Published:Updated:

சாதிவாரி கணக்கெடுப்பில் திருத்தம் தேவை: ராமதாஸ்

விகடன் விமர்சனக்குழு

சென்னை, மே 19,2011

சாதிவாரி கணக்கெடுப்பில் திருத்தம் தேவை: ராமதாஸ்

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார். ##~~##

எனினும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பு முறையில் திருத்தம் தேவை என்று அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டதற்காக பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.

எனினும், பொதுமக்கள் விரும்பினால் மட்டும் தங்கள் சாதியின் பெயரை கூறலாம் என்று அறிவிக்கப்பட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல.

ஒவ்வொரு சாதியிலும் எத்தனை பேர் உள்ளனர் என்பதைக் கண்டறிந்து அதற்கேற்றவாறு அவர்களுக்கான நலத்திட்டங்களை வகுக்க வேண்டும் என்ற உன்னத நோக்குடன்தான் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களது சாதியை தெரிவிப்பதை அரசு கட்டாயமாக்க வேண்டும்.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பெயரளவில் நடத்தப்படும் ஒன்றாக இருக்கக்கூடாது," என்று ராமதாஸ் கூறியுள்ளார்.