Published:Updated:

மீனவர்கள் 4 பேர் குடும்பத்துக்கு அதிமுக நிதியுதவி

விகடன் விமர்சனக்குழு

சென்னை, ஏப்.21,2011

'இலங்கை கடற்படையினரால் அண்மையில் கொல்லப்பட்ட 4 மீனவர்கள் குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது,' என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. ##~~##

இதுகுறித்து  அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த 2-ம் தேதி அன்று கடலில் மீன் பிடிக்கச் சென்ற ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர்கள் விக்டர், ஜான்பால், அந்தோணிராஜ் மற்றும் மாரிமுத்து ஆகியோர் இலங்கை கடற்படையால் கடத்திச் செல்லப்பட்டு கொல்லப்பட்டனர்.

இதையொட்டி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்து இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து இன்று ஜெயலலிதா சார்பாக, அ.தி.மு.க. நிர்வாகிகள் 4 மீனவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவர்களுடைய குடும்பத்தினரிடம் அ.தி.மு.க. சார்பில் தலா ரூ.1 லட்சத்தை வழங்கி ஆறுதல் கூறினார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.