுள்ள 750 வகை தீண்டாமைகளில் கோயில்களில் மட்டுமே 40 வகையான தீண்டாமை இன்றும் உள்ளது. எல்லாமே செய்திதான். ஆனால், தலித்துடையது செய்தியல்ல, நீதி” என்றார்.

ஆணவக்கொலை குறித்து எவிடன்ஸ் செயல் இயக்குநர் கதிர் பேசினார். ``தலித் மக்களைத் தேர் வடத்தில் தேங்காய் உடைக்கக்கூட அனுமதிக்காத சமூகத்தில்தான் நாம்  வாழ்ந்து வருகிறோம். தலித் மக்கள் மீது தாக்குதல்கள் நடப்பதைச் சாதாரண ஒன்றாக பொதுசமூகத்தினர் கடந்து செல்ல ஆரம்பித்துவிட்டனர். 5 ஆண்டுகளில் மட்டும் 157 ஆணவக் கொலைகள் நடந்துள்ளன. ஸ்ரீபிரியா என்ற பெண் பொறியாளர் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் எனக்கு  மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அந்தப் பெண்ணின் தந்தை சொன்ன வாக்குமூலம்தான். ஒரு அன்பான தந்தையாக  20 வருடங்கள் வளர்த்த பெண்ணைக் கொன்று, `எனக்கு சாமியை விடச் சாதிதான் முக்கியம்' என்று சொல்ல வைக்கிறது இந்த சாதிய மனப்பான்மை. வட இந்தியாவைக் காட்டிலும் தென்னிந்தியாவில்தான் ஆணவக்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தலித் மக்கள் மீதான கொடுமைகளுக்குக்கூட நீதி கிடைத்துவிடலாம். ஆனால், ஆணவக்கொலைகளுக்கு நீதி கிடைப்பது அரிதாகிவிட்டது. காரணம், உறவினர்களே கொலை செய்கின்றனர். வழக்குகள் நியாயத்தோடும், உறுதியோடும் நடப்பதில்லை. இத்தனை பத்திரிகையாளர்கள் இருக்கின்றீர்கள். நடுநிலை.. நடுநிலை என்கிறீர்கள். நியாயத்தின் பக்கம் நிற்பதே உண்மையான நடுநிலை'' என்றார்.