Published:Updated:

வெள்ளத்தில் மக்களைக் காப்பாற்றியவர்களுக்கு பரிசு!- போலீஸ் பணியில் 177 மீனவர்கள்

வெள்ளத்தில் மக்களைக் காப்பாற்றியவர்களுக்கு பரிசு!- போலீஸ் பணியில் 177 மீனவர்கள்
வெள்ளத்தில் மக்களைக் காப்பாற்றியவர்களுக்கு பரிசு!- போலீஸ் பணியில் 177 மீனவர்கள்

கேரள வெள்ளத்தின்போது, திறமையாகச் செயல்பட்டு  உயிர்களைக் காப்பாற்றிய 177 மீனவர்கள் கேரள போலீஸ் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அதாவது, கேரள கடலோரப் பாதுகாப்பு போலீஸ் படையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். 

வெள்ளத்தில் மக்களைக் காப்பாற்றியவர்களுக்கு பரிசு!- போலீஸ் பணியில் 177 மீனவர்கள்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கேரளாவில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். முப்படைகள், பேரிடர் மீட்புக் குழுவினருடன் இணைந்து மீனவர்களும் மீட்புப்பணியில் முக்கியப் பங்காற்றினர். தங்கள் படகுகளைக் கொண்டு மீனவர்கள் ஏராளமான மக்களை மீட்டனர். மீட்புப்படையினர் செல்ல முடியாத இடங்களுக்குக்கூட மீனவர்கள் சென்று ஆயிரக்கணக்கான மக்களை மீட்டனர். மீனவர்கள் செய்த  சேவைக்கு நன்றிக்கடனாக  அவர்களுக்கு தற்போது கேரள அரசு பரிசு வழங்கியுள்ளது. வெள்ளத்தின்போது, மீட்புப்பணியில் சிறப்பாக செயல்பட்ட 177 மீனவர்கள் கேரள கடலோர போலீஸ் படையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதில், 5 பெண்களும் அடங்குவர். 

இந்தப் பணிக்கு 3,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். தகுதியின் அடிப்படையில் 200 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில், வெள்ளத்தில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. பல்வேறு தகுதிப் போட்டிகளும் நடத்தப்பட்டன. 50 மீட்டர் தொலைவுக்கு தண்ணீரில் ஒருவரைக் காப்பாற்றிக் கொண்டு செல்வது, கடலில் 300 மீட்டர் தொலைவுக்கு நீந்துதல் போன்ற கடுமையான போட்டிகளுக்குப் பிறகே, இவர்கள் இந்தப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். 

வெள்ளத்தில் மக்களைக் காப்பாற்றியவர்களுக்கு பரிசு!- போலீஸ் பணியில் 177 மீனவர்கள்

திருச்சூரில் உள்ள போலீஸ் அகாடமியில் கடந்த 6 மாதங்களாகப் பயிற்சி பெற்று வந்தவர்களின் பாஸிங் அவுட் அணிவகுப்பில் கேரள முதலமைச்சர் பினராயி பங்கேற்றார். அப்போது, `மாநிலமே நெருக்கடியான தருணத்தில் இருந்தபோது உங்கள் உயிரைப் பற்றி கூடக் கவலைப்படாமல் மக்கள் பணியாற்றினீர்கள். உங்கள் சேவைக்கு அரசு அளிக்கும் பரிசு' என்றார். 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு