Published:Updated:

மெரீனாவில் தமிழினப் படுகொலை நினைவேந்தல்: மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!

Vikatan Correspondent
மெரீனாவில் தமிழினப் படுகொலை நினைவேந்தல்: மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!
மெரீனாவில் தமிழினப் படுகொலை நினைவேந்தல்: மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!

சென்னை: மெரீனா கடற்கரையில் தமிழினப் படுகொலை நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

மெரீனாவில் தமிழினப் படுகொலை நினைவேந்தல்: மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!

இலங்கையில் தமிழினப் படுகொலை இடம் பெற்றதனை நினைவு கூர்ந்து நினைவேந்தல் கூட்டம் சென்னை மெரீனாக் கடற்கரையில் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) மாலை 4.30 மணியளவில் ஆரம்பமானது. மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நினைவேந்தலில் பங்கேற்ற ஏராளமான தமிழ் மக்கள், மெழுகுவர்த்திகளை ஏந்தி படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மெரீனாவில் தமிழினப் படுகொலை நினைவேந்தல்: மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!

ஆறாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டத்தில், வைகோ, காசி ஆனந்தன், டிராட்ஸ்கி மருது, நடிகர் நாசர்  உட்பட சாதி, மதம், இனம், அரசியல் கட்சிகளை கடந்து பல தமிழ் அமைப்புகள், இயக்கங்கள் ,மாணவ மாணவிகள், பொது மக்கள், குழந்தைகள்  என்று குடும்பம் குடும்பமாக வந்து  கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் அதிகமானோர்  மெழுகுவர்த்தி ஏந்தி  போரில் உயிர் நீத்த மக்களுக்கும், போராளிகளுக்கும் வீர வணக்கம் செலுத்தி, 'தமிழரின் தாகம், தமிழீழ தாயகம்' போன்ற முழக்கங்களை தொடர்ந்து எழுப்பி, பாலச்சந்திரன் புகைப்படத்திற்கு ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினர்.

மெரீனாவில் தமிழினப் படுகொலை நினைவேந்தல்: மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், ''சமரசமில்லை... சமரசமில்லை... ஒரே தீர்வு ஈழ விடுதலை" போன்ற கோஷங்களை தொடர்ந்து பலமாக எழுப்பினர். விசேஷமாக பூக்களால் அலங்கரிக்கப்பட்ட இடத்தில் பெரிய தீபத்தை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஏற்றி வைத்தார்.

மெரீனாவில் தமிழினப் படுகொலை நினைவேந்தல்: மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!

தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், இனப்படுகொலை நடைபெற்றது தொடர்பாக இந்தியா, இலங்கை, அமெரிக்கா, இங்கிலாந்து மீது விசாரணை நடத்த வேண்டும் என என்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் வலியுறுத்தினார்.

மெரீனாவில் தமிழினப் படுகொலை நினைவேந்தல்: மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!

ஏராளமான தமிழின உணர்வாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், ஈழப்போரில் உயிர் நீத்த உறவுகளுக்கு தீப அஞ்சலியும், மலரஞ்சலியும் செய்யப்பட்டது. தொடர்ந்து, தமிழர்களின் பாரம்பரிய இசையான பறையை அடித்த இளைஞர்களால் மெரீனாக் கடற்கரையே அதிர்ந்தது.

 

மெரீனாவில் தமிழினப் படுகொலை நினைவேந்தல்: மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!

இதில் வைகோ உரையாற்றும்போது, ''எங்கள் இதயங்களில் இருந்து குருதி கொட்டுகிறது. ஈழப் போரின் இறுதி நாட்களில் பச்சிளம் பாலகர்கள், தாய்மார்கள், வயதானவர்கள் என்று எவ்வித பாகுபாடுமின்றி அனைவரும் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டார்கள். ஒரு இனத்தையே கருவறுப்பதற்காக நிகழ்ந்த படுகொலைகள் தான் இவை. ஐ.நா மனிதவுரிமைக் கவுன்சிலிலும் நீதி புதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

மெரீனாவில் தமிழினப் படுகொலை நினைவேந்தல்: மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!

எங்களுக்கு ஒரே தீர்வு தான் வேண்டும். அது சுதந்திர தமிழீழம் மட்டுமே. இனப்படுகொலைக்கு நியாயம் வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். முத்துக்குமார் உட்பட 19 பேர் ஈழத் தமிழர்களுக்காக மடிந்தும் நீதி கிடைக்கவில்லை" என்றார்.

செ.கிரிசாந், கு.முத்துராஜா (மாணவ பத்திரிகையாளர்)

படங்கள்: அருண் (மாணவ பத்திரிகையாளர்)